உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நாடுகளில் ஊடக சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் 1993 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபைக்கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த தினம் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரம் என்பது யுத்த காலத்தில் பெரும் கேள்விக்குறியான விடயமாக மாறியிருந்தது. தற்போது இந்த நிலையில் சிறிதளவு முன்னேற்றம் காணப்படுகின்றபோதிலும் பூரணமாக ஊடக சுதந்திரம் அமுல்படுத்தப்படுவதாக கூற முடியாத நிலை தற்போதும் காணப்படுகின்றது.
ஜனநாயக நாடொன்றில் ஊடக சுதந்திரம் என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. ஊடக சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் இலங்கை உலக நாடுகள் வரிசையில் பின்தங்கிய நிலையிலேயே பல ஆண்டுகாலமாக இருந்து வருகின்றது. 2014 ஆம் ஆண்டு எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி உலகநாடுகள் வரிசையில் ஊடக சுதந்திரத்தைப் பேணும் விடயத்தில் 162 ஆவது இடத்தில் இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் நெதர்லாந்து, சுவீடன்இ நோர்வே ஆகிய நாடுகள் ஊடக சுதந்திரத்தை பேணுவதில் முன்னணி வகிக்கின்றன.
இந்த நிலையில் நமது நாட்டில் ஊடக சுதந்திரத்தைப் பேணி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது இன்றியமையாததாக மாறியிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் போது ஊடக சுதந்திரம் என்பது பெரும் கேள்விக்குறியாகவே மாறியிருந்தது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஊடக சுதந்திரத்தை அடக்கும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் யுத்த செய்திகள் தொடர்பில் தணிக்கை அமுல்படுத்தப்பட்டிருந்தது. யுத்தம் தொடர்பான செய்திகள் அனைத்தும் தகவல் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியிடும் நிலைமை காணப்பட்டது. இதனால் ஊடக சுதந்திரம் என்பது முற்றாக இல்லாது போன நிலை அன்றைய காலத்தில் உருவாகியது. இதேபோல் இறுதி யுத்த காலத்தின் போதும் உத்தரவிடப்படாத தணிக்கை நிலவிவந்தது. ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக ஊடகவியலாளர்கள் சுய தணிக்கை செய்தே செய்திகளை வெளியிடும் நிலை அன்றைய காலத்தில் உருவாகியிருந்தது.
யுத்த செய்திகள் தொடர்பிலோ, இழப்புக்கள் தொடர்பிலோ சுயாதீனமான தகவல்களை வெளியிட முடியாத இக்கட்டான நிலை காணப்பட்டது. அரசாங்கத் தரப்பினரின் அல்லது படைத்தரப்பினரின் அறிவிப்புக்களுக்கே முக்கியம் கொடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் ஊடகவியலாளர்கள் சுய தணிக்கையின் கீழ் சிக்கியிருந்தனர். இதற்கு 2000 ஆம் ஆண்டு முதல் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்பனவும் காரணமாக அமைந்திருந்தன.
2000 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து 10 வருட காலப்பகுதிக்குள் ஊடகவியலாளர்களான டி. சிவராம், ஜி. நடேசன், சுகிர்தராஜன், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க என ஊடக வியலாளர்களும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுமென 18 பேர் வரையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யுத்தகாலத்தில் இவ்வாறு ஊடகவியலாளர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவி வந்தது. இதனால் ஊடகவியலாளர்கள் அனைவருமே சுயதணிக்கையினை மேற்கொள்ளவேண்டிய நிலை உருவாகியது.
யுத்த காலத்தில் இவ்வாறான நிலை காணப்பட்ட போதும் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அச்சுறுத்தல் நிலை தொடர்கின்றது. கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் தினக்குரல் மற்றும் உதயன் பத்திரிகைகளை விநியோகிக்கும் ஊழியர்கள் இருவர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டதுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களும், பத்திரிகைகளும் எரியூட்டப்பட்டன. இதேபோல் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலும் நடத்தப்பட்டது.
இவ்வாறான நிலைமை ஊடக சுதந்திரத்தை தொடர்ந்தும் பாதிப்படையச் செய்து வருகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் ஊடக சுதந்திரத்தை அமுல்படுத்துவதற்கு எதிர்காலத்திலாவது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
நாட்டில் ஊடக சுதந்திரத்தை அமுல்படுத்துவதற்கும் நல்லாட்சியினை மேற்கொள்வதற்கும் தகவல் அறிவதற்கான சட்டமூலம் அமுல்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை தற்போது மேலெழுந்துள்ளது. தகவல் அறிவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டுமென்று எதிர்க்கட்சிகளும் ஊடக அமைப்புக்களும் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் இந்த தகவல் அறியும் சட்டமூலம் கொண்டுவருவதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அது கைகூடவில்லை. இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தச் சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் அக்கறை காட்டுவதாக இல்லை. ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி நாட்டிலுள்ள ஏழு ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வருகின்றன.
சுதந்திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், ஊடக தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், தெற்காசிய ஊடக வலையமைப்பு, ஊடக தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புக்களே ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன. இந்த அமைப்புக்களுடன் மேலும் சில ஊடக சார்பு அமைப்புக்கள் ஒன்றிணைந்து தற்போது ஊடக சுதந்திரத்திற்கான நடவடிக்கைக்குழு என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பானது நாட்டில் தகவல் அறியும் சட்டமூலத்தை அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் திங்கட்கிழமை இந்த அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தகவல் அறியும் சட்ட மூலத்தை வலியுறுத்தி கையெழுத்து பெறும் போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளன.
தகவல் அறியும் சட்டமூலமானது இந்தியா உட்பட மேலைத்தேய நாடுகளில் அமுலில் உள்ளது. இதனை எமது நாட்டிலும் அமுல்படுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளன. அண்மையில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் நல்லாட்சிக்கான முக்கியதொரு அச்சாணியான விடயம் நடைபெற வேண்டுமானால் தகவல் அறிவதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவேண்டும்.

இந்த விடயம் சிலரால் ஜீரணிக்க முடியாத விடயமாக இருக்கின்றபோதும் இதனை வலியுறுத்தும் சிவில் சமூகப் போராட்டம் ஒன்று அவசரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இத்தகைய செயற்பாடுகளை எதிர்க் கட்சிகள் முன்னெடுக்கும் போது ஆளும் தரப்பிலிருந்தாலும், நான் நிச்சயமாக இதில் பங்கெடுப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
நீதியமைச்சரின் கருத்திலிருந்து தகவல் அறியும் சட்டமூலத்தின் அவசியத்தை உணரக்கூடியதாக உள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவோம் என்ற தீர்மானத்தை அனைவரும் எடுப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக