செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆப்பிளின் ரகசியத்தை வெளியிடும் இளைஞர்!


ஆப்பிள் நிறுவனத்தின் ரகசியங்களை இளைஞர் ஒருவர் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆப்பிள் நிறுவனம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த ஒரு புதிய சாதனங்களையும் வெளியிடாமல் இருந்து வந்தது.


வருகிற 10ம் திகதி ஆப்பிள் தனது ஐபோன் மொடல்களை வெளியிட உள்ளது.


ஆனால் ஆப்பிளின் புதிய சாதனங்கள் பற்றிய படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.


இது ஆப்பிள் நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாம்.


அதாவது, அவுஸ்திரேலியாவை சேர்ந்த சோனி டிக்ஸன் என்ற இளைஞர் தான், தன்னுடைய இணையத்தளமான SonnyDickson.com –ல் அனைத்து தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.


இவரது இணையதளத்தை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நேஷ்னல் செக்கியூரிட்டி அமைப்பு 67 முறையும் மற்றும் ஆப்பிளின் ஊழியர்கள் 900 முறை பார்த்தாக சோனி டிக்ஸன் தெரிவித்துள்ளார்.


இவர் இந்த தகவல்களை பெரும்பாலும் சீனாவில் இருந்து பெறுவதாக தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக