திங்கள், 23 செப்டம்பர், 2013

மத்திய மாகாணசபை தேர்தல் முடிவுகள் ஓர் ஆய்வு

                           
 

                                             மத்திய மாகாணம்


                                                           கண்டி மாவட்டம்     


                                                                                   

2009

         2013
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
18 
          16

ஐக்கிய தேசிய கட்சி
12
           09
ஜனநாயக கட்சி
--
              02
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
--
               01
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
--
               01


**ஜனநாயக கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன கண்டியில் புதிதாக ஆசனங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.



                                             நுவரெலியா மாவட்டம்
                                                                 


2009

        2013
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
09   
          11

ஐக்கிய தேசிய கட்சி
07
          04
மலையக மக்கள் முன்னணி
--
             01




**மலையக மக்கள் முன்னணி புதிதாக நுவரெலியா மாவட்டத்தில் ஆசனம் ஒன்றை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


                                             மாத்தளை மாவட்டம்
                                                                                   


2009

         2013
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
07   
         07

ஐக்கிய தேசிய கட்சி
03
          03
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
--
            01




**கண்டி மாவட்டத்தில் இருந்து குறைக்கப்பட்டு, மாத்தளையுடன் சேர்க்கப்பட்ட புதிய ஆசனத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.



இதன் படி 2013 மாகாண சபைத் தேர்தலின் மத்திய மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி வெற்றுள்ளது.

இங்குள்ள மூன்று மாவட்டங்களிலும் மொத்தமாக 7 லட்சத்து 16 ஆயிரத்து 247 வாக்குகளைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, 36 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 3 லட்சத்து 30 ஆயிரத்து 815 வாக்குகளைப் பெற்று, 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஜனநாயக முன்னணி 45 ஆயிரத்து 239 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 29 ஆயிரத்து 295 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளது.


அத்துடன், மத்திய மாகாணத்தில் 29 ஆயிரத்து 913 வாக்குகளைப் பெற்றுள்ள மலையக மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தையும், 17 ஆயிரத்து 788 வாக்குகளைப் பெற்றுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.


மத்திய மாகாண சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 2லட்சத்து 25ஆயிரத்து 307 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி 67 ஆயிரத்து 263 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ள மலையக மக்கள் முன்னணி அங்கு 23 ஆயிரத்து 455 வாக்குகளைப் பெற்றுள்ளது.


நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தவரையில் கடந்த மாகாண சபைப் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 9 ஆசனங்களை பெற்றிருந்தது.


எனினும் இந்த முறை அதன் ஆசனங்கள் 11க அதிகரித்துள்ளன.


கடந்த தேர்தலில் 7 ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய தேசிய கட்சி இந்த முறை மூன்று ஆசனங்களை இழந்துள்ளது.


மலையக மக்கள் முன்னணி புதிதாக நுவரெலியா மாவட்டத்தில் ஆசனம் ஒன்றை பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.


மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 355,812 வாக்குகளை பெற்று, 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


இந்த மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி, 200,187 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


ஜனநாயக கட்சி 37,431 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேநேரம், கண்டியில் 18,787 வாக்குளைப் பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், 11,137 வாக்குகளை பெற்ற சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளன.


கண்டியை பொறுத்தவரையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கடந்த 2009ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் பெற்ற 18 ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் குறைவடைந்துள்ளன.


ஐக்கிய தேசிய கட்சி கடந்த தேர்தலில் 12 ஆசனங்களை பெற்றிருந்த போதும், இந்த முறை 3 ஆசனங்களை இழந்துள்ளது.


ஜனநாயக கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பன கண்டியில் புதிதாக ஆசனங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.


அத்துடன் கண்டி மாவட்டத்தில் இருந்து மத்திய மாகாணசபைக்கு தெரிவு செய்யப்படுகின்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த ஆசனம் மாத்தளை மாவட்டத்துக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 135,128 வாக்குகளை பெற்று, 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சி, 63,365 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 10,498 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.


கடந்த 2009ம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைப் தேர்தலின் போது, மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும், ஐக்கிய தேசிய கட்சியும் கைப்பற்றிய ஆசனங்களில் மாற்றங்கள் இல்லை.


எனினும் கண்டி மாவட்டத்தில் இருந்து குறைக்கப்பட்டு, மாத்தளையுடன் சேர்க்கப்பட்ட புதிய ஆசனத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.




சனி, 21 செப்டம்பர், 2013

பூமியில் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம்: ஆய்வில் தகவல் (அப்போ இறைவன் எங்கே?)


பூமியில் இன்னும் 175 கோடி ஆண்டுகள் வரை உயிரினங்கள் வாழலாம் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


லண்டனில் உள்ள கிழக்கு ஆங்லியா சுற்றுப்புறச் சூழல் அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ரஷ்பி பூமியின் சுற்றுப்புறச் சூழல் பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்.


அவரது குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பூமியில் மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழலாம் என்பது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.


இந்த ஆய்வில் பூமியில் மனிதன் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழலாம் என்பது தெரியவந்துள்ளது.


இது பற்றி ஆய்வு நடத்திய விஞ்ஞானி ஆன்ட்ரூ ரஷ்பி கூறுகையில், நமது பூமி சூரியனின் வெப்ப மண்டல பகுதிக்குள் செல்லும்போது பூமியின் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும்.


இதன் காரணமாக கடல் முழுவதும் ஆவியாகி விடும். இந்த கால கட்டத்தில்தான் உயிரினங்கள் பூமியில் வாழ முடியாத நிலை ஏற்படும்.


எங்களது ஆய்வின் மூலம், பூமியில் உயிரினங்கள் இன்னும் 175 கோடி முதல் 375 கோடி ஆண்டுகள் வரை வாழ முடியும் என்பதை கண்டறிந்துள்ளோம்.


சூரிய மண்டலத்திற்கு வெளியே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களை பயன்படுத்தி, கிரகங்கள் வாழ்க்கை நடத்த சாத்தியமானதா என்பது பற்றி கண்டறிந்துள்ளோம்.


கிரகத்திற்கும் அதன் நட்சத்திரத்திற்கும் உள்ள தூரம் மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள தண்ணீருக்கு உகந்த வெப்பநிலையைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.


விண்மீன்களின் வெப்ப அலை மாதிரிகள் மூலம் கிரகங்களின் வாழத் தக்க நாட்களை கணக்கீடு செய்தோம்.


கிரகங்களில் வசிக்கத்தக்க காலம் எவ்வளவு என்பதை அளக்கும் அளவீடானது, மற்ற கிரகங்களில் எவ்வளவு நாள்கள் வசிக்க முடியும் என்பதை அளவிட பெரிதும் உதவியாக இருக்கிறது.


ஒருவேளை இந்த ஆய்வு முடிவு துல்லியமாக இல்லாவிட்டாலும் கூட, பூமியானது 75 சதவீத வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளது. பூமிக்கு இன்னும் 25 சதவீத ஆயுள்தான் உள்ளது.


சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 1,000 க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கிரகங்களை வைத்துத்தான் விஞ்ஞானிகளால் கிரகங்களில் வசிக்கத்தக்க கால கட்டத்தை கணக்கிட முடிந்தது.


நாங்கள் இதேபோன்ற 8 கிரகங்கள் மற்றும் செவ்வாய்கிரகத்தின் தற்போதைய வசிக்கத்தக்க கால கட்டத்துடன் பூமியை ஒப்பீடு செய்துள்ளோம்.


எங்களது ஆய்வில் சிறிய கூட்ட நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கிரகங்கள் நீண்ட காலம் வசிக்கத்தக்கதாக இருப்பதை கண்டறிந்துள்ளோம் என்று ஆன்ட்ரூ ரஷ்பி தெரிவித்தார்.

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

தக்காளியின் வியக்க வைக்கும் நன்மைகள்





குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி.


தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான்.


அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே.


சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப்(150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும்.


இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது.


உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.


இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது.


தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.


ஆரோக்கியமான சருமம்

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தக்காளி பெரிதும் உதவும். ஏனெனில் கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள பீட்டா கரோடின் தக்காளியிலும் உள்ளது.


அது சருமத்தை சூரிய வெப்பத்தில் இருந்து காக்கும். மேலும் தக்காளியில் உள்ள லைகோபீன், புறஊதாக் கதிர்களில் இருந்து காக்கும். அதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.


வலுவான எலும்புகள்


வலுவான எலும்புகள் பெறுவதற்கு தக்காளி பெரிதும் உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்பை திடமாக வைத்து, எலும்புகளில் ஏற்படும் கோளாறுகளையும் சரிசெய்யும்.


மேலும் இதிலுள்ள லைகோபீன், எலும்பின் பொருண்மையை மேம்படுத்தும். எலும்புப்புரை நோய்களை எதிர்த்து போராடவும் இது உதவும்.


புற்றுநோய்க்கு எதிராக போராடும்


இயற்கையாகவே தக்காளி புற்றுநோய்க்கு எதிராக போராடும் குணத்தை கொண்டவ. மீண்டும் லைகோபீன் தான் இதற்கும் துணை புரிகிறது.


அதிலும் புரோஸ்டேட் புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வயிற்று புற்றுநோய், உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களில் இருந்து காக்கும்.


அணுக்களை பாதிப்படையச் செய்யும் இயக்க உறுப்பு கோளாறுகளை எதிர்த்து போராடும் வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் தக்காளியில் உள்ளது.


நீரிழிவு


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் தக்காளி உதவுகிறது.


ஏனெனில் தக்காளியில் குரோமியம் வளமையாக உள்ளதால், அது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.


பார்வை கோளாறு


தக்காளி கண் பார்வையையும் மேம்படுத்தும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, கண் பார்வையை மேம்படுத்தி மாலை கண் வியாதி வராமல் தடுக்கும்.


மேலும் இது குணப்படுத்த முடியாத கோளாறான மாக்குலர் டி-ஜெனரேஷன் வரும் ஆபத்தையும் தடுக்கும்.


பொலிவான கூந்தல்


கூந்தலைக் கூட தக்காளி அழகாக காட்ட உதவும். தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ கூந்தலை திடமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.


கூந்தல் உதிர்தலுக்கு தக்காளி உதவவில்லை என்றாலும் கூட, இருக்கும் கூந்தலை அழகாக காட்ட உதவும்.


சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் உருவாவதை தடுக்கும்



சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும், பித்தக்கற்கள் உருவாவதையும் தக்காளி தடுக்கும்.


அதிலும் தக்காளியை கொட்டை இல்லாமல் உண்ணுபவர்களுக்கு, சிறுநீரகக் கற்கள் மற்றும் பித்தக் கற்கள் உருவாவது தடைபடும் என்று சில ஆய்வுகள் கூறுகிறது.



கடுமையான வலி


கடுமையான வலிகளுக்கு தக்காளி ஒரு நிவாரணியாக விளங்குகிறது.


லேசானது முதல் கடுமையான வலியை(கீல்வாதம் அல்லது முதுகு வலி) சந்திக்கும் லட்சக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் தக்காளி உங்களுக்கு உதவி புரியும்.

தக்காளியில் உள்ள பயோஃப்ளேவோனாய்ட்டுகள் மற்றும் கரோடினாய்டுகள் அதிகமாக உள்ளதால், அழற்சி ஏற்படாமலும் தடுக்கும்.


கடுமையான வலி என்றால் அதில் கடுமையான அழற்சியும் அடங்கும். அதனால் அழற்சிக்கு எதிராக போராடினால் இவ்வகை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


எடையை குறைக்க


தக்காளி உடல் எடையை குறைக்க உதவும். எனவே எடையை குறைக்க டயட்டில் இருந்தால், கண்டிப்பாக தினமும் பல தாக்காளிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.


சிறந்த உணவாக விளங்கும் இது, சாலட் மற்றும் சாண்ட்விச்சாகவும் விளங்கும்.


தக்காளியில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், அவை எடையை குறைக்க உதவுவதோடு, வயிற்றையும் நிறைக்கும்.


மேலும் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவாகவும் இது விளங்கும்.

வியாழன், 19 செப்டம்பர், 2013

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பாகற்காய்




நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்துடன் வாழ இயற்கை அளித்த அருமருந்தான பாகற்காயின் மருத்துவ குணங்களும் பயன்படுத்தும் முறையும் பார்க்கலாம்.


பாகற்காயின் இலையை சிறிது சாறு எடுத்து ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ காய்ச்சல் நின்று விடும்.


பாகற்காயின் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும்.


இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகற்காயின் இலைச் சாற்றில் காசிக் கட்டியை (கத்தைக் காம்பு) உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தமாகி சிரங்கு உதிர்ந்து விடும்.


ஒரு பிடி கொடுப்பாகற்காயின் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.


பாகற்காயின் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கடித்த விஷம் நீங்கும். அதே இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.


நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை தொடர்ந்து ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.


சர்க்கரை வியாதிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். ஓர் அவுன்ஸ் பாகற்காயின் இலைச் சாற்றுடன் சமபங்கு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்தலாம்.


நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.


உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.



1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.


2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.


4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.


5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.


6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.


7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.


8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.


9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.


10. பொதுவாக மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. பாகற்காயின் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.


11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.


12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.


13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.


14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.!

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு


திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது.


தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4,411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சிவிலியன் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது.

 

இத்தகைய உயரத்தில் விமானத்தின் உந்துசக்தி குறைவாக இருக்கும் என்பதால் நீளமான ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 4,200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நியூயார்க்கின் ஜான் எப் கென்னடியில் உள்ளதைவிட 242 மீட்டர்தான் குறைவாக உள்ளது. பயணிகளுக்கும்கூட காற்றழுத்தக் குறைவினால் வரும் நோய்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


நேற்று முதல் இந்த புதிய விமான நிலையத்திலிருந்து பயண சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. பொதுவாக இங்கிருந்து பேருந்து மூலம் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவிற்குச் செல்ல இரண்டு நாட்கள் பிடிக்கும். இந்த விமானப் பயணம் அதனை 65 நிமிடங்களாக குறைக்கின்றது. இந்த மாத இறுதிக்குள் மற்ற சேவைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


திபெத்தின் நுழைவாயிலாக விளங்கும் இந்தப் பகுதியின் கீழ் வாழும் திபெத்திய மக்களின் மத்தியில் உள்ள எதிர்ப்பைக் குறைத்து, பொருளாதார வளர்ச்சியை நிலைப்படுத்தி ஒரு சுற்றுலாப் பகுதியாக இந்த இடத்தை மேம்படுத்த சீனா முயன்று வருகின்றது.

2012 - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்


2012 - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்

இதுவரையிலும் இல்லாத அளவு, 2012ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பாரிய அளவில் வளர்ச்சியை கண்டது என்று சொன்னால் அது மிகையல்ல.

கணனி, கைபேசிகள், டேப்லட்கள், மடிக்கணனிகள் என அனைத்துமே மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் புது புதிதான வசதிகளுடன் அறிமுகமாகி கொண்டு தான் இருந்தன. குறிப்பாக இந்த ஆண்டில் மருத்துவம், ஆராய்ச்சி, விஞ்ஞானம் என அனைத்திலுமே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.


கணனி

இன்றைய நவீன உலகில் மக்களுக்கு ஏற்றவாறு புதிய வசதிகளுடன், மிகக் குறைந்த விலையில் கணனிகள், டேப்லட்கள் அறிமுகமாகின. ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு, தங்களது பயனாளர்களுக்கு ஏற்றவகையில் புதிது புதிதாக வசதிகளை அறிமுகப்படுத்தின.

மிக முக்கியமாக 2012-ல் கண்ணாடி இல்லாமல் முதன் முறையாக மடிக்கணனி அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக அவுஸ்திரேலியாவை சேர்ந்த கணனி விஞ்ஞானிகள் மனித ரோமத்தை விடவும், பத்தாயிரம் மடங்கு மெலிதான மின் கம்பிகளை உருவாக்குவதில் வெற்றி கண்டனர்.

இவ்வாறான கம்பிகள் குவாண்டம் கணனிகள் என்று சொல்லப்படுகின்ற அதிவேகத் திறன் கொண்ட அடுத்த தலைமுறைகளை கணனிகளை உருவாக்குவதற்கு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றிலும் மிக முக்கியமாக ஆன்ட்ராய்ட் இயங்குதளத்தில் செயற்படும் குளிர்சாதன பெட்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் தீவிரமாக ஆர்வம்காட்டின.

1. ஆண்ட்ராய்ட் குளிர்சாதனப்பெட்டிகள் விரைவில் அறிமுகம்
2. கண்ணாடி இல்லாமல் அறிமுகமான உலகின் புதிய மடிக்கணனி
3. அடுத்த தலைமுறை கணணிக்காக கண்டுபிடிக்கப்பட்ட மனித ரோமத்தை விட மெலிதான மின் கம்பிகள்
4. சீனாவில் முதல் சூப்பர் கணணி அறிமுகம்

 

விண்டோஸ் 8


மக்களிடம் அதிகளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மைக்ரோசாப்டின் புதிய வரவான விண்டோஸ் 8. இதன் முக்கிய சிறப்பம்சம் 3 வயது குழந்தை கூட இதனை மிக எளிதான முறையில் பயன்படுத்தலாம் என்பதுவே. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

1. உலகமெங்கும் இன்று வெளியிடப்பட்டது விண்டோஸ் 8



ஆப்பிளின் சாதனங்கள் 




ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சின் மறைவுக்கு பின்னரும், புதிதாக சாதனங்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், நம்பர்-1 இடத்தை இழந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் தற்போது சாம்சங், கூகுள் போன்ற நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கு ஏற்ற வகையிலும், மிக குறைந்த விலையிலும் போட்டியாக சாதனங்களை களமிறக்க ஆரம்பித்துள்ளன.

இதன் காரணமாக ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியிலும் மவுசு குறைந்தது என்றே சொல்ல வேண்டும். இதற்கு மத்தியிலும் ஆப்பிளின் iPad 3, iPad Mini Tablet, iPhone 5 போன்றவை மிகுந்த வரவேற்பை பெற்றன.

1. புதிய ஐபேட்3 அறிமுகம் (வீடியோ இணைப்பு)
2. பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் அறிமுகமாகி​யது iPad mini
3. அப்பிள் அறிமுகப்படுத்தும் புதிய iPad Mini
4. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 5 வெளியானது 
5. ஆப்பிள் ஐ-கார் ரெடி: ஸ்டீவ் ஜாப்ஸின் கனவு நனவானது

இதிலும் குறிப்பாக எங்களது தொழில்நுட்பங்களை அப்படியே கொப்பி அடித்து வெளியிட்டு விட்டது என சாம்சங் மீது ஆப்பிள் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து 5,500 கோடி இழப்பீடு வழங்கும் படி சாம்சங் நிறுவனத்திற்கு அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

1. காப்புரிமை வழக்கு: சாம்சங்கை வென்றது ஆப்பிள்
2. சம்சங் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்தது அப்பிள்
3. அப்பள் நிறுவனத்தின் பங்குகள் சரிவு: முன்னணியில் சாம்சங், கூகுள்


பேஸ்புக்


மேலும் முக்கியமாக பேஸ்புக் நிறுவனம் மே மாதம் 18ம் திகதி முதல் அமெரிக்காவின் முன்னணி மின் பங்குச் சந்தையான NASDAQ ல் தனது பங்குவிற்பனையை தொடங்கியது. ஆனால் மிகப்பெரிய அளவில் சாதிக்கலாம் என காலடி எடுத்த வைத்து பேஸ்புக் நிறுவனத்துக்கு, பலத்த அடியாக அமைந்தது.

1.  பொது விற்பனைக்கு வந்தது பேஸ்புக்கின் பங்குகள் 
2.  சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி: பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது


கூகுள்


தேடியந்திரம் என்றதுமே நம் அனைவரின் மனதிலும் தோன்றுவது கூகுள் தான். அந்த அளவுக்கு பல்வேறு வகையான புது வசதிகளை, தன் பயனாளர்களின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு தினம் தினம் அறிமுகப்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆண்டில் மிக முக்கியமாக புதிதாக டேப்லட்டை அறிமுகப்படுத்தியது.

மேலும் விண்வெளியில் பறந்தபடியே, சாட்டிங் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தது. இந்நிலையில் கூகுளின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த மரிஸா மேயர், யாகூவின் CEOவாக நியமிக்கப்பட்டார்.

1. விண்வெளியில் பறந்தபடி சாட்டிங்: கூகுளின் புதிய சாதனை
2. கூகுளின் புதிய டேப்லெட் 
3. யாஹூவின் CEOவாக கூகுளின் துணைத் தலைவர் நியமனம்



மருத்துவம்


2012ஆம் ஆண்டில் இதுவரையிலும் இல்லாத அளவு பல்வேறான சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. மிக முக்கியமாக செயற்கையான முறையில் எலும்புகள், மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டனர். இதுதவிர ஆய்வகத்திலேயே எலியின் உயிரணுக்கள், கலப்பின குரங்குகளையும் உருவாக்கி சாதனை படைத்தனர்.

1. எலியின் உயிரணுக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
2.  செயற்கை முறையில் கலப்பின குரங்குகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
3.  எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு
4.  மனித மூளை செல்களுக்கான மாற்று தீர்வை கண்டுபிடித்து மருத்துவர்கள் சாதனை
5.  தோலிலிருந்து மனித மூளை இழையங்கள்: விஞ்ஞானிகள் சாதனை
6.  செயற்கையாகத் தயாரிக்கப்​படும் எலும்பு
7.  செயற்கையாக மனித மூளையை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்



அறிவியல் மற்றும் விஞ்ஞானம்


விஞ்ஞான ரீதியாக அனைவரின் எதிர்பார்ப்பும், பூமியை தவிர வேறொரு கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என்பது தான். இதற்காக பல்வேறு விதமான ஆராய்ச்சிகளும் நடந்த வண்ணம் தான் உள்ளன. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப சூழ்நிலைகள் குறித்து நாசாவின் கியூரியாசிட்டி ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. இதற்கிடையே நமது சூரியக்குடும்பத்திலும், சூரியக்குடும்பத்திற்கு அப்பாலும் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1. சந்திரனில் வேற்றுக்கிரக வாசிகளின் கால்தடங்கள் கண்டுபிடிப்பு
2. உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் கண்டுபிடிப்பு
3. சூரிய மண்டலத்தில் புதிய பகுதி கண்டுபிடிப்பு
4. விண்வெளியில் பூமியை போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு
5. சூரிய குடும்பத்திற்கு அப்பால் புதிய கிரகம் கண்டுபிடிப்பு 
6. வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு
7.  சனியின் துணைக்கிரகத்தில் குட்டி நைல் நதி: ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு



ரோபோ


இனிவரும் காலங்களில் மனிதர்களுக்கு எந்தவித வேலையும் இருக்காது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் அதற்கு ஏற்றாற் போல், பல்வேறு விதமான வேலைகளை செய்யக்கூடிய ரோபோக்கள் 2012ஆம் ஆண்டில் அறிமுகமாயின.

1. ஓவியம் வரையும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை
2. உங்களின் எழுத்து வேலைகளை செய்யும் ரோபோ
3. 18 விதமான பணிகளை செய்யும் ஒரே ஒரு ரோபோ 
4. பிரச்சினைக​ளைத் தீர்க்கவல்​ல மென்மையான ரோபோ 
5. படிக்கட்டு​க்களில் ஏறக்கூடிய ரோபோக்களை வடிவமைத்து விஞ்ஞானிகள் சாதனை  
6. தீ அணைக்கும் ரோபோ 
7. தலையை கழுவி சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை  

 

ஹிக்ஸ் போஸான்


இவ்வாறான கண்டுபிடிப்புகளுக்கு மத்தியிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியது கடவுளின் அணுத்துகளான ஹிக்ஸ் போஸனை கண்டுபிடித்தது தான். கண்ணுக்கு புலப்படாத ஹிக்ஸ் போஸான் என்ற துகள் இருப்பதை CERN ஆராய்ச்சி கழகம் கண்டறிந்தது.

கடவுளின் அணுத் துகள் "ஹிக்ஸ் போஸான்" கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது


முதல் மனிதன் குரங்கு இல்லை.. அணில்


மனிதன் குரங்கிலிருந்தே தோன்றினான் என இதுவரையிலும் நம்பப்பட்ட போதிலும், அணில் தான் நமது மூதாதையர் என கண்டறிந்தது பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்: சொல்கிறது புதிய ஆய்வு

இப்பவே கண்ணே கட்டுதே



இப்பவே கண்ணே கட்டுதே

இந்த பாலத்தை பார்த்தவுடன் இப்பவே கண்ணை கட்டுதே சொல்ல தோன்றுகிறதா. டெக்சாஸ் மாகாணம், ஹஸ்டன் ஸ்பாக்ஹெட்டி பவுல் பாலத்தைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். நமக்கு வியப்பை ஏற்படுத்தினாலும், முதன்முதலாக இந்த சாலையில் செல்வோர்க்கு கொஞ்சம் தலையை பிய்த்துக் கொண்டுதான் கரை சேர்ந்திருப்பர்.