வியாழன், 12 செப்டம்பர், 2013
இந்தியாவையும் விட்டு வைக்காத ராகிங் கலாச்சாரம்
மேற்கு வங்க மாநிலம் டம் டம் நகரில் 5ம் வகுப்பு மாணவி ஒருவர், சீனியர் மாணவிகளால் துன்புறத்தப்பட்டு இறந்தார். மேற்கு வங்க மாநிலம் டம் டம் நகரில் உள்ளது கிறைஸ்ட் சர்ச் பெண்கள் மேல் நிலைப் பள்ளி.
இங்கு ஆயின்ரில்லா தாஸ் என்ற மாணவி 5ம் வகுப்பு படித்தார். இவரிடம் சீனியர் மாணவிகள் சிலர் பணம் கேட்டு கடந்த வாரம் தொந்தரவு செய்துள்ளனர். பணம் தர மறுத்த மாணவியை பள்ளி முடிந்ததும், அங்குள்ள கழிவறையில் அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
பயந்துபோன மாணவி அபாய குரல் எழுப்பினார். ஆனால் வெகுநேரமாக யாரும் உதவிக்கு வரவில்லை. மாணவியின் அலறல் சத்தத்தை கேட்ட பள்ளியின் துப்புரவுத் தொழி லாளி கழிவறைக்கு சென்று கதவை திறந்து மாணவியை மீட்டார். மிரண்ட நிலை யில் இருந்த மாணவியை மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மாணவி நேற்று முன்தினம் இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும், பள்ளி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதனால் பள்ளி முதல் வரும், ஆசிரியர்களும் பால்கனியில் நின்றபடி மைக் மூலம் மன்னிப்பு கோரினர். தவறு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்ப தாகவும் உறுதிஅளித்தனர்.
ஆனால் இதை ஏற்க மறுத்த உறவினர்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த அங்கிருந்த மேஜை, நாற்கலிகளை அடித்து நொறுக்கினர். அங்கு போலீசார் விரைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின், பலியான மாணவியின் தாயை போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
குறிப்பு
இவ்வாரான சம்பவங்கள் பல இலங்கையிலும் பதிவாகி உள்ளன. படிக்கச் செல்லும் மாணவர்கள் பகுடிவதைக்கு உட்படுத்தப்படுவது குறித்து பல வாத பிரதிவாதங்கள் இருக்கின்றன. நானும் ஒரு பல்கலைக்கழக மாணவன் எனும் அடிப்படையில் அதனை நன்கு அறிவேன்.
இருப்பினும் பெற்றோர் பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாகி உழைத்து பெரும் பணத்தை கொண்டு தன் பிள்ளையை உயர் படிப்புக்காக வேண்டி உயர் கல்வி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
வீட்டை விட்டு பல மைல் தொலைவிற்கு சென்று படிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு அவாவில் செல்லும் மாணவர்கள் இப்பகுடி வதையின் மூலம் படிக்க முடியாமல் அவஸ்தையுறுவதும் சில வேளை தன் உயிரையே விடுவதும் கவலைக்குறியதே!
இப்படியான நிலையில் இவ்வாரானதொரு ராகிங் தேவைதானா? இப்படி செய்தால் மாத்திரம் தானா சீனியர் ஜுனியர் உறவை அதிகரிக்கலாம்?
சிந்தனைக்காக...........................
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக