வியாழன், 5 செப்டம்பர், 2013

லண்டனில் மினி சூரியன்!




லண்டனில் மினி சூரியன் என்று வர்ணிக்கப்படும் கட்டிடம் ஒன்று மக்களுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது.

லண்டனில் கட்டப்பட்டு வரும் 37 மாடி அடுக்குமாடி கட்டிடத்தினாலே மக்கள் பெரும் துயரங்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு வாக்கி டாக்கி என பெயரிட்டுள்ளனர

முழுவதும் கண்ணாடிகளால் ஆன இந்த கட்டிடம் சூரிய ஒளியை நேரடியாக அதிகளவு பிரகாசிக்கின்றதாம்.

இதனால் மினி சூரியனை போன்றே உஷ்ணம் ஏற்பட்டு பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது.

இந்த கட்டிடத்திற்குப் பின்னால் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோர், பல பாதிப்புகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஒரு ஜாகுவார் காரின் கண்ணாடி, பேனல்கள் உள்ளிட்டவை இந்த கட்டட வெளிச்சப் பிரதிபலிப்பு பட்டு உருகிப் போய் விட்டதாம்.

மேலும் ஒரு நிறுவனத்தின் பெயிண்டிங்கையே இது உருக்கி விட்டதாம், கார்பெட்களும் எரிந்து போய் விட்டனவாம்.

இந்தக் கட்டிடத்திற்கு வாக்கி டாக்கி என்ற பெயர் பொருத்தமல்ல, மாறாக சூரிய வலை என்றுதான் பெயரிட வேண்டும் என்று சிலர் கோபத்துடன் கூறுகின்றனர்.

இந்த கட்டிட வெளிச்சப் பிரதிபலிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வாங்கித் தரப்பட்டுள்ளதாக லண்டன் மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க கட்டிட கட்டுமானக் குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

http://www.thamilan.lk/news.php?nid=38331

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக