திங்கள், 10 ஆகஸ்ட், 2009

சிப்பிக்குள் வாழ்க்கை


இன்றைய நவீன உலகில் வித விதமான கட்டிடங்கள் வித்தியாசமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. அலங்காரங்கள் உருப்பெற இயற்கை சுண்ணாம்பின் பயன்பாடு அளப்பெரியதே. ஆழ அழகான வடிவமைப்புக்கள், விசித்திரமான வர்ணங்கள் உருப்பெற தன்னை இயைபாக்கம் செய்து கொள்ளும் திறன் சுண்ணாம்பிற்கு உண்டு. சுண்ணாம்பு இன்றேல் கட்டிடங்களின் வடிவமைப்பு வெறும் அலங்கேபலமாகவே இருக்கும் என்பதில் ஜயம் கொள்ள தேவையில்லை. உண்மையில் உலகில் இருக்கும் அனை;த்து கட்டிடங்களுக்கும் சுண்ணாம்பு பயன்படுத்தப்பட வேண்டும் எனின், அதன் உற்பத்தியின் அளவை கணக்கிட்டு முடிக்கவே முடியாது.

இலங்கையைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் முருகை கற்பாறைகளை உடைத்தே சுண்ணாம்பு பெறப்பட்டது. இதனால் நாட்டிற்கு தேவையான சுண்ணாம்பினை, சுண்ணாம்பு ஆலைகள் தாராளமாக விநியோகித்தன. இலங்கையின் கரையோர பிரதேசங்களான: அம்பாந்தோட்டை, மாத்தறை, தங்கல்ல ராவன, மட்டக்களப்பு, பாசிக்குடா, கல்குடா, திருகோணமலை, நிலாவெளி,குச்சிவெளி, பருத்திதிதுறை போன்ற பிரதேசங்களில் இம் முருகை கற்பாறைகள் வியாபித்து காணப்பட்டன. ஆவ்விடங்களில் பாரிய சுண்ணாம்பு ஆலைகள் அமைக்கப்பட்டு பல்வேறுபட் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

சுண்ணாம்பு உற்பத்திக்கு முருகை கற்பாறைகள் பயன்படுத்தப்பட்ட போதும் உண்மையில் இப் பாறைகள் சில வகை மீனினங்கள், இறால், நண்டு. ஆகியவற்றுக்கு உணவையும், வசிப்பிடத்தையும் பெற்றுக் கொடுக்கின்றன. அத்துடன் மீன்கள் உட்பட கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்திக்கும் உகந்த சூழல் காரணிகளை வழங்குகின்றன. மேலும், கடல் அரிப்பை தடுப்பதிலும், இயற்கை அழகை மேம்படுத்துவதிலும் இதிக பங்களிப்பை இம் முருகை கற்பாறைகள் செலுத்துகின்றன. அது மாத்திரமின்றி, தேசிய சுற்றுப் பிரயாணிகளுக்கும், வெளி நாட்டு சுற்றுப் பிரயாணிகளுக்கும் சுற்றுப் பிரயாணம் மேற் கொள்ள தகுந்த இடமாகவும் முருகை கற்பாறைகள் திகழ்கின்றன. இதன் விளைவால் நாட்டிற்கு பாரிய இந்நிய செலவாணி வந்து சேர்கிறது. இது நாட்டின் அபிவிருத்தியில் கூட பாதிப்பை செலுத்தும் ஒன்றாக மாறி வருகிறது.
 
இவ்வாறான பயன் மிகுந்த முருகை கற்பாறைகள் மானிட வர்க்கத்தின் கீழ்த்தரமான செயற்பாடுகளினாலும், இயற்கையான சில நிகழ்வுகளாலும் அழிவடைகின்றன. இலங்கையைச் சுற்றி காணப்படுகின்ற முருகை கற்பாறைகள் கடைசி 03 தசாப்த கால இடை வெளிக்குள் பாரியளவு இயற்கையின் சீற்றத்தால் அழிவடைந்துள்ளது. 1988 ம் ஆண்டு இலங்கையின் கிழக்கு கரையோரப் பிரதேசத்தை குலுக்கிய “எல்லிகோ” நில நடுக்கமும், 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி ஏற்பட்ட பேரலை அனர்த்தமும் முருகை கற்பாறைகளை அழிவடையச் செய்த பிரதான இயற்கை காரணிகளாகும்.

இதே வேளை மீன் பிடித் தொழிலில் பின்பற்றப்படுகின்ற பிழையான நடைமுறைகளினாலும் இம் முருகை கற்பாறைகள் அழிவடைகின்றன. அதில் “டைனமைட்”பாவித்து சட்ட விரோதமாக மீன் பிடித்தல் பிரதானமாகும். டீஸ்கோ, பத்ல ஆகிய மீன்பிடி வலைகளினால் முருகை கற்பாறைகளுக்கு அண்மையில் இருக்கும் மீன்கள், இரால், நண்டு ஆகியவற்றை பிடிக்க விளைவதால் முருகை கற்கள் உடைந்து வீணாகும் சூழ்நிலை உருவாகின்றது.கரையோரங்களில் இருக்கும் ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கூளங்கள் கடலுடன் கலக்கும் போதும் முருகை கற்கள் அழிவடைகின்றன.
 
இதே போன்று சுண்ணாம்பு உற்பத்திக்காக வேண்டி முருகை கற்பாறைகள் உடைக்கப்படுவதாலும் அவை அழிக்கப்படுகின்றன. நாடு தழூவிய ரீதியில் 20 சதவீதமே ஏனைய காரணிகளால் முருகை கற்பாறைகள் அழிவடைய,மீதமுள்ள 80 சதவீதம் சுண்ணாம்பு உற்பத்திக்காக முருகை கற்பாறைகள் உடைக்கப்படுவதாலேயே அழிவடைகின்றன. சுண்ணாம்பு உற்பத்தியானது தற்காலத்தை பொறுத்தவரை பாரிய நன்மைகளை பெற்று தருகின்ற போதும், அதன் எதிர்காலம் கேள்விக்குறியே........?. ஆகவே, சுண்ணாம்பு உற்பத்தி என்ற ஓர் நன்மைக்காக ஏனைய பயன்களை மழூங்கடிக்கப்படுவதா……..?
 
முருகை கற்பாறைகளில் அதிகமான நன்மைகள் பொதிந்து கிடப்பதால் அதனை அழிவடையச் செய்யக்கூடாது என்ற உண்மையை உணர்ந்த இலங்கை அரசாங்கம் முருகை கற்பாறைகளை உடைப்பதற்கு எதிராக தடை சட்டம்; என்றைக் பொண்டு வந்தது. 1981 ஆம் ஆண்டு 57ம் இலக்க கரையோர அபிவிருத்தி தொடர்பான சட்டமும், 1988ஆம் ஆண்டு 64ம் இலக்க கரையோர அபிவிருத்தி தொடர்பான திருத்தமும் முருகை கல் உடைப்பை தடை செய்தது. இது சட்டத்துக்கு முரணாகும். மனிதனுக்கு பொருளாதார ரீதியாகவும், இயற்கை ரீதியாகவும் பாரிய நன்மைகளை முருகை கள்பாறைகள் பெற்றுத் தருவதற்கு அரசாங்கம் இவ்வாரான செயற்பாடுகளை செய்து வருகிறது.
 
இத்தடைச் சட்டத்தினால் சுண்ணாம்பு உற்பத்தியில் என்றுமே எதிர்ப்பார்த்திராத பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. சுந்தையில் சுண்ணாம்பிற்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் சுண்ணாம்பின் விலை பன் மடங்காக உயர ஆரம்பித்தது. அதே வேளை சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடும் நபர்கள் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. தமது வாழ்க்கை செலவுகளை நிவர்த்திக்கும் வருமான மார்க்கம் அவர்களை விட்டு விலகிச் சென்றதால் கவலையடையலானர். இந்தப் பாதிப்பு சிலாபம் மெரவெல பகுதியில் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர்களுக்கு பெரிதும் தெரிந்தது. அவர்களின் ஒரே ஒரு சுய தொழிலாக சுண்ணாம்பு உற்பத்தியே இருந்தமை இதற்கான காரணமாகும். இவ் உற்பத்தியில் ஈடுபட்டே தமது வயிற்றை நிரப்பி வந்தனர் அம் மக்கள்.  

இக் கிராமத்தைச் சேர்ந்த அதிக பெண்களும் இத் தொழிலில் ஈடுபட்டமையால் அவர்களும் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். அது மாத்திரமின்றி மெரவெல பகுதி மக்கள் சுண்ணாம்பு உற்பத்தியில் சிறந்து விளங்கியமையால் அவர்களுக்கு வேறு துறையொன்றை தெரிவு செய்வதற்கு பெரிதும் கடினமாக இருந்தது. இந் நிலையிலேNயு இவர்கள் முருகை கற்பாறைகளின் தாக்கத்தால் உருவான சிப்பிகளை எடுத்து அதன் மூலம் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடலானர்.
இன்று மெரவெல பகுதியில் சிப்பிகள் மூலம் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடும் இரண்டு ஆலைகளில் ஒன்றாக டபிள்யு. டியுடர் ரணவகவின் ஆலை திகழ்கிறது. முற்றைய சுண்ணாம்பு ஆலையானது இவர்கள் பிடிக்கும் சிப்பிகளைப் பெற்றே சுண்ணாம்பு உற்பத்தியை மேற் கொள்கிறது. இலக்கம் 7, மெரவெல குடியேற்றத்தில் அமையப் பெற்ற டியுடர் ரணவகவின் இச் சுண்ணாம்பு ஆலையில் பலர் தொழில் புரிகின்றனர்.

இவரின் சுண்ணாம்பு ஆலைக்கு தேவையான சிப்பிகள் தெதுறு ஓயா களப்பிலிருந்து பிடிக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு குறைந்தது இரு முறையாவது சிப்பிகள் பிடிப்பதற்கு தெதுறு ஓய களப்பிற்கு சிப்பி பிடிக்கும் தொழிலாளிகள் செல்வர். 

ஒரு நாளைக்கு குறித்த அளவில்பிடிக்கப்பட்டு வரும் சிப்பிகளை முதலில் நீரில் அவிக்கப்பட்டு அதன் கடினத்தன்மை போக்கப்படும். “இவ்வாறு அவிப்பதற்கான பிரதான காரணம் சிப்பியில் அடங்கி இருக்கும் உயிருள்ள , உயிரற்ற தன்மைகளை இலகுவில் பிரித்தறிவதற்கே.” ஏன அவ்விடத்தில் பணி புரியும் சந்திரசேன குறிப்பிட்டார்.தொடர்ந்து அவ்விடத்தில் பணி புரியும் பெண்களால் சிப்பியில் உள்ள உயிரற்ற ஓட்டுப்பகுதியும், உயிருள்ள பகுதியும் வேறு பிரிக்கப்படும். இப்பணியில் ஈடுபடும் பெண்கள் இப்பிரிவில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக காணப்பட்டனர். ஆவர்கள் வேறு பிரிக்கும் உயிருள்ள பதார்த்தம் இறாலுக்கு இரையாக போடப்படும். இது ஒரு தனித் துறையாகும். சிலவேளை அது இறால் பண்ணைகளுக்குக் கூட அனுப்பிய சந்தர்ப்பமும் உள்ளதாக டியுடர் ரணவக தெரிவித்தார். அதே போன்று உயிரற்ற ஓட்டு பகுதி நீர் தன்மை ஓயும் வரை குவியல்களாக காய விடப்படும். புpன்னர் காய விடப்பட்ட ஓட்டுப்பகுதி சூளையில் வைத்து சுடப்படும்.

சுடப்படும் சூளையானது தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆச்சூளையில் முதலில் மார மர விறகுகள் அடுக்கப்படும். தொடர்ந்து சிப்பி ஓடுகள் அடுக்கப்படும். இவ்வாறு 05 தட்டுகள் அடுக்கப்படும். புpன்னர் மேலால் தீ வைக்கப்படும். இத் தீயானது மெதுவாக கீழ் நோக்கி பயணிக்கும். இவ்வாறு சுடப்பட்டதன் பின்னர், இறுதியாக கீழால் இருக்கும் துவாரங்களால் சிப்பி வெளியேற்றப்படும். புpன் சிப்பியுடன் இணைந்திருக்கும் உயஉழ3 வேறு பிரிக்கப்படும். 1000 சிப்பிகள் இருந்தால் மாத்திரமே 1மப சுண்ணாம்பு உருவாக்க முடியும் என்பதுவும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. ஆக இவ்வாரான தொழிலில் ஈடுபடுவதனால் பல திருப்பங்களை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.

ஒரு காலத்தில் களப்பிலுள்ள சிப்பிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படலாம். அப் பொழூது சுண்ணாம்பு உற்பத்தியின் மீது பாதிப்பு ஏற்படும். அத்துடன் சூழல் சமநிலையில் கூட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகமாக சிப்பிகள் எடுக்கப்படுவதனால் களப்பு தனது இயற்கை தன்மையிலிருந்து மாறி விடக் கூடிய சாத்தியமும் இல்லை என்பதற்கு இல்லை.

இவ்வாரான நீண்ட கால பிரச்சினை இருப்பது தெளிவாக தென்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு களப்பிலிருந்து சிப்பிகளை பிடிப்பதால் சூழல் சமநிலையில் பாதிப்பு ஏற்படுமோ? ஏன புத்தளம் சிலாப கரையோர வலய மீட்பு காரியாலயத்தின் பணிப்பாளர் விமலரத்னவிடம் வினவிய போது அவர், “சூழலின் சமநிலை குலையாமல் இத் தொழிலில் ஈடுபடுவது சூழலுக்கு பாதிப்பை ஏற்புடுத்தாது” என்றார்.

இதே வேளை புத்தளம் மாவட்ட சிலாப கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் h.ய. குலதுங்க கருத்து வெளியிடும் போது “ எமது திணைக்களத்தில் பதிவு செய்த நபர்களினாலேயே சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடலாம். நாங்கள் அவ்வாறு அனுமதி வழஙகுவது, சுண்ணாம்பு உற்பத்தியின் போது கழிவுகள் என வெளியேற்றப்படும் பொருற்கள் மூலமும்பயன் பெறப்படும் பட்சத்திலேNயு”என்றார். இங்கு கழிவுகள் மூலம் பயன் பெறுதல் என்பதுஓர் தனித்துறையாக கருதப்படல் வேண்டும். இவ் இரண்டினையும் அடிப்படையாக வைத்து உற்பத்தியில் ஈடுபடாத ஆலைகள் மூடப்படும். 

மேரவெல பிரதேசத்தில் 24 சுண்ணாம்புஆலைகள் இருந்த போதும் இன்று இரண்டே இரண்டு ஆலைகள் மாத்திரமே எஞ்சி இருக்க இதுவும் ஒரு காரணமாகும். அவ் இரண்டு ஆலைகளில் ஒன்று டபிள்யு. டியுடர் ரணவகவின் சுண்ணாம்பு ஆலையாகும்.

எனினும் இன்று முருகைக் கற்பாறை மூலம் சுண்ணாம்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்தது போன்று , சிப்பி மூலம் சுண்ணாம்பு உற்பத்தியில் ஈடுபடும் தொழில் துறையும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருக்கிறது. இதற்கு காரணம் இவ் உற்பத்தி முறையிலும் கூட பாரிய பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டமையே. களப்புபிரதேசத்தில் சிப்பிகளின் தொகை குறைய ஆரம்பித்துள்ளது. இதனால் சுண்ணாம்பு உற்பத்தியும் குறைந்துள்ளது. 1000 சிப்பிகளை பிடித்தாலே ஒரு கிலோ கிராம் சுண்ணாம்பு பெறலாம் எனும் கோட்பாடு இருக்க இக் குறைவு தாக்கத்தை செலுத்தி உள்ளது. இதனால் இத் தொழிலில் ஈடுபடுவோர் தமது தொழிலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“ஒவ்வொரு நாளும் காலை நேரம் முதல் மாலை வரை சிப்பிகள் கொண்டு வந்து கொட்டப்புடும். முன்பெல்லாம் ஒரு நாளைக்கு 06 முறை கொண்டு வந்து கொட்டப்பட்ட போதிலும், இன்று 02 முறை மாத்திரமே கொட்டப்படுகின்றன.” என்று ஆதங்கப் பட்டார் பணி புரியும்சாந்தி. இவ்வாரான குரல்கள் ஒலிக்க காரணம், தமது தொழிலின் எதிர்காலம்மீது உள்ள நம்பிக்கை இன்மையே. இதே வேளை டொலமைட் எனும் செயற்கை சுண்ணாம்பின் வருகையால் தமது சுண்ணாம்பின் நிலை சந்தையில் கேள்விக்குறியாகி உள்ளதாக சுண்ணாம்பாலையின் பொறுப்பாளர் டபிள்யு. டியுடர் ரணவக கவலை தெரிவித்தார்.

இவ்வாறு இச் சுண்ணாம்பு உற்பத்தி முறையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. ஆரசாங்கம் முருகை கற்பாறைகளை உடைத்து சுண்ணாம்பு உற்பத்தி செய்ய தடை விதித்தது. எனினும் சிப்பி மூலம் சுண்ணாம்பு உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. இவ்வாறு அனுமதி வழங்கிய போதும் , அதன் தற்போதைய போக்கு மிகவும் மோசமாக உள்ளது. இதற்கும் அரசாங்கம் சரியான தீர்வொன்றை முன் வைக்க வேண்டும். ஏற்கனவே 02 ஆலைகள் மாத்திரமே செயற்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவையும் மூடப்பட்டு விட்டால் சுய தொழிலை நம்பி நிற்கும் அம் மக்களின் எதிர் காலம்
தான் என்ன……………? எஸ் .ஏ .எம் பவாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக