சனி, 5 அக்டோபர், 2013

எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு - இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்......




மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது.


வெறும் மாணவர்களாக பள்ளிக்கு வரும் சிறுவர்களுக்கு ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், படிப்பு என அறிவுக் கண்ணை திறந்து வைத்து அவர்களை சாதனையாளர்களாக்குவது ஆசிரியர்களே. அவர்களைக் கொண்டாடும் நாள் இன்னாள்.


இன்று பல பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு இனிப்பு வழங்கியும், மலர் கொடுத்தும் மாணவ, மாணவிகள் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.


'எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களை வாழ்க்கை என்றால் என்ன? இதில் மாணவ, மாணவி சமூகத்தின் பங்கு எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு தெளிவை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றனர். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை முகவரியில்லாத கடிதத்திற்குச் சமம். இது போல் தான் மாணவ சமூகமும் குறிக்கோள், லட்சியம் இல்லாமல் இருந்தால் எதிர்காலம் ஓர்; இருண்ட பாதை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவ மனதில் நன்கு பதிய வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களின் முகத்தில் ஓர்; மகிழ்ச்சி தோன்றும்.


இதனை சொல்வதை விட உணர்வுப் பூர்வமாக உணர முடியும். தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு, நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல, மாறாக உயிரூட்டுபவர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ, மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக் கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர்.அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.


ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகுஎன்பதனை திருக்குறளின் முதல் கவிதையாக அமைத்துள்ளார் வள்ளுவர்.எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவை.


இவ்வாறாக மனித வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத, மனித சமூகத்தின் முதுகெலும்பாக விளங்குகின்ற ஆசிரியரைகௌரவப்படுத்தும் நோக்கில் பல்வேறு சமய கலாசார மற்றும் நிறுவன நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளன. இவை மனித நாகரிகத்தின் வளர்ச்சிப்படிகள் எனின் மிகையல்ல.


ஒக்டோபர் 05 ‘உலக ஆசிரியர் தினம் World Teacher’s Day’உலகளாவிய ரீதியில் பல்வேறு விதமாகக் கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் ஆசிரியரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக, ‘ஆசிரியரின் தன்மையினைக் கருத்திற்கொண்டு அங்கீகாரமளித்தல்என்ற கூற்றுடன், பொதுக் கல்விக்காக அல்லது சிறப்புத் துறையொன்றுக்காக அவர்களினால் ஆற்றப்பட்டு வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் முகமாக, இவ் உலக ஆசிரியர் தினத்தை அறிவித்து, வருடாந்தம் கொண்டாடப்பட்டும் வருகின்றது.


இத் தினம் கொண்டாப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. சில நாடுகளில், கற்றல் கற்பித்தல் உள்ளிட்ட ஆசிரியரின் முக்கியத்துவத்தை மையப்படுத்திய வைபவங்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இன்னும் சில நாடுகளில் ஆசிரியர்களுக்கான மேலதிக பயிற்சிப் பாசறைகள், ஆசிரியர் தொழில் வழங்கும் ஏற்பாடுகள் (பல்கலைக் கழக மாணவர்களுக்கு அல்லது தகைமையுள்ளவர்களுக்கு) மற்றும் ஊடகங்களில் ஆசிரியரின் வகிபாகத்தை தரமுயர்த்துவதற்கான நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன. ஆசிரியர் தினத்தையொட்டி சில நாடுகளில் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்படுவதுடன், வாழ்த்து மடல்கள், மின் வாழ்த்தட்டை (e-card) போன்றவை அன்பளித்தல் பரவலாக நடைபெறுகின்றது. சில பாடசாலைகள் ஆசிரியர்களுக்கு உணவு விருந்தளிப்பதும் காணப்படுகின்றது.


பொதுவாக ஆசிரியரை தெய்வீகத்தன்மையுடன் மதித்து மரியாதை செய்யும் வழக்காற்றினை ஆசிய நாடுகள் கொண்டுள்ளன. அவரவர் சமய கலாசார பின்னணிகளுக்கு ஏற்ப இதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் உள்ளன.


இலங்கை சிங்களவர் மற்றும் தமிழர் ஆசிரியர்களுக்கு வெற்றிலையைக் கொடுத்து காலில் விழுந்து வணக்கம் செலுத்துவர். சீனர்கள் ஆசிரியரின் வினாவுக்கு விடையளிப்பதாயினும் ஏதாவதொரு விடயத்தைக் கேட்பதாயினும் இரு கைகளையும் உயர்த்தி எழுந்து நின்று கூறல் கேட்டலை மேற்கொள்வர். மேற்கு நாடுகளின் மாணவர்கள் தாம் அமர்ந்த இடத்தில் இருந்து கூறல் கேட்டல் செய்வதை எவரும் குறையாகக் கருதுவதும் இல்லை.


இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் ஒக்டோபர் 6 ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தைகொண்டாடுகின்றன. வெவ்வேறு தினங்களில் இத் தினத்தை கொண்டாடும் சில நாடுகளை நோக்குவோம்:


தாய்லாந்து ஜனவரி 16 : 1956 ஆம் வருடம் முதல் கொண்டாடப்படும் இத்தினம் பாடசாலை விடுமுறை தினமாகும்.


ஈரான் - மே 02 : 1980 மே மாதம் 02 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னூல் ஆசிரியரும், ஓய்வில்லா ஆசானுமாகிய பேராசிரியர் ஆயதொல்லா மொர்தாஸா மொதாஹ்ஹரி அவர்களை நினைவு கூறும் முகமாகவே இத் தினத்தை ஈரானியர்கள் தமது ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இத் தினத்தில் மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு மலர்ச் சென்டுகளை வழங்குவர்.



ஐக்கிய அமெரிக்கா : மே மாதத்தின் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமை இத் தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் உத்தியோகபற்றற்ற விடுமுறை நாளாகக் கருதப்படும். வாரம் முழுவதும் கலகலப்பான விழாக்கோல பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.


மலேசியா மே 16 : ஆசிரியர் தினத்தை ஹரி குருஎன்ற பெயரிலும் அழைப்பர். நாடு முழுவதும் மிக உற்சாகத்துடன் விமரிசையாகக் கொண்டாடுவர். எனினும் அன்றைய தினம் விடுமுறை நாள் அல்ல.


சீனா : 1931 இல் தேசிய மத்திய பல்கலைக் கழகம் ஆசிரியர் தினத்தை ஸ்தாபித்தது. பிறகு சீனாவின் தத்துவஞாணி கொன்பியூசின் பிறந்த தினமான ஓகஸ்டு 27 க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ந்த அரசியல் பிறழ்வுகளினால் மீண்டும் அது செப்டம்பர் 10 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது. எனினும் இன்றைய சீனர்களில் பெரும்பான்மையினர் மீளவும் கொன்புயூசியசின் பிறந்த தினத்திற்கு (ஒகஸ்டு 27) கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர்.


இந்தியா செப்டெம்பர் 5 : இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான கலாநிதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் முகமாக அன்னாரது பிறந்த நாளில் ஆசிரியர் தினமும் கொண்டாடப்படுகின்றது.


இந்தோனீசியா : 2012 ஆம் ஆண்டுக்குரிய உலக ஆசிரியர் தின கூற்றாக எனது ஆசான் எனது வீரன்’ (My Teacher, My Hero) எனப் பிரகடணப்படுத்தி, செப்டெம்பர் 05 – ஒக்டோபர் 05 வரைஉலக ஆசிரியர் மாதம்என்றும் பிரகடணப்படுத்தியுள்ளமை கவனிப்புக்குரியது.


ரஷ்யா : 1965 முதல் 1994 வரை ஓக்டோபர் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினர். 1994 இன் பின் உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து ஓக்டோபர் 05 ஆம் திகதி கொண்டாடுகின்றனர்.


துருக்கி நவம்பர் 24 : எனினும் இதுவொரு விடுமுறை தினம் அல்ல.


பல்வேறு கண்டங்களில் ஆசிரியர் தினம் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும் நிவ்சீலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஆசிரியர் தினம்கொண்டாடுவதில்லை என்ற தகவல் சற்று அசாதாரணமாகவே இருக்கின்றது.



இத் தலைப்பின் போக்கினை சற்று வித்தியாசப்படுத்தி, சில ஆசிரியர்களும் சில பெற்றோர்களும் இந்த ஆசிரியர் தினத்தை உபயோகிக்கும் விதம் குறித்து ஆக்கபூர்வ விமர்சனப் பார்வையுடன் நோக்க வேண்டிய தேவையும் உள்ளது.


சில பெற்றோர்கள் தமது பிள்ளையின் வகுப்பாசிரியருக்கு அளவில் பெரிய அதிக விலைபொருட்களை தனது பிள்ளையின் கைகளினால் வழங்கிவைக்க ஆசைப்படுவதில் தவறில்லை. அவரவர் சமய கலாசாரம் அநுமதிக்கும் விதத்தில் வணக்கம் செலுத்துவதிலும் தவறில்லை. எனினும் வறிய ஏழை மாணவர்கள் ஏக்கத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாகும் விதமாக இவ்வாறான அன்பளிப்புக்களை வகுப்பறையில் வழங்குவதை விட பாடசாலை அலுவலகத்திலோ அல்லது உரிய ஆசிரியரின் இல்லத்திலோ வழங்கிவைப்பது முன்னரை விட சிறப்பானதாக இருக்கலாம்.


சில ஆசிரியர்களின் நடவடிக்கைகள் சிரிப்பிக்கும் விசனத்திற்கும் உரியது. வகுப்பு மாணவர்களிடம் பணம் சேகரித்து குறிப்பிட்ட பொருட்களை வாங்கி தனக்கு அன்பளிப்பு செய்யுமாறு கூறிய கோமாலிகளும் உண்டு. இன்னும் சிலர் தமக்குக் கிடைத்த அன்பளிப்புக்களை ஆசிரியர் மேசையின் மேல் காட்சிக்கு வைத்து ஏனைய ஆசிரியர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு. அவர்களில் சிலர் தனக்குள் எரியும் நெருப்பை தமது வகுப்பு மாணவர்களின் மேல் கொட்டிய கொடூரமும் நடந்துள்ளது.


ஒரு சில பெற்றோரும் சில ஆசிரியர்களும் நடந்துகொள்ளும் பொருத்தமற்ற இச் செயற்பாடுகளினால் மாணவர்களின் உளநிலை பாதிக்கப்படுகின்றமை இவ்விடம் கவலையுடனும் கண்டிப்புடனும் நோக்கப்பட வேண்டிய விடயங்களாகும். மேற்சொன்ன பிழையான முன்னுதாரணங்களை பெற்றோர் ஆசிரியர் சமூகங்கள் எதிர்வரும் ஆசிரியர் தினத்திலிருந்து தவிர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கலாம்.


இருபக்க விடயங்கள் இவ்வாறிருக்க தந்தையர் தினம், தாய்மார் தினம் போன்ற தினங்களுக்குக் கிடைத்துள்ள (இலங்கையில் குறைவானாலும்) விளம்பரமும் பிரபல்யமும் ஆசிரியர் தினத்திற்குக் கிடைக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அன்பளிப்பு செய்வதற்கென தயாரிக்கப்பட்ட விற்பனைப் பொருட்களும் காண்பதற்கு அரிது. ஒரு வகையில் காதல் எனும் மனித உணர்வை சந்தைப் பொருளாகி (Valentine’s Day) கேவலப்பட்டது போன்று கல்வி வியாபாரிஅல்லாத உத்தம ஆசான்களின் மரியாதை சந்தையில் விற்கப்படாமை நன்மையாகவே தோன்றுகின்றது.


எத் தேசமாயினும், எக் காலப் பிரிவாயினும், எம் மனித சமூகமாயினும் ஆசிரியர்என்ற பிரிவினர் இரண்டு கருத்துக்கு இடமில்லாமல் மரியாதைக்குரியவர்களே. ஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் பாய்ச்சுகின்றவர்களும் அவர்களே. நமக்காக தம்மை அர்ப்பணித்த இவர்கள் எமது மனதளவு நன்றிக்கும், செயலளவு மரியாதைக்கும் உருத்துடையவர்களே.


அந்த வகையில் அவர்களை கௌரவித்து, மரியாதை செய்து, நினைவு கூறுவதற்கு வருடத்தில் ஒரு கணம், ஒரு ஆசிரியர் தினம்’, அவசியம் தான் !!

கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்! (வீடியோ)

www.youtube.com/embed/8Exxx9KEv3U
இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பேரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார்.


அந்த பெண் அவரை கத்தியால் தாக்க முயற்சித்த போதிலும் இவர் அந்த பெண்ணை தாக்கவில்லை. இதனால் அந்த கடையின் உதவியாளர் பாராட்டப்பட்டுள்ளார்.


59 வயதான மைக்கல் வைப்ரோ என்பவர் பணியாற்றும் எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்குள் மது அருந்திய நிலையில் எட்டு அங்குல நீளமான கத்தியுடன் புகுந்த 29 வயதான அனா சேம்பர்ஸ் என்ற பெண் , காசாளர் இருக்கும் பகுதியில் இருந்த அவரை தாக்க முயற்சித்தார்.


மைக்கல் அந்த பெண்ணின் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள பெண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத கையில் கத்தியை பிடிங்க முயற்சித்தர். இதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.


அந்த பெண் தொடர்ந்தும் போத்தல் ஒன்றை உடைத்துடன் தாக்குதலை தொடர்ந்தார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் இருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளன.


இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் சேம்பர்ஸை கைதுசெய்தனர். சேம்பர்ஸ் பொலிஸாருடன் மல்லுகட்டினார்.


தனது நாய் குட்டி இறந்த கோபத்தில் அந்த பெண் இவ்வாறு வன்முறையாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


எனினும் கேன்டர்பேரி கிரவுண் நீதிமன்றம் இந்த குற்றத்திற்காக அந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?



நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில்
உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிட
முடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டுவிட்டுக்
கீழே சின்னக் கோடு போட்டால்...

தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான் ஆனால்,
கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள். இந்த
ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்
விவேகானந்தர், சச்சின், சாப்ளின்,
வின்ஃப்ரே.
.
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள்
வைத்தால்...

ரொமான்டிக் பார்ட்டி .
உடை மாற்றுவதுபோலக் காதலன் /
காதலியை மாற்றுவீர்கள் .
மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் .
அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
.

3) கையெழுத்துக்குக்
கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...

கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .
பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்
பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.
டாக்டர் விக்ரம் சாராபாய்.
.

4) உங்கள் கையெழுத்தின் கீழ் புள்ளியோ,
கோடோ கிடையாதா ?

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்தான் .
அடுத்தவர்கள் கருத்து சொன்னால்
கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்
ஒபாமா இருப்பார் .

.
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல்
கையெழுத்துப் போட்டால்...

கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்
சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,
கபில்தேவ்.

.
6) பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,
கோழி கிண்டிய மாதிரி புரியாத
கையெழுத்துப் போட்டால்...

புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,
யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .
ஒரு வரி பாராட்டுதலுக்கே
மயங்கி விடுவீர்கள் . இதில் இந்திரா காந்தி,
டாக்டர் ஜாகிர் ஹுசேன் .
.

7) முழுப் பெயரையும் பொறுமையாகக்
கையெழுத்துப் போட்டால்...

நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும் தகுந்த
மாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,
உங்கள் கருத்துக்களில் தெளிவாக
இருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன்,
மன்மோகன்சிங் இதில் அடங்குவர் .
.

8).வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...

அம்மாஞ்சி . பாசமாகவும்,
உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் . இந்த
வகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி,
மதர் தெரஸா .
.

9) கையெழுத்துக்குக் கீழே திகதி, வருடம்
போடுவீர்களா ?

ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்
கலை பிடிக்கும் . முடிவெடுக்க
நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த
ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி . சர்.சி.
வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு...?

திங்கள், 30 செப்டம்பர், 2013

இன்று சர்வதேச சிறுவர் தினம்






குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் இன்றைய தினம் இது (ஒக்டோபர்  1 ஆம் திகதி)  கொண்டாடப்படுகிறது.  எனினும் ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


அதோடு இன்று உலக முதியோர் தினமும் கொண்டாடப்படுகிறது.


உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் இந்த நாளிலே நினைவுகூறப்படும். ஏனெனில் சிறுவர் துஷ்பிரயோகம் உலகமெங்கிலும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதனை இல்லாமல் ஒழிக்க பல நாடுகள் பல சட்டங்களை கொண்டுவந்தாலும் இது ஓய்ந்த பாடில்லை. பல காரியங்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறுவதால் பிற்காலத்தில் அவர்கள் ஒரு வன்முறையாளர்களாக வருவதற்கான சாத்தியமே உண்டு.


சிறுவர்களின் அடிப்படை உரிமையான கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். பல சிறார்கள் இன்றைய நாளை சந்தோஷமாக கொண்டாடினாலும், நாம் அறியாத பல சிறு உள்ளங்கள் வேதனையிலும், கஷ்டத்திலும், சித்திரவதைகளிலும் தங்கள் காலத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான சிறுவர்களை நாம் இன்றைய நாளில் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்காக நாம் அவர்களுக்காக பிரார்த்திப்பது நம் கடமையாக இருக்கின்றது.    


சர்வதேச சிறுவர் தினம் - June 1
பொதுவான உலக சிறுவர் தினம் - November 20

                                                  

எதிர்கால உலகின் தலைவர்களாகவும் இந்த உலகை காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள். இளமையில் கல் சிலையில் எழுத்து எனும் வாக்கிற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும் சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகிறது. அதற்கமைய உலகளாவியரீதியில் ஏற்படுகின்ற யுத்தங்கள் உள்நாட்டு பிரச்சினைகள் என்பன அதிகளவில் நேரடியாக சிறுவர்களேயே பாதிக்கிறது.


மேலும் சமூகத்திலுள்ள சில விசமிகளின் செயற்பாடுகளால் சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்  எனும் நோக்கோடு அவர்களை பாதுகாப்பதற்கு ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 1 ம் திகதி சர்வதேச சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.


சிறுவர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களின் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கென ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1989ம் ஆண்டு முதல் சர்வதேச சிறுவர் தினத்தை பிரகடனப்படுத்தியது. எனினும் கடந்த 1924 ம் ஆண்டிலேயே சிறுவர்கள் முதன் முதலில் சிறுவர் உரிமைகள் தொடர்பிலான கொள்ளை வெளியிடப்பட்டது. அதன்பின்னர் கடந்த 1959 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் சிறுவர்களுக்கான சகல உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.


இந்நிலையிலேயே கடந்த 1979ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு சிறுவர்கள் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய கடந்த 1989 ம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் சிறுவர் உரிமைகள் தொடர்பான கொள்ளை பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.


இதனிடையே கடந்த 1954 எம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் சர்வேதச சிறுவர் தினத்தை அமுல்படுத்தும் பொறுப்பு யுனிசெப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கமைய யுனிசெப், யுனெஸ்கோ மற்றும் சேவ் த சைல்ட போன்ற அமைப்புக்கள் என பல்வேறு செயற்திட்டங்களை முன்வைத்து செயற்பட்டுவருகிற்னறன. 

                                                  

18 வயதிக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் என ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சாசனம் வரையறை செய்துள்ளது.

•    வாழ்வதற்கும் முன்னேற்றுவதற்குமான உரிமை

•    பிறப்பின் போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை..

•    பெற்றோரை தெரிந்துகொண்டு அவர்களது பாதுகாப்பை  பெற்றுக் கொள்வதற்கான உரிமை

•    பெற்றோரிடமிருந்து  தம்மை       தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை..

•    கருத்தை வெளிப்படுத்தும் உரிமை…

•    சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப் படி நடப்பதற்கும் சமயம்       ஒன்றை       பின்பற்றுவதற்குமான உரிமை…

•    பொருளாதார சுரண்டல்களிலிருந்து  பாதுகாத்துக்கொள்ளும் உரிமை..

•    பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்        உரிமை

•    சித்திரவதைகள், தண்டனைகளிலிருந்து தவிரித்துக்        கொள்ளும் உரிமை…

•    சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை

என சிறுவர்களுக்கு  பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும் உலகளாவிய ரீதியில் இவற்றில் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகிறதா என்பது. கேள்விக்குறியான விடயம். இதனிடையே சிறுவர்கள் உடல் ரீதியான துஷ்பிரயோகம் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகம் உணர்வு ரீதியான துஷ்பியோகம் புறக்கணிப்பு ரீதியான துஷ்பிரயோகமென பலவழிகளில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். 

உலகில் வாழ்கின்ற மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் சிறுவர்களாவர். இவ்வாறு எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் இருக்கும் சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுகின்றனர்.  ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிவித்தலின் படி ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சிறுவர்கள் யுத்தத்தால் வழங்கப்படுகின்றனர். மேலும் 2 இலட்சத்து 50 ஆயிரத்குக்பும் அதிகமான சிறுவர்கள் யுத்தங்களில் போர்வீரர்களா செயற்பட்டு வருகின்றனர்.


மேலும் 12 மில்லியனுக்கும் அதிமான சிறுவர்கள் பல்வேறு காரணங்களினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறு நிர்க்கதிக்குள்ளான சிறுவர்கள் தவறான பாiயி;ல் சென்று பல்வே குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவதற்கும் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. 


இந்நிலையில் ஒவ்வொரு நாடுகளும் சிறுவர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற அடிப்படையில் அதற்கென பல்வேறு  நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. எனினும் இன்று உலகில் பல்வேறு நாடுகளில் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதல் , பாலியல் துஷ்பிரயோகம், கல்வியைத் தடுத்தல் , சிறுவர்களை கடத்துதல் போன்ற பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.


இந்நிலையில் எமது நாட்டில் 14 வயதிற்கீழுள்ள சிறுவர்களை வேலைக்கமர்த்துதலுக்கு எதிராக பல சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கையில் கட்டாயக்கல்வி அமுல்படுத்தப்பட்டு அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் பாதுகாக்க வேண்டியவர்கள் என்பதன் காரணமாக அவர்களுக்கு பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.



உலகளாவிய ரீதியில் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்களாக கருதப்படு வேண்டிய நிலையில் அவர்கள் தமது வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கியள்ளனர். இவ்வாறு சிறுவர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு ஒவ்வொரு சமூகமும் பொறுப்புக் கூறவேண்டிய கட்டாயத்திலிருக்கிறது.


இந்த பூமியில் வாழ்கின்ற மனித இனமான நாம் எதிர்காலத்திலும் நல்லதொரு உலகை கட்டியெழுப்ப வாய்ப்பளிக்க வேண்டியது கட்டாயமல்லவா???? சிறுவர்களுக்கெதிரான நடவடிக்கைககளை தடுத்து அவர்களை பாதுகாத்து நாளைய நல்ல உலகத்திற்கு இன்றே வழிவகுப்போம்……இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்…