வெள்ளி, 13 செப்டம்பர், 2013

ஐ. நா. 24வது கூட்டத் தொடரில் சிறிலங்கா சொல்லப்போவது என்ன? ஓர் ஆய்வு



சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் அரச ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட அறிக்கைகள் செய்திகளின் அடிப்படையிலும் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக சிறிலங்காவினது ஐ. நா. மனித உரிமை செயற்பாடுகளை அவதானித்ததன் அடிப்படையிலும் ...


ஐ. நா. மனித உரிமை சபையின் 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவினால் ஆற்றப்படவுள்ள உரை பின்வரும் விடயங்ளை உள்ளடக்கும் என்ற ஊகிக்கலாம்


சிறிலங்கா அரசினால் உள்ளடக்கப்பட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களும் உரைகளும் சர்வதேச சமுதாயத்தை தவறான பாதையில் இட்டுச் செல்வதுடன் மிக நீண்ட காலமாக இலங்கைதீவில் வாழும் தமிழ் மக்களுக்கு பாரிய கஷ்ட நஷ்டங்களை உண்டுபண்ணி வருகின்றது.


எதிர்வரும் 24வது கூட்டத் தொடரில் இவர்கள் நிச்சயமாக தமது நாட்டில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களது மாநாடு நவம்பர் மாதம் நடைபெறும் என்பதை கூறுவார்கள்.


பொதுநலவாய நாடுகளில் சில மனித உரிமைகளை மீறிய காரணத்திற்காக தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டதையோ அல்லது அவ் நாடுகளினது நிலைமைக்கு பல மடங்குகள் மேலாக தாம் மீறியுள்ளதையோ அங்கு குறிப்பிட மாட்டார்கள்.


அடுத்து ஊவா மாகணத்தில் வாழும் பூர்வீக மக்களான வேடர்கள் பற்றி குறிப்பிடத் தவற மாட்டார்கள். இதை பெரிய விடயமாக சோடிப்பதற்காகவே அண்மையில் ஜனதிபதி ராஜக்சவினால வேடர்களின் தலைமை பிரதிநிதிக்கு விசேட புள்ளிகளுக்கு வழங்கப்படும் வாகனம் ஒன்றை சாரதி இலவச எரிபொருள் வசதியுடன் வழங்கியுள்ளார்.




ஐ.நா. மனித உரிமை ஆணையாளரது சிறிலங்காவிற்கான விஜயம் பற்றி நிச்சயம் கூறப்படும். இவ்விஜயம் பற்றி குறிப்பிடப்படும் பொழுது தாம் மனித உரிமை ஆணையாளரை அவர் விரும்பிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட அனுமதித்ததுடன் இவர் ஓர் நீண்டகால விஜயத்தை மேற்கொண்டதுடன் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் சந்தித்ததாகவும் குறிப்பிடுவார்கள்.


ஆனால் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரை சந்தித்து உரையாடியவர்களுக்கு தம்மால் கொடுக்கப்படும் தொல்லைகள் பற்றியோ தமது அமைச்சர்கள் பலர் அவரை அவமானப்படுத்தியதுடன் மேர்வின் சில்வா என்பவர் இவரை திருமணம் செய்ய விரும்புவதாக மேடையில் கூறியதையோ அவரை தாம் அசிங்கமான முறையில் நடத்தியதையோ கூறமாட்டார்கள்.


வடக்கு கிழக்கில் காணமல் போனோர் பற்றி விசாரிப்பதற்கு ஜனதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய விசாரணைக் குழு பற்றி பெரிதாக தம்பட்டம் அடிக்கப்படுவதுடன் அரசினால் திறம்பட திட்டமிட்டு நீதிபதி ஒருவரினால் காணமல் போன 2500 பேர் பற்றி விசாரிக்குமாறு சிறிலங்காவின் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவிக்கு கட்டளையிடப்பட்டுள்ளதும் அங்கு முன்வைக்கப்படும். இவை யாவும் கண்துடைப்பு என்பதை இவர்கள் அங்கு கூறவே மாட்டார்கள்.


ஆனால் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யும் வரை ஏன் இவ்விடயத்தில் நீதிமன்றமும் நீதிபதியும் பொறுத்திருந்தார்கள் என்பது பற்றியோ முன்னைய ஜனாதிபதிகளினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றி விசாரித்த ஐந்து குழுக்களின் நீண்டகால மௌனம் பற்றிய விபரங்களை அங்கு கூறப்படமாட்டாது.


இதேவேளை அரசினதும் அரச சார்பு ஊடகங்களினதும் புதிய கண்டுபிடிப்பான 5000 பாதுகாப்பு படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் புதிய வார்ப்பு நிச்சயம் அங்கு முக்கிய இடத்தை பெற்றுக் கொள்ளும்.


ஆனால் இவை பற்றி முன்பு ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்களென்பது பற்றியோ இவ்விடயம் பற்றிய வேறு விபரங்களை அங்கு வெளியிட மாட்டார்கள். காரணங்கள் பல.


அத்துடன் வழமையாக இவர்கள் உச்சரிக்கும் மூலமந்திரமான “உலகின் மிக


ஆனால் கடந்த ஆகஸ்ட் 26ம் திகதி வரை மட்டும் 246 தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பாளர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளதை அங்கு கூறுவார்களா?


அடுத்து கொறவப்பொத்தானை என்ற இடத்தில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த நான்கு இராணுவ சிப்பாய்கள் பெண் ஒருவரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதுடன் பணத்தையும் திருடியதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளமையும் அங்கு பிரதிபலிக்கப்படலாம்.


யாவரினால் மறந்து போன எல். எல். ஆர். சி. அறிக்கைக்கான நடைமுறைகுழுவின் முன்னேற்றங்கள் பற்றி அங்கு பிரஸ்தாபிக்கப்படவுள்ள அதேவேளை வழமைபோல் தமக்கு கால அவகாசம் தேவைபடுவதாக நிச்சயம் அங்கு கூறுவார்கள்.


போர் முடிவிற்கு வந்து இப்பொழுது நான்கு வருடங்களாகியுள்ளதால் இவர்களது இவ் வேண்டுகோளுக்கு யாரும் செவிமடுக்கப் போவதில்லை.


இதே இடத்தில அரசிற்கு பாராளுமன்றத்தில் உள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தமது அற்ப தேவைகளுக்கு இவர்கள் துஷ்பிரயோகம் செய்வது பற்றியோ அல்லது எதற்காக இவ் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாட்டின் இனப்பிரச்சனைக்கு தீர்வுகான பாவிக்கப்படவில்லை என்பது பற்றியோ ஐ. நா. மனித உரிமை சபைக்கு கூறப்பட மாட்டாது.


கடந்த 26ம் திகதி வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமை ஆணையாளார் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் சிறிலங்காவின் வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் அவர்களை சந்தித்த வேளையில் பேராசிரியர் பீரிஸ் தாம் “ஆக்கபூர்வமான குறைகளை குற்றச்சாட்டுகளை ஏற்கத் தயாராகவுள்ளதாகவும் ஆனால் வலிந்து மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற விடயங்களை கூறுவது நல்லதல்ல” எனக் கூறியுள்ளார்.


பேராசிரியர் பீரிஸினால் சுட்டிக்காட்டப்பட்ட “மீண்டும் மீண்டும் ஆதாரமற்ற விடயங்களை கூறுவதை” சிறிலங்கா செய்வதில்லையா?


பேராசிரியர் பீரிஸின் புதிய கண்டுபிடிப்பு என்னவெனில் மற்றைய சமயங்கள் தாக்கப்படும் சம்பவங்கள் யாவும உடனுக்கு உடன் சகல சமயத்தவர்களும் ஒன்றிணைந்து தீர்ப்பதாக பொய் உரைத்துள்ளார்.


பேராசிரியரின் எதிர்பார்ப்பு என்னவெனில் பெரும்பான்மை சமயத்தை சார்ந்தவர்கள மற்றைய சமயத்தவர்களை தாக்கும் வேளைகளில் யாவரும் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்.


இவருடைய அடுத்த கூற்று இன்னும் வேடிக்கையானது. திருகோணலையில் ஐந்து மாணவரது படுகொலைக்கு காரணமான விசேட காவல்துறை மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாசுக்காக கூறிவிட்டார்.


அத்துடன் அடுத்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஐ. நா.வின் கல்வி இடம்பெயர்வு ஆகிய பிரிவுகளின் விசேட பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை தாம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.


ஆனால் இன்னும் பல ஐ. நா.வின் விசேட பிரதிநிதிகள் - காணமல் போவோர் படுகொலை சித்திரவதை நீதி வழக்கறிஞர் பத்திரிகை சுதந்திரம் சமய சம்பந்தங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு விஜயம் செய்வதற்காக மிக நீண்டகாலமாக இவர்களது அனுமதியை எதிர்பார்த்திருப்பதை அங்கு கூறுவார்களா?


கடந்த 30ம் திகதி வெள்ளிக்கிழமை ஜனதிபதி ராஜபக்சவிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளார் திருமதி நவநீதம்பிள்ளைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பு மிக சரித்திரப் புகழ்பெற்றது. காரணம் “சிறிலங்காவில் பலர் ஐக்கிய நாடுகள் சபையில் நம்பிக்கையை இழந்துள்ளார்களாம்” காரணம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரினால் கூடிய விரைவில் வெளியிடவுள்ள சிறிலங்கா பற்றிய அறிக்கையென ஜனதிபதி ராஜபக்ச கூறியுள்ளார். இவ் ஜனதிபதியின் கூற்றை நாம் “குழந்தைப்பிள்ளைகளின் மிட்டாய் கதைக்கு ஒப்பிடலாம்”.


ஜனாதிபதி ராஜபக்சவின் கூறுவது என்னவெனில் தமது அரசு போன்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளாரும் அறிந்தவற்றை கண்டவற்றை கேட்டவற்றை அலட்சியம் பண்ணிவிட்டு கற்பனை கதைகளை அறிக்கையாக எழுதப் பழக வேண்டுமென்று கூறுகிறார். வாழ்க இவரது சிந்தனை.


தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராளுமன்றத்திற்கு செல்லவிட்டாலும் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதப் பிரிவிக்கு தினமும் சென்று வருகிறார்கள் என்பதையும் இவர்களினால் ஐ. நா. மனித உரிமை சபையில் பிரதிபலிக்க கூறமுடியுமா?


இதேபோன்று சிறிலங்காவில் இன்றுவரை – 25 ஊடகவியலாளர் கொலைசெய்யப்பட்டும் 26 பேர் வெளிநாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதுடன் 2010ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி கொழும்பில் காணாமல் போயுள்ள கேலிச் சித்திரக்காரார் பிரகீத்எக்னெலியகொட இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை இவர்கள் நேர்மையாக அங்கு கூற முன்வருவார்களா?


மேல் கூறப்பட்ட விடயங்களை செப்டம்பர் 9ம் திகதி முதல் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 24வது கூட்டத் தொடரில் சிறிலங்காவினால் உரையாக ஆற்றப்படும்.


கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு கையில் மனித உரிமை சாசனமும மறுகையில் துப்பாக்கியுடன் போராடிய எமது பாதுகாப்பு படையினர் வெற்றி கொண்டதை அடுத்து தற்பொழுது வடமாகாணத்திற்கான முதலாவது தேர்தலும் வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றிற்கான தேர்தல்களும் நடைபெறவுள்ளதாக கூறப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக