இதுவரையிலும் இல்லாத அளவு, 2012ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பாரிய அளவில் வளர்ச்சியை கண்டது என்று சொன்னால் அது மிகையல்ல.
கணனி, கைபேசிகள், டேப்லட்கள், மடிக்கணனிகள் என அனைத்துமே மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் புது புதிதான வசதிகளுடன் அறிமுகமாகி கொண்டு தான் இருந்தன. குறிப்பாக இந்த ஆண்டில் மருத்துவம், ஆராய்ச்சி, விஞ்ஞானம் என அனைத்திலுமே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.
கணனி
இன்றைய நவீன உலகில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் கணனிகள், டேப்லட்கள் அறிமுகமாகின. ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு, தங்களது பயனாளர்களுக்கு ஏற்றவகையில் புதிது புதிதாக வசதிகளை அறிமுகப்படுத்தின.
மிக முக்கியமாக 2012-ல் கண்ணாடி இல்லாமல் முதன் முறையாக மடிக்கணனி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த கணனி விஞ்ஞானிகள் மனித ரோமத்தை விடவும், பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டனர்.
இவ்வாறான கம்பிகள் குவாண்டம் கணனிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளை கணனிகளை உருவாக்குவதற்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலும் மிக முக்கியமாக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயற்படும் குளிர்சாதன பெட்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் தீவிரமாக ஆர்வம்காட்டின.
1. ஆண்ட்ராய்ட் குளிர்சாதனப்பெட்டிகள் விரைவில் அறிமுகம்
2. கண்ணாடி இல்லாமல் அறிமுகமான உலகின் புதிய மடிக்கணனி
3. அடுத்த தலைமுறை கணணிக்காக கண்டுபிடிக்கப்பட்ட மனித ரோமத்தை விட மெலிதான மின் கம்பிகள்
4. சீனாவில் முதல் சூப்பர் கணணி அறிமுகம்
விண்டோஸ் 8
மக்களிடம் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மைக்ரோசாப்டின் புதிய வரவான விண்டோஸ் 8. இதன் முக்கிய சிறப்பம்சம் 3 வயது குழந்தை கூட இதனை மிக எளிதான முறையில் பயன்படுத்தலாம் என்பதுவே. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
1. உலகமெங்கும் இன்று வெளியிடப்பட்டது விண்டோஸ் 8
ஆப்பிளின் சாதனங்கள்
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் மறைவுக்கு பின்னரும், புதிதாக சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், நம்பர்-1 இடத்தை இழந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் தற்போது சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு ஏற்ற வகையிலும், மிக குறைந்த விலையிலும் போட்டியாக சாதனங்களை களமிறக்க ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் மவுசு குறைந்தது என்றே சொல்ல வேண்டும். இதற்கு மத்தியிலும் ஆப்பிளின் iPad 3, iPad Mini Tablet, iPhone 5 போன்றவை மிகுந்த வரவேற்பை பெற்றன.
1. புதிய ஐபேட்3 அறிமுகம் (வீடியோ இணைப்பு)
2. பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அறிமுகமாகியது iPad mini
3. அப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய iPad Mini
4. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 வெளியானது
5. ஆப்பிள் ஐ-கார் ரெடி: ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு நனவானது
இதிலும் குறிப்பாக எங்களது தொழில்நுட்பங்களை அப்படியே கொப்பி அடித்து வெளியிட்டு விட்டது என சாம்சங் மீது ஆப்பிள் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து 5,500 கோடி இழப்பீடு வழங்கும் படி சாம்சங் நிறுவனத்திற்கு அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
1. காப்புரிமை வழக்கு: சாம்சங்கை வென்றது ஆப்பிள்
2. சம்சங் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்தது அப்பிள்
3. அப்பள் நிறுவனத்தின் பங்குகள் சரிவு: முன்னணியில் சாம்சங், கூகுள்
பேஸ்புக்
மேலும் முக்கியமாக பேஸ்புக் நிறுவனம் மே மாதம் 18ம் திகதி முதல் அமெரிக்காவின் முன்னணி மின் பங்குச் சந்தையான NASDAQ ல் தனது பங்குவிற்பனையை தொடங்கியது. ஆனால் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என காலடி எடுத்த வைத்து பேஸ்புக் நிறுவனத்துக்கு, பலத்த அடியாக அமைந்தது.
1. பொது விற்பனைக்கு வந்தது பேஸ்புக்கின் பங்குகள்
2. சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி: பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது
கூகுள்
தேடியந்திரம் என்றதுமே நம் அனைவரின் மனதிலும் தோன்றுவது கூகுள் தான். அந்த அளவுக்கு பல்வேறு வகையான புது வசதிகளை, தன் பயனாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு தினம் தினம் அறிமுகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டில் மிக முக்கியமாக புதிதாக டேப்லட்டை அறிமுகப்படுத்தியது.
மேலும் விண்வெளியில் பறந்தபடியே, சாட்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. இந்நிலையில் கூகுளின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த மரிஸா மேயர், யாகூவின் CEOவாக நியமிக்கப்பட்டார்.
1. விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை
2. கூகுளின் புதிய டேப்லெட்
3. யாஹூவின் CEOவாக கூகுளின் துணைத் தலைவர் நியமனம்
மருத்துவம்
2012ஆம் ஆண்டில் இதுவரையிலும் இல்லாத அளவு பல்வேறான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மிக முக்கியமாக செயற்கையான முறையில் எலும்புகள், மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இதுதவிர ஆய்வகத்திலேயே எலியின் உயிரணுக்கள், கலப்பின குரங்குகளையும் உருவாக்கி சாதனை படைத்தனர்.
1. எலியின் உயிரணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
2. செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
3. எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
4. மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை
5. தோலிலிருந்து மனித மூளை இழையங்கள்: விஞ்ஞானிகள் சாதனை
6. செயற்கையாகத் தயாரிக்கப்படும் எலும்பு
7. செயற்கையாக மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்
அறிவியல் மற்றும் விஞ்ஞானம்
விஞ்ஞான ரீதியாக அனைவரின் எதிர்பார்ப்பும், பூமியை தவிர வேறொரு கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது தான். இதற்காக பல்வேறு விதமான ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் தான் உள்ளன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப சூழ்நிலைகள் குறித்து நாசாவின் கியூரியாசிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே நமது சூரியக்குடும்பத்திலும், சூரியக்குடும்பத்திற்கு அப்பாலும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
1. சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு
2. உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு
3. சூரிய மண்டலத்தில் புதிய பகுதி கண்டுபிடிப்பு
4. விண்வெளியில் பூமியை போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு
5. சூரிய குடும்பத்திற்கு அப்பால் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
6. வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு
7. சனியின் துணைக்கிரகத்தில் குட்டி நைல் நதி: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு
ரோபோ
இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கு எந்தவித வேலையும் இருக்காது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அதற்கு ஏற்றாற் போல், பல்வேறு விதமான வேலைகளை செய்யக்கூடிய ரோபோக்கள் 2012ஆம் ஆண்டில் அறிமுகமாயின.
1. ஓவியம் வரையும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
2. உங்களின் எழுத்து வேலைகளை செய்யும் ரோபோ
3. 18 விதமான பணிகளை செய்யும் ஒரே ஒரு ரோபோ
4. பிரச்சினைகளைத் தீர்க்கவல்ல மென்மையான ரோபோ
5. படிக்கட்டுக்களில் ஏறக்கூடிய ரோபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை
6. தீ அணைக்கும் ரோபோ
7. தலையை கழுவி சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
ஹிக்ஸ் போஸான்
இவ்வாறான கண்டுபிடிப்புகளுக்கு மத்தியிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியது கடவுளின் அணுத்துகளான ஹிக்ஸ் போஸனை கண்டுபிடித்தது தான். கண்ணுக்கு புலப்படாத ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருப்பதை CERN ஆராய்ச்சி கழகம் கண்டறிந்தது.
கடவுளின் அணுத் துகள் "ஹிக்ஸ் போஸான்" கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது
முதல் மனிதன் குரங்கு இல்லை.. அணில்
மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என இதுவரையிலும் நம்பப்பட்ட போதிலும், அணில் தான் நமது மூதாதையர் என கண்டறிந்தது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்: சொல்கிறது புதிய ஆய்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக