வெள்ளி, 13 நவம்பர், 2015

நீரிழிவு நோயை நிறுத்துவோம்


2015ம் ஆண்டு நீரிழிவு தினத்தின் தொனிப் பொருள் 'நீரிழிவு நோயை நிறுத்துவோம்' என்பதாகும்.


உலக நீரிழிவு தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் பதினான்காம் திகதி கொண் டாடப்படுகிறது. அன்றைய தினம் உல கிலுள்ள நூறுக்கும் மேற்பட்ட நாடுகள் நீரிழிவு சம்பந்தமான செயற்பாடுக ளில் ஈடுபடுகின்றன.

இன்சுலின் ஹோமொனை கண்டுபிடிக்க முன் னின்ற 'பெட்டிக் பென்டின்' என்ற விஞ்ஞானியின் பிறந்த தினமாகிய நவம்பர் பதினான்காம் திகதி உலக நீரிழிவு தினமாக பிரகடனப்படுத் தப்பட்டதாக கூறப்படுகிறது.

நீரிழிவு நோய் பலவித தொனிப் பொருட்களில் பேசப்படுகிறது. நீரி ழிவு மற்றும் மனித உரிமை, நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை மற்றும் பிள்ளைப் பருவம் நீரிழிவு முதலிடம் பெறுகிறது.

நோயை கட்டுப்படுத்தும் தன்மை நோயின் தன்மை பற்றி பலவித செயற்பாடுகள் நடைபெறுகின்றது. அவற்றுள் வானொலி மற்றும் தொலைக்காட்சி வேலைத் திட்டங்கள், கருத்தரங்குகள் மக்களை விழிப்பூட்டும் வேலைத் திட்டங்கள், நீரிழிவு நோய் பற்றிய கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் கலந்துரையாடப்படுவது முக்கிய இடம்பெறுகிறது.

தற்போது உலகம் பூராவும் இருநூற்றி எண்பது மில்லியன் மக்கள் வரை நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளதாக நம்பப் படுவதோடு இந்த நோயாளிகளுள் பெரும்பாலானோர் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்வதாக கூறப்படுகிறது.

எதிர்கால கணிப்பீடுகளின்படி இன்னும் இருபது வருடங்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்நூற்று அறுபது மில்லியன்களாக அதிகரிக்கலாமென நம்பப்படுகின்றது.

இங்கு காணப்படும் பயங்கரமான நிலை என்னவெனில் நானூறு மில்லியன் அளவிலான உலக மக்கள் நிரந்தர நீரிழிவு நோய்க்கு உட்பட்டிருப்பதாகும்.

இந்த நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவு நோய்க்கு ஆளாகும் அளவு அதிகமானதோடு நீரிழிவு பற்றிய அறிகுறி காரணமாக வருடமொன்றுக்கு மூன்று மில்லிய னுக்கும் கூடுதலானோர் மரணமடை வதாக நம்பப்படுகிறது. நீரிழிவு நோயாளர்களில் தொண்ணூறு வீதமான வர்கள் இரண்டாம் பிரிவிலான நீரிழிவு நோய்க்குத்தான் உள்வாங்கப் படுகிறார்கள்.

இரண்டாம் பிரிவு நீரிழிவுக்கு பிரதான காரணமாவது முறையற்ற உணவுப் பரிமாற்றமும், வாழ்க்கை முறையுமாவதோடு முறை யான உடற் பயிற்சிகள் இன்மையும் ஒரு காரணமாகும்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உள்ள ஒரு தடையாகவுள்ளது, நோயாளிகளும், சுதேசி மக்களுக்கும் இடையில் நீரிழிவு பற்றி உள்ள தவறான கருத் துக்களாகும்.

இந்நோய் ஏற்படுவது அதிக சீனி அதிக அளவில் உணவில் சேர்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந் நோய் ஏற்படும் என்பது மக்களின் கருத் தாகும். இது தவறான கருத்தாகும்.

நீரிழிவு ஏற்படுவதற்கு உணவுப் பொருட்களுக்கு மேலதிகமாக வேறு காரணிகளும் தாக்கம் செலுத்துகிறது. அதனால் அதிக அளவில் சீனி பாவிக் காதவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற் படலாம்.

அதுமட்டுமன்றி இன்னொரு தவ றான கருத்தும் முன்வைக்கப்படுகிறது. அது என்னவென்றால் நீரிழிவு நோய் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயென நினைத்து சில நோயாளிகள் கொடுக் கின்ற மருந்துகளை நிறுத்தி விடுவதாகும்.

 நீரிழிவு அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்களை சம்பூரணமாக குணப்படுத்த முடியாது என்பதனால் மருந்துகளின் மூலம் நோயை கட்டுப் படுத்துவதை மாத்திரம் செய்யலாம் இதனால் நோயாளி தான் நினைத்த நேரம் மருந்துகளை நிறுத்திவிடக்கூடாது.

சில நோயாளிகள் மருந்துகளைப் பாவிப்பதனால் உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சிகளில் ஈடுபட அதிக அக்கறை காட்டுவதில்லை. இது தவறான ஒரு விடயமாகும். இந்த தவறான கருத்துக்கள் காரணமாக நீரிழிவு நோய் அதிகரிப்பதோடு நீண்ட குறுகிய கால நிலைமைகளுக்கு நோயாளி உட்படலாம்.

பெரும்பாலான நோயாளிகளிடையே இன்சுலின் ஹோமோன் பற்றியும் தவறான கருத்துக்கள் நிலவுகிறது. பெரும்பாலானோர் நினைப்பது இன்சுலின் ஹோமொனை பெற்றுக் கொண்டதன் பின்பு மற்றைய மாத்திரைகள் மூலம் எவ்வித பலனும் இல்லை என்ற கருத்து.

இக்கருத்தும் தவறானதாகும். சிறிது சிறிது காலம் இன்சுலின் பாவித்த பின் நோயை கட்டுப்படுத்தியதன் பின் மீண்டும் மற்றைய மாத்திரைகள் மருந்துகள் மூலம் நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.

இன்னொரு தப்பான அபிப்பிராயம் என்னவெனில் நீரிழிவு கட்டுப்படுத்தல் என்பது இரத்தத்தில் சீனியின் (அளவை) மட்டத்தை குறைத்தல் என்பதாகும்.

இந்த தவறான கருத்தின் காரணமாக சில நோயாளிகள் வைத்திய ஆலோசனை இன்றி தான் நினைத்தபடி மாத்திரைகளைப் பாவித்து சீனியின் (அளவை) மட்டத்தை மட்டும் குறைத்துக்கொள்ள நினைப்பதாகும்.

இங்கு ஒரு விடயத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் சீனியின் மட்டத்தை சரியான முறையில் கட்டுப்படுத்துவதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரோலின் (கொழுப்பின்) அளவையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அத்தோடு இரத்த அழுத்தத்தையும் முறையாக நடைமுறைப்படுத்தல் அவசியமாகும்.

சிறுநீரக பகுதியில் உள்ள சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனைகளை இடையிடையே பரிசோதனை செய்தல் வேண்டும். இதுபோன்று வருடத்துக்கு ஒருமுறை கண்வைத்தியர் ஒருவரை சந்தித்து கண்களை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தமது பாதங்களின் செயற்பாட்டுத் தன்மை பற்றியும் பரிசோதனை செய்வது நல்லதாகும்.

கடைசியாக நீரிழிவு நோயை இல்லாமல் செய்ய நோயாளி மற்றும் சுகதேகி மக்களிடையே இது பற்றிய தப்பான கருத்துக்களில் இருந்து தூரமாகி நீரிழிவு நோயை திறந்த மனதுடன் பார்ப்பது அவசியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக