திங்கள், 16 செப்டம்பர், 2013

இதயத்துடிப்பின் அதிர்வால் கணனியை இயக்கும் Nymi Wrist Band (வீடியோ இணைப்பு)



இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கைபேசி மற்றும் கணனியை இயக்கும் கருவி கனடா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின்


தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கருவிக்கு "நைமி ரிஸ்ட் பேண்ட்” என்று பெயரிடப்பட்டுள்ளது.


இதில், இதயத் துடிப்பின் அதிர்வை அறிய "வோல்ட் மீட்டர்” மற்றும் "ஹார்ட் ஐடி” பொருத்தப்பட்டுள்ளது.


கனடாவின் பயோனிம் நிறுவனம், இக்கருவியின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.


இதைக் கொண்டு காரைத் திறப்பது, ஆன்-லைன் ஷாப்பிங்கில் பணம் செலுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய முடியும்.


இக்கருவியை கைபேசி மற்றும் கணனி பிற எலக்ட்ரானிக் கருவிகளின் கடவுச்சொல்லாகவும் பயன்படுத்தலாம்.


இதை அணிந்திருப்பவர் கருவிகளின் அருகில் சென்றால் தானாக இயங்கத் தொடங்கும்.

வேகம் மற்றும் அதிர்வுகள் வேறுபட்டவை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக