வியாழன், 29 அக்டோபர், 2015

மலை­யக முன்­னேற்­றத்­திற்கு பெண்­களின் கல்­வியில் விசேட அக்­கறை தேவை


கலா­சா­ரத்தால் ஏற்றுக் கொள்­ளப்­பட்ட பய­னுள்ள விட­யங்­களை சமூ­கத்­திற்கு பெற்றுக் கொடுப்­பது கல்வி என்­பார்கள்.
கல்வி சமூக மாற்­றத்தின் அச்­சாணி­யாக விளங்­கு­கின்­றது. கல்­விக்கும் அபி­வி­ருத்­திக்கும் இடையே நெருங்­கிய தொடர்­பி­ருக்­கின்­றது. கல்­வியில் எழுச்சி பெறாத சமூ­கங்கள் அபி­வி­ருத்தி இலக்­கு­களை அடைந்து கொள்­வதில் சிக்­கல்­களை எதிர்­நோக்கும் என்­பதில் ஐய­மில்லை. சமூக அபி­வி­ருத்தி என்­பது ஆண் மற்றும் பெண் இரு­வ­ரது கைக­ளிலும் தங்கி இருக்­கின்­றது. 

கல்வித் துறை­யிலும் இரு­பா­லா­ரி­னதும் பங்­க­ளிப்பு மிக மிக அவ­சி­ய­மாகும். இந்த வகையில் மலை­யகக் கல்வி குறித்து நாம் நோக்­கு­கின்­ற­போது பெண்­களின் கல்வி நிலை­மைகள் குறித்து விசே­ட­மாக நோக்க வேண்டி இருக்­கின்­றது. மேலும் மலை­யகம் முன்­னேற்றம் காண்­ப­தற்கு பெண்­களின் கல்­வியில் விசேட அக்­கறை செலுத்த வேண்­டி­யதன் அவ­சி­யத்­தையும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருக்­கின்­றனர்.

பெண்கள் சமூ­கத்தின் கண்கள் என்­கின்­றார்கள். ஆனால், மலை­யகப் பெண்கள் எந்­த­ள­வுக்கு கண்­க­ளாக மதிக்­கப்­ப­டு­கின்­றார்கள் என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. ஆணா­திக்க சமூ­கத்தின் அடக்­கு­மு­றைக்கு உட்­பட்டு மலை­யகப் பெண்கள் வாயில்லாப் பூச்­சி­க­ளாக மௌனித்து கிடப்­ப­தையே காணக் கூடி­ய­தாக உள்­ளது. சகல துறை­க­ளிலும் ஓரம் கட்­டப்­பட்ட நிலையில் வெறு­மனே உழைக்கும் இயந்­தி­ரங்­க­ளாக இப்­பெண்கள் உரு­மாறிப் போய் இருப்­பது ஒன்றும் புதிய விட­ய­மல்ல.

பெருந்­தோட்ட பெண்­களை பொறுத்­த­வரை பாட­சாலைக் கல்­வியை முழு­மை­யாகப் பெற்று அதன் வாயி­லாக கிட்டும் நன்­மை­களை அனு­ப­விக்கும் வாய்ப்பு அரி­தா­கவே காணப்­ப­டு­வ­தாக பேரா­தனை பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் இரா. ரமேஷ் தனது கட்­டுரை ஒன்றில் சுட்­டிக்­காட்டி இருக்­கின்றார். மேலும் பெருந்­தோட்டப் பெண்கள் கல்வி ரீதி­யான மேலெ­ழுச்­சி­யினை அடைந்து கொள்ள முடி­யா­துள்­ளார்கள். பெண் கல்வி, பெண் உரிமை, பெண் அந்­தஸ்து, பெண் பங்­கு­பற்­றுதல், பெண் தொழில் என்­ப­னவற்றில் தொடர்ந்து பார­பட்­சமும் புறக்­க­ணிப்­பு­களும் இடம்­பெற்ற வண்­ணமே உள்­ளன. இச் சமூ­கத்­தி­லேயே பெண்­களின் குடும்ப வகி­பங்கும் அவர்­க­ளுக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற சமூக ரீதி­யான பார­பட்­சங்­களும் பொரு­ளா­தாரப் பின்­பு­லமும் இவர்கள் மீதான சமூ­கத்தின் பார்வை, சமூ­கத்தில் பெண்­க­ளுக்கு கொடுக்­கப்­ப­டு­கின்ற அந்­தஸ்து என்று பல கார­ணிகள் இதற்கு காத்­தி­ர­மான பங்­கினை வகிப்­ப­தாக ரமேஷ் மேலும் தெரி­விக்­கின்றார்.

தொழில் ரீதி­யா­கவும் பல்­வேறு அடக்­கு­மு­றை­க­ளுக்கு மலை­யகப் பெண்கள் உள்­ளா­வதும் புதிய விட­ய­மல்ல. 1988 ஆம் ஆண்டு இலங்­கையின் பெருந்­தோட்டப் பகு­தி­க­ளி­லேயே தொழில் புரியும் பெண்­களின் ஆரோக்­கிய நிலை குறித்து ஆய்வு ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்த ஆய்வில் திடுக்­கிடும் பல உண்­மைகள் வெளி­யா­கின. மலைச் சரி­வு­களில் ஏறியும் இறங்­கியும் வேலை செய்ய வேண்டி இருப்­ப­தனால் இப்­பெண்கள் பல்­வேறு பிர­சவம் தொடர்­பான உடற்­கோ­ளா­று­க­ளினால் துன்­பப்­ப­டு­வ­தாக ஆய்வு வெளிப்­ப­டுத்­தி­யது. ஈரக் கால நிலையில் நாள் முழு­வதும் வேலை செய்யும் பெண்கள் தடிமன், இருமல் உள்­ளிட்ட நோய்­க­ளினால் எப்­போதும் துன்­பு­று­கின்­றனர். இரும்புச் சத்துக் குறைவு. இரத்த அழுத்த நோய், பெரு­விரல் மற்றும் ஆட்­காட்டி விரல்கள் புண்­ணா­குதல் தோள்­பட்டை, முது­கெ­லும்பு வலி, காலில் ஆணி ஏற்­படல் போன்­ற­வற்­றிற்கு அவர்கள் புரியும் தொழில்­களின் இயல்பே கார­ண­மாகும் என்றும் ஆய்வு வலி­யு­றுத்­தி­யது.மலை­யகப் பெண்­களின் கல்வி நிலை குறித்து நோக்­கு­வ­தற்கு முன்­ப­தாக மலை­யகக் கல்வி குறித்து நோக்­கு­கின்ற போது தேசிய கல்வி மட்­டத்தை காட்­டினும் மலை­யக கல்வி மட்டம் தொடர்ச்­சி­யாக பின்­ன­டைவு கண்டு வந்­துள்­ள­தாக பேரா­சி­ரியர் சோ. சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் வலி­யு­றுத்­து­கின்­றனர். மலை­யகக் கல்­வியின் பின்­ன­டை­வுக்கு பல்­வேறு கார­ணங்கள் கூறப்­பட்டு வரு­கின்­றன. இவற்றுள் பிர­தான இரண்டு கார­ணங்­களை ஏற்­க­னவே புத்­தி­ஜீ­விகள் அடை­யா­ளப்­ப­டுத்தி இருந்­தனர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் பிள்­ளை­க­ளாக இருப்­ப­வர்கள் கல்வி கற்று ஏனைய தொழில்­க­ளுக்கு சென்­று­விட்டால் தோட்­டங்­களில் தொழில் புரிய தேவை­யான தொழி­லா­ள­ருக்கு தட்­டுப்­பாடு ஏற்­ப­டலாம் என்ற கவலை தோட்ட நிர்­வா­கத்­தி­ன­ருக்கு இருந்­தது. இதனால் மலையக இளை­ஞர்கள் கல்­வியில் முன்­னே­று­வது ஊக்­கு­விக்­கப்­ப­ட­வில்லை.

சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் ஏற்­பட்ட குடி­யு­ரிமை இரத்து கார­ண­மாக கல்வி கற்­ற­வர்­க­ளுக்கு உத்­தி­யோக வாய்ப்­புகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­வை­யாக இருந்­த­மையால் அவர்கள் கல்வித் துறையில் ஊக்­கு­விக்­கப்­ப­டாது அத்­து­றை­யி­லேயே பின்­தங்­கி­விட்­டனர். இவற்­றுடன் அர­சாங்­கங்­களின் சில செயற்­பா­டு­களும் மலை­யக கல்வித் துறையின் எழுச்­சிக்கு தடை­யாக விளங்­கின என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

1988 இல் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் உயர்­கல்­விக்­காக சுமார் 30 ஆயிரம் மாண­வர்கள் பதிவு செய்து கொண்­டுள்­ளனர். எனினும் இதில் தோட்டப் பகு­தி­க­ளையும் இந்­தியத் தமிழ் சமூ­கத்­தையும் சார்ந்­த­வர்கள் இரு நூறுக்கும் குறைந்த எண்­ணிக்­கை­யி­னரே பதிவு செய்­துள்­ள­தாக பேரா­சி­ரியர் மா.செ. மூக்­கையா தனது நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில் மலை­ய­கத்தின் சம­கால கல்வி நிலை­மைகள் முன்­ன­ரைக்­காட்­டிலும் அபி­வி­ருத்தி கண்­டுள்­ளன என்­ப­தையும் குறிப்­பிட்­டாக வேண்டும். மலை­ய­கத்தின் பல பாட­சா­லைகள் தர­மு­யர்த்­தப்­பட்­டுள்­ளன. வளப்­பற்றாக் குறை­களும் ஓர­ளவு நிவர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. ஆசி­ரியர் நிய­ம­னங்கள் அவ்­வப்­போது வழங்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய நிலை­மைகள் மலை­யக கல்வித் துறையில் எழுச்­சிப்­போக்­கினை பதிவு செய்­தி­ருக்­கின்­றன.

சம­கா­லத்தில் இலங்­கையின் கல்வி நிலையை நோக்­கு­மி­டத்து மட்டக் குறி­யீட்டின் அடிப்­ப­டையில் பெண்­களின் கல்வி வளர்ச்சி ஆண்­களை விடவும் சிறப்­பாக உள்­ள­தாக பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சே­கரன் போன்­ற­வர்கள் தெளி­வு­ப­டுத்­து­கின்­றனர். பல குறி­காட்­டி­களை நாம் எடுத்து நோக்­கு­கின்ற போது பெண்­களின் கல்வி வளர்ச்­சி­யினை நாம் புரிந்து கொள்ளக் கூடி­ய­தாக இருக்­கின்­றது. பெண்­களின் சேர்வு வீதம் அதி­க­மாக இருக்­கின்­றது. க.பொ.த. உயர்­தர மட்­டத்­திலும் இது அதி­க­மாக உள்­ளது. பல்­க­லைக்­க­ழகம் செல்லும் மாண­வர்­க­ளிலும் கணி­ச­மான தொகை­யினர் பெண்­க­ளாக உள்­ளனர். ஆசி­ரி­யர்­களை பொறுத்த வரை­யிலும் அதி­க­மான சத­வீ­தத்­தினர் பெண்­க­ளா­கவே உள்­ளனர். இது தேசிய ரீதி­யி­லான விட­ய­மாகும். எனினும் மலை­யக நிலை­மையில் காலம் கால­மாக பின்­ன­டைவு நிலை­மை­களே காணப்­ப­டு­கின்­றன.

1984 இல் கலா­நிதி குமாரி ஜய­வர்த்­தன ஆய்வுக் கட்­டுரை ஒன்றை வெளி­யிட்டார். இதில் உல­க­ளா­விய ரீதியில் பெண்கள் தொடர்­பான ஒரு தனி­யான பௌதிக வாழ்க்கை சுட்டெண் கணிப்­பீ­டப்­ப­டு­மாயின் இலங்கை மிக உச்ச கட்­டத்தை பெற்­றி­ருக்கும் என்று குறிப்­பிட்டு பின்­வரும் தர­வு­க­ளையும் தரு­கின்­றார். பெண்­களின் கல்­வி­ய­றிவு மட்டம் 82 சத­வீதம் (தேசிய மட்டம் 86.2% ), பிர­சவ இறப்பு வீதம் ஆயி­ரத்­திற்கு 1.2 சத­வீதம் எனக் கூறி இச்­சுட்­டெண்கள் ஆசி­யா­வி­லேயே மிகவும் சிறப்­பான நிலை­மை­களை பிர­தி­ப­லித்­தாலும் இலங்கைப் பெண்­க­ளுக்­குள்ளும் இலங்­கையின் தந்தை வழி சமு­தாய அமைப்­பினால் புறக்­க­ணிக்­கப்­பட்ட பெண்கள் கூட்டம் ஒன்று இருக்­கவே செய்­கி­றது. அதில் பெருந்­தோட்டப் பெண்கள் மிகுந்த புறக்­க­ணிப்­பிற்கு ஆளா­ன­வர்கள் என்­ப­தையும் தெளி­வாக எடுத்­துக்­காட்டி இருக்­கின்றார்.

1970 களின் இறு­தியில் கூட பெருந்­தோட்ட பெண்­களில் 51.8 சத­வீ­த­மானோர் ஆரம்பக் கல்­வி­யைக்­கூட பெற்­றி­ருக்­க­வில்லை என்று தக­வ­லொன்று வலி­யு­றுத்­து­கின்­றது.

மலை­யகப் பெண்கள் சம­கா­லத்தில் கற்­பதில் ஆர்வம் காட்­டு­கின்­றனர் என்ற போதும் இந்­நிலை இன்னும் விருத்தி செய்­யப்­ப­டுதல் வேண்டும். ஆரம்ப நிலைஇ இடை­நிலை, உயர்­நிலை என்று சகல மட்­டங்­க­ளிலும் இவ்­வி­ருத்தி நிலை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். பொறி­யி­ய­லாளர், கல்­வி­யி­ய­லாளர், விஞ்­ஞா­னிகள் என்று சகல மட்­டங்­க­ளிலும் மலை­யகப் பெண்கள் கால்­ப­திக்க வேண்டும்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் விரல்­விட்டு எண்­ணக்­கூ­டிய மலை­யகப் பெண்கள் விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக உள்­ளனர். இத்­தொ­கை­யிலும் அதி­க­ரிப்பு அவ­சி­ய­மா­ன­தாகும். கொழும்பு பல்­க­லைக்­க­ழக முகா­மைத்­துவ பீட தலை­வ­ராக மலை­ய­கத்தைச் சேர்ந்த கலா­நிதி திரு­மதி சேனா­தி­ராஜா இருந்து வரு­கின்­றமை மகிழ்ச்­சிக்­கு­ரிய ஒரு செய்­தி­யாகும். வர­லாற்றில் முதன் முறை­யாக ஒரு மலை­யக பெண் இந்த உயர் பத­விக்கு வந்­தி­ருக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

மலை­ய­கத்தில் அநே­க­மான பெண்கள் ஆசி­ரி­யர்­க­ளாக இருக்­கின்­றார்கள். இந்த நிலை­மையும் பாராட்­டத்­தக்­க­தாகும். எனினும் நாம் இவற்­றுடன் திருப்­தி­ய­டைந்­து­விட முடி­யாது. பெண்­களின் கல்­வி­வாய்ப்­புகள் மேலும் அதி­க­ரிக்­கப்­ப­டுதல் வேண்டும். பெண்­களின் தலை­மைத்­துவம் மலை­ய­கத்தில் சரி­யாக இல்லை. இது தொடர்­பிலும் கவனம் செலுத்தல் வேண்டும். மலை­ய­கத்தில் அநே­க­மான பெண்கள் இன்னும் ஆணா­திக்­கத்­துக்கு கீழ் இருப்­ப­தாக முன்னர் கண்டோம். இந்த நிலை உடைத்­தெ­றி­யப்­ப­டுதல் வேண்டும். பெண்கள் விழிப்­பு­ணர்வு மிக்­க­வர்­க­ளாக விளங்­குதல். தீர்­மானம் மேற்­கொள்­ப­வர்­க­ளாக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆண்கள் மட்டும் படிப்­பதால் மலை­யகக் கல்­வியை மேம்­ப­டுத்­தி­விட முடி­யாது. பெண்­களும் படிக்க வேண்டும்.

பெண்கள் வேறு வீட்­டுக்கு திரு­மணம் முடித்து போய்­வி­டு­வார்கள். எனவே. கல்­விக்­காக பெண்­க­ளுக்கு முத­லீடு செய்வதில் பய­னில்லை என்ற மனப்­பாங்கு சில பெற்­றோ­ரிடம் காணப்­ப­டு­கின்­றது. இந்த பிழை­யான மனப்­பாங்கு மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு பெண்­களின் கல்­விக்­கான சந்­தர்ப்­பங்கள் உரு­வாக்கிக் கொடுக்­கப்­படல் வேண்டும். பால் வேறு­பாடு கல்­வியில் இருக்கக் கூடாது. சமவாய்ப்புகள் இருசாராருக்கும் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

(நன்றி வீரகேசரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக