திங்கள், 31 மார்ச், 2014

போதைப் பொருள் பாவனையால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு கணம் சிந்திக்க வேண்டும்


இன்றைய மலையக சமுதாயத்தில் மதுபானம் என்பது கலாசாரத்தோடு ஒன்றிய விட யமாகி விட்டது. மதுபானம் அருந்திய வுடன் அருந்தியவரின் மூளை சுருங்க ஆரம் பிப்பதுடன் கண்கள் சிவக்க ஆரம்பிக்கும். அதனைத் தொடர்ந்து அவரிடம் முறையற்ற பேச்சு நிலை காணப்படும். கண்பார்வை தெளிவற்றிருப்பதுடன், அவரது நடை உடை தோற்றம் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படும். அத்துடன் சுவாசத்தில் மதுசார வாசனை காணப்படும். இதற்கு காரணம் என்னவெனில் அவர் அருந்தும் மதுபானம் அவரது ரத்த குழாய் மூலமாக அவரது உடல் முழுவதும் பாய்வதாகும்.

ஒருவர் ஆரம்பத்தில் சிறிது சிறிதாக மது அருந்த ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலத் தின் பின் அதற்கு அடிமையாகிவிடுகின்றார். அதனால் அவரது நடவடிக்கையில் பல மாற் றங்கள் ஏற்படுவதுடன் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகின்றார். அதாவது அவர்களது வேலை கள் செயற்பாடுகளில் சிறப்பின்மை மற்றவர் களிடம் இருந்து விலகி இருத்தலும் தனிமைப் படுத்தப்படலும் மனச் சோர்வும் மனக் கவலையும் வழமையாக மது அருந்துவதற்கு செலவிடும் பணத்தைவிட அதிகமானளவு பணத்தை செலவிடல். அடிக்கடி நண்பர்களை இளம் வயதினர் மாற்றுதல் தூங்கும் சாப்பிடும் முறைகளை மாற்றிக் கொள்ளுதல் தோற்றத் தில் ஆரோக்கியம் குறைதல் நீண்ட நாட்க ளாக வீடு திரும்பாமை போன்ற பல பிரச்சி னைகளை அவர்கள் எதிர் நோக்குகின்றனர்.

உடல் உள ரீதியான பிரச்சினைகளை எதிர் நோக்கும் அதேவேளை அவர்களால் பல சமூகப் பிரச்சினைகளும் உருவாகி வருகின்றன. மது அருந்துவதால் ஏற்படும் போதையினால் வரும் வன்முறைகளால் பல உயிர் சேதங்கள் ஏற் பட்டுள்ளன. அத்துடன் பலி வாங்குவதற்கு சாராயம் என்ற போதைப் பொருள் வாங்கி, கொடுக்கப்பட்டு பலி தீர்க்கப்படுகின்றது. அத்துடன் பல்வேறான உரிமை மீறல்கள் பெண் கள் மீதும் சிறுவர்கள் மீதும் ஏற்படுத்தப்பட்ட வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விட யமாக அமைவதுடன் சுற்று சூழல் பாதிப்பு களுக்கும் சுகாதார கேட்டிற்கும் அதிகரித்த வன்முறைகளுக்கும் ஜீரணிக்க முடியாத தன்மை மற்றும் சமூக பழக்கவழக்கங்களில் மாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் மதுபானம் என்பது மிகவும் முக்கியமானதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பானமாகவும் விளங்கு கிறது. தற்போதைய ஐரோப்பிய சட்டங்கள் மதுபான உபயோகங்களில் மிகவும் கண்டிப்பாக இருப்பதாக தென்பட்டாலும் அதே சட்டம் பெற்றோரின் சம்மதத்துடன் 5 வயதுக்கு மேற்பட்டோர் மது அருந்தலாம் எனத் தெரிவிக்கின்றது. இவ் வாறான நிலைப்பாடானது மலையக மக்கள் மத் தியில் மேலும் வலுவினை ஏற்படுத்தி மதுபாவ னைக்கான ஆவலைத் தூண்டு வதாக அமைகிறது.

மலையக மக்கள் மத்தியில் ஏன் இவ்வாறான மது பாவனை மென்மேலும் வளர்ச்சியடைந்து வரு கின்றது என்பதை நோக்கும் போது அவர்கள் மத் தியில் மது அருந்தா விட்டால் சமூகத்தில் மதிக்க மாட்டார்கள் என்ற எண்ணப்பாடு வளர்ந்துள்ளதுடன் தன்னை ஒன்றும் தெரியாதவர் என பழிப்பார்கள் என்பதுடன் மனைவிமார் தன் பிள்ளைகளை விட்டு விட்டு வெளிநாடு செல்வதையும் மற்றும் தொழி லில் காணப்படும் சிரமம் மற்றும் உடல் சோர்வுத் தன்மை என்பனவற்றின் காரணமாகவும் மது அருந்துவதாக தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இப் பிரதேச மாணவர்கள் கல்வி நிலையினை விட போதைப் பொருள் பாவனையில் அதிகம் நாட்டம் கொண்ட வர்களாகக் காணப்படுகின்றனர். ஆய்வின் படி பொகவந்தலாவை பிரதேச மாணவர் மத்தியில் என்.சி. குப்பி என்ற விடயம் மிகவும் பரபரப்பான முறையில் பேசப்படுகின்றது. இது பெரும்பாலும் பாடசாலை மாணவர் மத்தி யிலும் இளைஞர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்று காணப்படுகிறது.

இவர்கள் இதனை ஒரு செய்கை முறையினூடாகப் பெற்றுக் கொள்கின்றமையினால் தெரியாத ஒருவர் இதனைப் பெற்றுக்கொள்வது என்பது அசா தாரணமான விடயமாகவே காணப்படுகிறது. அதனால் இவர்களின் கல்வி நிலை மற்றும் எதிர்காலம் வீணடிக்கப்படுவதுடன் அவர்க ளைப் பார்த்து வளரும் சிறுவர் சமுதாயமும் நாளை அவ்வாறான ஒரு நிலையினையே எதிர்நோக்க வேண்டியநிலை உருவாகும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.

மது அருந்தபவர்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் தமது குழந்தைகளின் எதிர் காலத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டும். மதுவை உடனடியாக நிறுத்திக்கொள்ள முடியாது போனால் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வருவது நல்லது. அப்படியும் தவிர்க்க முடியாது போனால் குறைந்த பட்சம் அளவோடு பாவித்து வந்தால் கூட ஏற்படும் விளைவுகளையும் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக