உலக தபால் தினம் இன்று
உலக மயமாக்கலின் ஊடாக இன்று உலகம் சுருங்கி சகல தொடர்பாடல் வசதிக ளும் அவரவர் கைகளுக்கு வந்து விட்டன. மனிதனின் விஞ்ஞான அறிவு பல மடங்கு அபிவிருத்தி கண்டுள்ளது.
மகத்தான சாதனை என்றே சொல்ல வேண்டும். மனித குலம் தனது வாய்மொழி பேச்சுக்களை எண்ணங்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல பல உபாயங்களை கைக்கொண்டு வந்துள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்துக்கள் அற்ற காலகட்டத்தில் செய்திகளை பரிமாறிக்கொள்ள புறாக்களை அன்றைய மன்னர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். பின்னர் குதிரைகள் ஊடாக தமது தூதுவர்களை அனுப்பி தமது செய்திப் பரிமாற்றத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.
இவ்வாறான மனப் பரிமாற்றங்கள் பின்னாளில் தபால் சேவையாக பரிமாண வளர்ச்சி கண்டுள்ளன.
இலங்கையில் 1798 ஆம் ஆண்டில் தபால் திணைக்களம் ஏற்படுத்தப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சி இலங்கையில் வியாபித்தவுடன் தபால் சேவையும் ஆரம்மாகியுள்ளதாக அறிய முடிகின்றது.
அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் போதுமான அளவுக்கு வீதிகள் போக்கு வரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. தபால்கள் யாவும் தபால் சேவகர்கள் ஊடாக நடந்து சென்றே வினியோகிக் கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இராணுவ, அரச தேவைகளுக்கு மட்டுமே தபால்சேவை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிரிட்டிஷார் ஒல்லாந்தரிடம் இருந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியவுடன் தபால் பணிகளும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. இச்சேவை நாடளாவிய ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டு பெருமளவான ஊழியர்களும் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். குதிரை வண்டி யில் வரும் தபால்களை தரம் பிரித்து உள்ளூர் தபால்காரரர்கள் நடந்து சென்றே விநியோகப் பணியினை மேற்கொண்டு ள்ளனர்.
இக்காலப் பகுதியிலேயே விரைவாக செய்திகளை அனுப்பும் நவீன யுக்தி கையாளப்பட்டுள்ளது. ஒலிகள் மூலம் செய்திப் பரிமாற்றம் ஆரம்பம் எனலாம். இது மோஸ் அடித்தல் என்று அழைக்கப் படும். இதன்பின்னர் தந்திகள் மக்கள் பாவனைக்கு வந்துள்ளன. விரைவாக செய்திகளை சுருக்கமாக அனுப்ப தந்தி சேவை மிக்க பயன் உள்ளதாக அன்று இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வீதிகள் அமைக்கப்பட்டு புகையிரத சேவை மற்றும் பேருந்து சேவை என்பன அறிமுகம் செய்யப்பட்டன. இச்சேவைகளூடாக தபால்கள் பொதிகளாக இடத்திற்கு இடம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன. இன்றும் நாம் தபால் புகையிரதம், மெயில் பஸ் என்றும் அழைக்கின்றோம்.
அன்றைய காலகட்டத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கிராமப்புறங் களிலிருந்து கொழும்பு நகருக்கு தொலைபேசி அழைப்பினைப் பெற தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
தபால் நிலையங்கள் அன்றைய காலத்தில் ஒரு வர்த்தக வங்கி போன்று செயற்பட்டுள்ளன. பணப் பரிமாற்றங்கள், அரச கட்டணங்கள் செலுத்துதல் போன்றவை ஊடாக மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பும் இருந்து வந்துள்ளதுடன் தபால் சேவகர்கள் மக்களின் உற்ற நண்பனாக அதாவது நல்லது கெட்டதைத் தெரியப்படுத்தும் உயர்ந்த மனிதராக கருத்தப்பட்டுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள பாடசாலை அதிபர், பொலிஸ் நிலைய அதிகாரி, வைத்தியசாலை வைத்தியர்கள் வரிசையில் தபாலதிபர்களும் மக்களால் மதிக்கப்படு கின்ற சமூக அந்தஸ்துள்ள வர்களாக இருந்துள்ளனர். இன்று நவீன தொலைத்தொடர்பு வசதிகளை நகரங்கள் முதல் கிராமங்களின் பட்டிதொட்டிகள் வரை விரிவுபடுத்தப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கம்பியற்ற தொலைத்தொடர்பு வசதிகள் ஊடாக பல துறைகளிலும் தொடர்புசாதன வசதிகள் பெருகிவிட்டன. நவீனமயப் படுத்தப்பட்ட வசதிகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். உலகம் விரல் நுனியில் என்ற நிலை உள்ளது.
இதனால் தபால் சேவை மிக மோசமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தபால் சேவைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வந்த கடிதப் போக்குவரத்துக்கள். தந்தி சேவைகள், பணப் பரிமாற்றங்கள் யாவும் அருகி வருகின்றன.
இதில் தந்திச் சேவை மரணித்து விட்டது. கிட்டத்தட்ட 215 ஆண்டுகளாக பாவனையிலிருந்த தந்திச் சேவை இல்லாமல் போய்விட்டது.
தபால் விநியோகம் அரச உத்தயோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. தபால் முத்திரைகளின் பாவனை படிப்படியாக மங்கிக் கொண்டு வருகின்றது.
ஆனால் தபால் சேவை உலக தொலைத் தொடர்பு வளர்ச்சியுடன் போட்டியிட்டு வருவதுடன் அழியாது நின்று நிலைக்கும் என எதிர்பார்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக