ஒரு படத்தில் நம் செந்தில் வாழைப்பழத்தை
கீழே போட்டு விட்டு தோலில் தான் சத்து உள்ளது என சொல்லி தோலை உண்ணுவார். அருகில்
உள்ளவர்கள் அவரை பார்த்து
சிரிப்பார்கள். நாமும் சிரித்திருப்போம்.
ஆனால் உண்மையிலேயே வாழைப்பழத் தோலில்
வியக்கத்தக்க பல நன்மைகள் அடங்கியுள்ளது. என்ன நண்பர்களே, கேட்பதற்கு
புதிராக உள்ளதா? ஆனால் உண்மை அது
தான்.
வாழைப்பழம் என்பது நம் நாட்டில்
சீரழியும் ஒரு பழவகை. அதனால் தான் என்னவோ, அதன் மகத்துவத்தை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்வதில்லை. வாழைப்பழத் தோலை குப்பையில்
போடும் முன், இந்த கட்டுரையை
படித்து வாழைப்பழத் தோலில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அது வியக்கத்தக்க விளைவுகளையும்
ஏற்படுத்தும். வாழைப்பழத்தில்
ஊட்டச்சத்துக்களும்,கார்போஹைட்ரேட்டும்
வளமையாக உள்ளது. மேலும் அதில்
வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம்
மற்றும் பொட்டாசியமும்
நிறைந்துள்ளது.
வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள
சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சரி,இப்போது
இயற்கையின் இந்த அரிய அன்பளிப்பு உங்களுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி
பார்க்கலாமா...
பளபளக்கும் பற்கள்
வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும்
பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட
வைக்கும். இதற்கு சிகிச்சை
எல்லாம் மேற்கொண்டால்,அதற்கான செலவை
பற்றி யோசித்துப் பாருங்கள்.
மரு
மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும்
வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு
செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு
பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.
சமையல்
வாழைப்பழத் தோலை உண்ணலாம். அதிலும் அதனை கொண்டு அருமையான இந்திய உணவுகளை தயார் செய்யலாம். குறிப்பாக கோழிக்கறியை
அதன் மீது வைத்து, அதனை மென்மையாக்கவும் இதை பயன்படுத்தலாம்.
பருக்கள்
வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை
குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை
அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.
சுருக்கம்
வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள்
கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில்
தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.
வலி நிவாரணி
வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு 30 நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால்,இன்னும் சிறப்பாக செயல்படும்.
சிரங்கு
சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி,நல்ல
முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.
பூச்சிக் கடிகளுக்கு மருந்து
கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.
ஷூ, லெதர் மற்றும் சில்வர் பாலிஷ்
ஷூ, லெதர் மற்றும் சில்வர்களில் வாழைப்பழத்
தோலை தேய்த்தால், அவைகளை பளபளக்கச் செய்யும்.
புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு
வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில்
சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது
கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக