அயர்லாந்தை சேர்ந்தவர் டேனியல் கிளவ்(வயது 37).
இவர் கடந்த 2012ம் ஆண்டு மது பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு, நண்பர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தார்.
அத்துடன் பீர் மற்றும் ஸ்பிரிட்டை ஆசை தீர குடித்து மகிழ்ந்துள்ளார்.
அப்போது திடீரென விக்கல் ஏற்பட்டது, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் நேரம் ஆக ஆக 7 நொடிக்கு ஒருமுறை விக்கல் தொடர்ந்து வந்தது.
இதனால் பீதி அடைந்தவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தார்.
இருப்பினும் குணமாகவில்லை, தொடர்ந்து விக்கல் வந்து கொண்டே இருப்பதால் மூச்சுவிட முடியாமல், சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறாராம்.
எத்தனையோ சிகிச்சைகள் மேற்கொண்டும், மனநல சிகிச்சை எடுத்துக் கொண்டும் குணமாகாமல் அவஸ்தைப்படுகிறாராம்.
இவருக்கு வயிற்றையும், மார்பையும் பிரிக்கும் தசையிலும் பாதிப்பு உள்ளது, தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
கடந்த 14 மாதமாக விக்கலில் தவித்து வருகிறார் டேனியலுக்கு, இதுவரையிலும் 53 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை விக்கல் வந்திருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பது தான் சோகமான விடயம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக