திங்கள், 22 அக்டோபர், 2018

ஓர் வித்தியாசமான தேடல்......


அரசியலின் இலை மறைகாய் 'எம்.எஸ்.எம். மிஸ்வர்'

இன்று (ஒக்டோபர்23) அவருக்கு 50 வயது. வல்ல இறைவன் அவருக்கு அருள்புரியட்டும்



அரசியல் தீர்க்க தரிசனம்

'நாட்டின் எந்தவொரு மாவட்டத்திலும் வெற்றிலை சின்னத்தின்
கீழ் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களில் மஸ்தான் மாத்திரமே வெற்றியீட்டும் வாய்ப்பு இருக்கிறது' - மிஸ்வர் (2015 ஓகஸ்ட்
05: துண்டுப்பிரசுரம்)​ அதே போன்று மஸ்தான் மாத்திரமே வெற்றியீட்டினார்.​ 


'மஸ்தான் அவர்கள் வெற்றியீட்டினால் மீள்குடியேற்றம் மற்றும்
புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு பதவி வழங்கப்படும்' - மிஸ்வர் (2015 ஓகஸ்ட் 05: துண்டுப்பிரசுரம்)


மிஸ்வர் தனது அரசியல் தீர்க்க தரிசனங்களாக வெளியிட்ட விடயங்கள்,
முக்கிய பல மாற்றங்கள், இலங்கை அரசியல் வரலாற்றில் எழுதப்பட்ட நிதர்சனங்களாகும்.


மிஸ்வரின் தப்பாத கணக்குள்
பஷில், டளஸ் நம்பினர்! சேகு, ஹாபிஸ் நம்பவில்லை!
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை விட மஹிந்த ராஜபக்ஷ சுமார் 20 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவார் என மிஸ்வர் தனது அரசியல் கணக்கீட்டை வெளியிட்டிருந்தார். எல்லாத் தேர்தல்களிலும் மிஸ்வரின் கணக்கீட்டை வளமைபோன்று நம்பும் பசில், டளஸ் ஆகியோர் நம்பினர். 

ஆனால் அரசியல் தீர்க்கதரிசி என்று வர்ணிக்கப்படும் சேகு அவரது பிரத்தியேக செயலாளர் மிஸ்வரின் தீர்க்கதரிசனத்தை வளமைபோன்று கேட்டபோதும் அதை நம்பவில்லை. அவரது அப்போதைய நண்பர் ஹாபிஸும் அதனை நம்பியிருக்கவில்லை. அவர்கள் இருவரும் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியதோடு, பொன்சேகாவுக்கு தங்களது ஆதரவை அளித்தனர். 

இருவரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை எதிர்பார்த்து இவ்வாறு ஆதரவளிக்க முற்பட்டிருக்கலாம் என யூகிப்பதாக மிஸ்வர் தெரிவித்திருந்தார்.

சுதத் நம்பினார்! பிரதமர் நம்பவில்லை

இலங்கையில் பதவியிலிருந்த பெரும்பாலான ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்களினதும் உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளராக தொடர்ந்தும் செயற்பட்டுவரும் சுதத் சில்வா தேர்தல் காலங்களின் போது மிஸ்வரிடம் அரசியல் நிலைமைகள் பற்றி வினவுவார். 

அதற்கமைய, 2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என சுதத் மிஸ்வரிடம் வினவிய போது பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு 108 (105) ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 89 (82) ஆசனங்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 22 ஆசனங்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 05 ஆசனங்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு 01 ஆசனமும், மலையக மக்கள் முன்னணிக்கு 01 ஆசனமும், ஹெல உறுமயவுக்கு 09 (05) ஆசனங்களும் கிடைக்கலாம் என தெரிவித்து தான் வகுத்த தரவுகளின் அடிப்படையிலான கணக்குகளை அவரிடம் கொடுத்திருந்தார். இது அவ்வாண்டு (2004) மார்ச் 31 ஆம் திகதி வெளியான நவமணி பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, அதன் பிரதியொன்றை எடுத்த சுதத், அப்போதைய பிரதமருடன் விமானத்தில் ஒன்றாக பயணித்த வேளையில் அதனை காட்டியுள்ளார். இதனை கேட்ட பிரதமர், சிரித்து விட்டு (பிஸ்ஸுத சுதத்) 'பைத்தியமா? சுதத்' என கூறியதுடன், இவ்வாறெல்லாம் நடக்காது எனவும் நாமே வெற்றிபெறுவோம் என தெரிவித்ததாக, சுதத் சில்வா நடந்தவற்றை மிஸ்வரிடம் எடுத்துக்கூறியிருந்தார்.

ஒரு வாரத்தின் பின்னர் தேர்தலும் வந்தது, பெறுபேறுகளும் அவ்வாறே அமைந்தன. மறுநாளே சுதத் மிஸ்வரின் காரியாலயத்திற்கு வந்து 'ஒயா கியபுதெய ஹரி' (நீங்கள் சொன்னது சரி) எனக்கூறி வியந்து வாழ்த்தியிருந்தார்.

மிஸ்வர் பாடசாலையில் இருந்து வெளியேற்றம்! மஸ்தான் ஓடி தப்பித்துக்கொண்டார்!

1989 ஆம் ஆண்டு ஏறக்குறைய 30 வருடத்திற்கு முன்னர் மிஸ்வர் தனது 19 வயதில் பாடசாலையில் படிக்கும் போதே பாராளுமன்றத்தேர்தலில் உலகில் வயதில் குறைந்த பாராளுமன்ற அபேட்சகராக போட்டியிட்டார். இது தொடர்பில் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதனை அவர் படித்த பாடசாலையின் ஆசிரியர் அஸ்ஹர், அதிபர் ஹனிபாவிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மிஸ்வர் உடனடியாக பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, அத் தேர்தலுக்கான துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டுக்கொடுத்து உதவிய மஸ்தான், அச்சம்பவத்தில் அதிபருக்கு அகப்படாது அங்கிருந்து ஓடி அவரது கடுவலை வீட்டில் இருந்து விட்டார்.

30 வருடத்தின் பின்னர் மஸ்தான் 2015 பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். இதற்காக மிஸ்வரும் அயராது உழைத்தார். பல்வேறு துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டு மஸ்தானின் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு உரமூட்டினார். 

அதனைத் தொடர்ந்து மிஸ்வர் கூறிய அதே (மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர்) அமைச்சையும் பெற்று, அதன் பதவியேற்பு விழாவையும் கொண்டாடினார். இவ்விழா சிறப்பாக நடக்க மிஸ்வர் உதவியிருந்தார். அன்று மிஸ்வரையும், மஸ்தானையும் வெளியேற்ற முற்பட்ட, அன்றைய பாடசாலை அதிபர் ஹனிபா அந்த நிகழ்வில் கலந்து கொண்டமை விதியின் விளையாட்டு என்றே சொல்ல வேண்டும். அன்றைய விழாவின் சிறப்பம்சம் அதுவென்பது, மிஸ்வருக்கும், மஸ்தானுக்கும், (பாடசாலை அதிபருக்குமே) தெரிந்த விடயமாகும். (அது இன்று உங்களுக்கும் தெரிய வந்துள்ளது)

யார் அந்த மிஸ்வர்?

- 1982 இல் அதாவது தனது 14 வயதில், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேகடுவவின் அரசியல் ஆதரவாளராக செயல்பட்டார்.
-1984 இல் தனது 16 ஆவது வயதில், பாராளுமன்ற இடைத்தேர்தலின் போது மஹர பிரதேசத்தில் போட்டியிட்ட நடிகர் விஜயகுமாரதுங்கவின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டார்.
-1989 ஆம் ஆண்டு தனது 19 ஆவது வயதில், பாராளுமன்றத் தேர்தலில் உலகில் வயதில் குறைந்த அபேட்சகராகவும் களமிறங்கினார்.
- 1990 இல் தனது 20 ஆம் வயதில், ஜனாதிபதி ரணசிங்க பிரமேதாசவின் தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் உறுப்பினராகவும் பங்குபற்றினார்.
- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் செயலாளராக கடமையாற்றினார்.
- ஊடகம்இ பெருந்தெருக்கள், கிராமிய கைத்தொழில், ஏற்றுமதி அபிவிருத்தி, விளையாட்டு, அரச தொழில் முயற்சி கண்டி அபிவிருத்தி போன்ற 6 பிரதியமைச்சர்களின் செயலாளராக கடமையாற்றினார். கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்...
- கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் ஊடகத்துறை பட்டம் பெற்றவர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் 2020 பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என மிஸ்வரிடம் கேட்டபோது,
'அரசியலில் எதுவும் நடக்கலாம், தனது நிலைப்பாடு தொடர்பில் விரைவில் அறிவிப்பேன்' என சிரித்துக்கொண்டே தலையை நெளித்து மௌனம் சாதித்தார்.

தொகுப்பு
(ஜ-இ)

விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட இராணுவத்தை சந்தித்த போது பிரதமருடன் மிஸ்வர்...

அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் கடமை புரிகையில் ஜனாதிபதி அவர்களை சந்திக்க வந்த பிரமுகர்களுடன் மிஸ்வர்...
கொரிய விஜயத்தின் போது அப்போதைய பிரதமர் தி.மு. ஜயரத்னவுடன் மிஸ்வர்...
கொரிய விஜயத்தின் போது மிஸ்வர் கொரிய நாட்டு  தலைவரை சந்தித்த போது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக