வெள்ளி, 11 மே, 2012

'கன்சு குடித்தாவது வயிறு நிரம்பட்டும்'




அதிகரித்து வரும் வாழ்கை செலவை சமாளித்துக் கொள்ளமுடியாமல் நாட்டின் நாளா பக்கங்களிலும் மக்கள் அள்ளல் பட்டுக் கொண்டிருக்கும் தருணமிது. 

'சாப்பிடவழியில்லை' 'கன்சுகுடித்தாவது வயிறு நிரம்பட்டும்' வயிற்றுபிழைப்புக்கு என்ன செய்வது'  'எனக்கு இல்லாட்டியும் என் பிள்ளைக்காவது........' என்றெல்லாம் கதைகளை கேட்க மனம் ஏங்கி துடிக்கிறது. உண்மையில் நாட்டில் என்ன தான் நடக்கிறது.

இந்த விலையேற்றங்கள் குறிப்பாக சிறுபான்மையின மக்களையே பெரிதும் பாதித்திருக்கிறது என்பது தான் உண்மை. மலையகத்தில் அன்றாட கூலிக்காக உழைக்கும் மக்கள் தமது அன்றாட தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் அள்ளல் படுகின்றனர். பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணி கண்ணீர் விடும் உள்ளங்கள் தான் பல. ஒருபுறம் பால் மாவிலையேற்றம்ரூபவ் மறுபுறம் பெற்றோலிய விலையேற்றம் என மக்கள் அன்றாடம் ஓர் புரட்சியையே மேற்க்கொள்ள வேண்டி இருக்கிறது.

சமகால தரவுகளின் படி இலங்கை வாழ் மக்களில் 10-15 வீதமானோர் ஓர் நாளில் இரண்டு வேலையே சாப்பிடுவதாக கூறப்படுகிறது. மலையகம்ரூபவ் கிழக்குரூபவ் வடக்கு ஆகிய மாகாணங்களில் வாழும் சிறுபான்மையினரே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நாட்டின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு பலதிட்டங்களை முன்னெடுத்து வருவதாக அரசாங்கம் உலகமெங்கும் பட்டடித்து திரிகிறது. ஆம் உண்மையில் நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பன்ஞமே இல்லை. வடக்கின் வசந்தம்ரூபவ் கிழக்;கின் உதயம்ரூபவ் கமநெகும என பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தெற்கின் அதிவேகபாதை–பல உயிர்களை காவு கொண்டுவிட்டது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் - கப்பல்களை நங்கூரமிட முடியாத சூழ்நிலை. புதியபாதைகள் - ஒரு மழைக்கு அடித்து செல்கின்றன.

இப்படி அபிவிருத்தி திட்டங்கள் திட்டமற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும் மக்களின் பசிப்பிணியை போக்க அரசாங்கம் செய்தது?...........


 
அமைச்சர்களின் உள்ளார்ந்த மற்றும் வெளிவாரியான செலவுகளுக்கு ஒதுக்கப்படும் பணப்பெறுமதி என்ன....? அவர்களின் பாதுகாப்புரூபவ் சம்பளம் இன்னும் உயர்த்தப்பட வேண்டுமாம். அண்மையில் ஓர் அமைச்சரின் மகனின் பிறந்ததின நிகழ்வொன்றுக்கு வெளிநாட்டில் பெறுமதிவாய்ந்த ஹோட்டல் ஒன்றில் கோடிக்கணக்கான செலவில் இடம் பெற்றதாமே......! அவர்களின் வாகனங்களோ என்ன அழகுரூபவ் என்ன வடிவு அடடா................!

இப்படி சுகபோக வாழ்கை வெளிநாட்டு அரசியல் வாதிகளுக்கும் இல்லையாம்.............! மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அந்த மக்களுக்கே யெமனாக மாறுவது எந்த விதத்தில் நியாயம்.


 
சிங்கப்பூரை கனவாக காணும் நாட்கள் கழிந்து இன்று சோமாலியாவை நோக்கிய பயனமாக மாறிவிட்ட அவலம் தான் என்ன...............? உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கூட இல்லைரூபவ் இப்படி இருக்க அதிகரித்து வரும் விலைவாசிக்கு ........?

அபிவிருத்தியை நோக்கமாக கொண்ட அரசாங்கம்ரூபவ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும்; அபிவிருத்தியின் ஓர் எண்ணக்கருவாக கருதவில்லையா....? இந்த அவலம் தொடர்ந்தால்.......................! இதனைத் தீர்க்கத்தான் வழி என்ன?..........

விலைவாசியால் ஒடுக்கப்படுவது சிறுபான்மை சமூகமேரூபவ் மறு புறம் இன்னுமொரு சதியும் சிறுபான்மை சமூகத்தை நோக்கி தீட்டப்படுகிறது.............? தொடர்.............!










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக