வெள்ளி, 2 மே, 2014

எல்லோரும் ஒன்றிணைந்து ஊடக சுதந்­தி­ரத்தை உறு­திப்­ப­டுத்த வேண்டும்

உலக பத்­தி­ரிகை சுதந்­திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச நாடு­களில் ஊடக சுதந்­தி­ரத்தை ஊக்­கு­விக்கும் நோக்கில் 1993 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் ­சபைக்­கூட்­டத்தில்
நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் இந்த தினம் ஆண்­டு­தோறும் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

எமது நாட்டைப் பொறுத்­த­வ­ரையில் ஊடக சுதந்­திரம் என்­பது யுத்த காலத்தில் பெரும் கேள்­விக்­கு­றி­யான விட­ய­மாக மாறி­யி­ருந்­தது. தற்­போது இந்த நிலையில் சிறி­த­ளவு முன்­னேற்றம் காணப்­ப­டு­கின்­ற­போ­திலும் பூர­ண­மாக ஊடக சுதந்­திரம் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கூற முடி­யாத நிலை தற்­போதும் காணப்­ப­டு­கின்­றது.

ஜன­நா­யக நாடொன்றில் ஊடக சுதந்­திரம் என்­பது இன்­றி­ய­மை­யாத ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. ஊடக சுதந்­தி­ரத்தைப் பொறுத்­த­வ­ரையில் இலங்கை உலக நாடுகள் வரி­சையில் பின்­தங்­கிய நிலை­யி­லேயே பல ஆண்­டு­கா­ல­மாக இருந்து வரு­கின்­றது. 2014 ஆம் ஆண்டு எல்­லைகள் அற்ற பத்­தி­ரி­கை­யாளர் அமைப்பு மேற்­கொண்ட ஆய்வின்படி உல­க­நா­டுகள் வரி­சையில் ஊடக சுதந்­தி­ரத்தைப் பேணும் விட­யத்தில் 162 ஆவது இடத்தில் இலங்கை கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்வில் நெதர்­லாந்து, சுவீடன்இ நோர்வே ஆகிய நாடுகள் ஊடக சுதந்­தி­ரத்தை பேணுவதில் முன்­னணி வகிக்­கின்­றன.

இந்த நிலையில் நமது நாட்டில் ஊடக சுதந்­தி­ரத்தைப் பேணி பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்­டி­யது இன்­றி­ய­மை­யா­த­தாக மாறி­யி­ருக்­கின்­றது. கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக நாட்டில் இடம் பெற்ற யுத்­தத்தின் போது ஊடக சுதந்­திரம் என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே மாறி­யி­ருந்­தது. மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் ஊடக சுதந்­தி­ரத்தை அடக்கும் நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டி­ருந்­தன.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவின் ஆட்­சிக்­காலத்தில் யுத்த செய்­திகள் தொடர்பில் தணிக்கை அமுல்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. யுத்தம் தொடர்­பான செய்­திகள் அனைத்தும் தகவல் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்டு அங்கு தணிக்­கைக்கு உட்­படுத்­தப்­பட்ட பின்­னரே வெளியிடும் நிலைமை காணப்­பட்­டது. இதனால் ஊடக சுதந்­திரம் என்­பது முற்­றாக இல்­லாது போன நிலை அன்­றைய காலத்தில் உரு­வா­கி­யது. இதேபோல் இறுதி யுத்த காலத்தின் போதும் உத்­த­ர­வி­டப்­ப­டாத தணிக்கை நில­வி­வந்­தது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது தொடர்ச்­சி­யாக விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­தல்கள் கார­ண­மாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுய தணிக்கை செய்தே செய்­தி­களை வெளியிடும் நிலை அன்­றைய காலத்தில் உரு­வா­கி­யி­ருந்­தது.

யுத்த செய்­திகள் தொடர்­பிலோ, இழப்­புக்கள் தொடர்­பிலோ சுயா­தீ­ன­மான தக­வல்­களை வெளியிட முடி­யாத இக்­கட்­டான நிலை காணப்­பட்­டது. அர­சாங்கத் தரப்­பி­னரின் அல்­லது படைத்­த­ரப்­பி­னரின் அறி­விப்­புக்­க­ளுக்கே முக்­கியம் கொடுக்க வேண்­டிய சூழல் உரு­வாக்­கப்­பட்­டி­ருந்­தது. இதனால் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுய தணிக்­கையின் கீழ் சிக்­கி­யி­ருந்­தனர். இதற்கு 2000 ஆம் ஆண்டு முதல் ஊட­க­வி­ய­லா­ளர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் மற்றும் அச்­சு­றுத்­தல்கள் என்­ப­னவும் கார­ண­மாக அமைந்­தி­ருந்­தன.

2000 ஆம் ஆண்டு ஊட­க­வி­ய­லாளர் மயில்­வா­கனம் நிம­ல­ராஜன் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். இதனைத் தொடர்ந்து 10 வருட காலப்­ப­கு­திக்குள் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான டி. சிவராம், ஜி. நடேசன், சுகிர்­த­ராஜன், சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் ஆசி­ரியர் லசந்த விக்­கி­ர­ம­துங்க என ஊடக விய­லா­ளர்­களும் ஊடக நிறு­வ­னங்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளு­மென 18 பேர் வரையில் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

யுத்­த­கா­லத்தில் இவ்­வாறு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் உயிர்கள் பறிக்­கப்­பட்­ட­துடன் தொடர்ந்தும் அச்­சு­றுத்தல் நிலவி வந்­தது. இதனால் ஊட­க­வி­யலாளர்கள் அனை­வ­ருமே சுய­த­ணிக்­கை­யினை மேற்­கொள்­ள­வேண்­டிய நிலை உரு­வா­கி­யது.

யுத்த காலத்தில் இவ்­வா­றான நிலை காணப்­பட்ட போதும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் ஊடக நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் ஊழி­யர்­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் நிலை தொடர்­கின்­றது. கடந்த வருடம் யாழ்ப்­பா­ணத்தில் தினக்­குரல் மற்றும் உதயன் பத்­தி­ரி­கை­களை விநி­யோ­கிக்கும் ஊழி­யர்கள் இருவர் இனந்­தெ­ரி­யாத நபர்­க­ளினால் தாக்­கப்­பட்­ட­துடன் அவர்கள் பய­ணித்த மோட்டார் சைக்­கிள்­களும், பத்­தி­ரி­கை­களும் எரி­யூட்­டப்­பட்­டன. இதேபோல் உதயன் பத்­தி­ரிகை அலு­வ­ல­கத்­திற்குள் புகுந்து தாக்­கு­தலும் நடத்­தப்­பட்­டது.

இவ்­வா­றான நிலைமை ஊடக சுதந்­தி­ரத்தை தொடர்ந்தும் பாதிப்­ப­டையச் செய்து வரு­கின்­றது. எமது நாட்டைப் பொறுத்­த­வரையில் ஊடக சுதந்­தி­ரத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு எதிர்­கா­லத்­தி­லா­வது உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

நாட்டில் ஊடக சுதந்­தி­ரத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கும் நல்­லாட்­சி­யினை மேற்­கொள்­வ­தற்கும் தகவல் அறி­வ­தற்­கான சட்­ட­மூலம் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை தற்­போது மேலெ­ழுந்­துள்­ளது. தகவல் அறி­வ­தற்­கான சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மென்று எதிர்க்­கட்­சி­களும் ஊடக அமைப்­புக்­களும் தொடர்ந்தும் குரல் எழுப்பி வரு­கின்­றன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்தில் இந்த தகவல் அறியும் சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்சி எடுக்­கப்­பட்ட போதிலும், அது கைகூ­ட­வில்லை. இவ்­வி­டயம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு குழுக்கள் நிய­மிக்­கப்­பட்டு அது தொடர்­பான அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனாலும், இந்தச் சட்­ட­மூ­லத்தை கொண்டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் அர­சாங்கம் அக்­கறை காட்­டு­வ­தாக இல்லை. ஊடக சுதந்­தி­ரத்தை வலி­யு­றுத்தி நாட்­டி­லுள்ள ஏழு ஊடக அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து கடந்த பல வரு­டங்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றன.

சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம், ஊடக தொழி­லாளர் சம்­மே­ளனம், இலங்கை தமிழ் ஊட­க­வி­ய­லாளர் ஒன்­றியம், முஸ்லிம் மீடியா போரம், தெற்­கா­சிய ஊடக வலை­ய­மைப்பு, ஊடக தொழி­லாளர் சங்கம் ஆகிய அமைப்­புக்­களே ஒன்­றி­ணைந்து செயற்­பட்டு வரு­கின்­றன. இந்த அமைப்­புக்­க­ளுடன் மேலும் சில ஊடக சார்பு அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து தற்­போது ஊடக சுதந்­தி­ரத்­திற்­கான நட­வ­டிக்­கைக்­குழு என்ற அமைப்­பினை உரு­வாக்­கி­யுள்­ளன. இந்த அமைப்­பானது நாட்டில் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தை அமுல்­ப­டுத்த வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றது. உலக பத்­தி­ரிகை சுதந்­திர தினத்தை முன்­னிட்டு நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை இந்த அமைப்­புக்கள் ஒன்­றி­ணைந்து கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக தகவல் அறியும் சட்­ட ­மூ­லத்தை வலி­யு­றுத்தி கையெ­ழுத்து பெறும் போராட்டம் ஒன்­றினை ஆரம்­பிக்­க­வுள்­ளன.

தகவல் அறியும் சட்­ட­மூ­ல­மா­னது இந்­தியா உட்­பட மேலைத்­தேய நாடு­களில் அமுலில் உள்­ளது. இதனை எமது நாட்­டிலும் அமுல்­படுத்­து­வ­தற்கு எதிர்க்­கட்­சிகள் பூரண ஒத்­து­ழைப்பை வழங்க தயா­ராக உள்ளன. அண்மையில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் நல்லாட்சிக்கான முக்கியதொரு அச்சாணியான விடயம் நடைபெற வேண்டுமானால் தகவல் அறிவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும். 
இந்த விடயம் சிலரால் ஜீரணிக்க முடியாத விடயமாக இருக்கின்றபோதும் இதனை வலியுறுத்தும் சிவில் சமூகப் போராட்டம் ஒன்று அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இத்தகைய செயற்பாடுகளை எதிர்க் கட்சிகள் முன்னெடுக்கும் போது ஆளும் தரப்பிலிருந்தாலும், நான் நிச்சயமாக இதில் பங்கெடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

நீதியமைச்சரின் கருத்திலிருந்து தகவல் அறியும் சட்டமூலத்தின் அவசியத்தை உணரக்கூடியதாக உள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்ற தீர்மானத்தை அனைவரும் எடுப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக