செவ்வாய், 22 அக்டோபர், 2013

பொதுநலவாய நாடுகளின் மாநாடு பற்றிய சர்ச்சை (இணைப்பு 02)



இலங்கைக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டாம் என பொதுநலவாய நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தே வருகின்றது.



இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பணிப்பாளர் ப்ரேட் எடம்ஸ் பாரிய போர் குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்டுள்ள ஒரு நாட்டிற்கு பொதுநலவாய நாடுகள் மாநாட்டின் தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளமை பெரும் முறைகேடான ஒரு நடவடிக்கைய மட்டுமன்றி ஜனநாயக கோட்பாடுகளை மதிக்காத. தன்னுடைய குற்றச் செயல்களுக்கு மனம் வருந்தாத ஒரு அரசிட்கு இந்த வாய்ப்பை அளித்திருப்பது நயவஞ்சகத்தின் உச்சமாகும் என்று சாடியுள்ளார்.
 

மாநாட்டை யார் பகிஷ்கரிப்பார்கள் அல்லது பங்கேற்பார்கள் என்பது இலங்கையரான நமக்கு ஒரு பெரும் பிரச்சினை அல்ல. அது தொடர்பான தீர்மானங்கள் அந்தந்த நாடுகளின் உரிமையாவதோடு அதை நாம் மதிக்க வேண்டும்.
 

பிரிட்டனின் கூற்றுப்படி தான் இம்மாநாட்டில் பங்கேற்பதை இலங்கையின் செயற்பாடுகளுக்கான அங்கீகாரமாக இலங்கை அரசு கொள்ளக் கூடாது என்பது தெளிவாகின்றது.
 

மேலும் பிரிட்டன் இதில் பங்கேற்பதன் மூலம் வேறு சில விடயங்களை இலக்கு வைத்திருக்கவும் இடமுண்டு. அதாவது மாநாட்டை பகிஷ்கரிக்காமல் அதில் பங்கேற்று, அந்த பங்கேற்பின் உரிமைஊடாக மனித உரிமை மற்றும் ஏனைய விடயங்களுக்காக அதிக அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க பிரிட்டன் எண்ணியிருக்கலாம்.
 

இதே வேளை, இலங்கையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மாநாட்டை புறக்கனிக்கும் கனடாவின் முடிவும் போற்றத்தக்கதே. கனடாவின் இந்த நடவடிக்கையை இலங்கைக்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் ஒரு அரசியல் தாக்குதலாக இலங்கை அர்த்தம் செய்வது விவேகமாகாது.
 

கனடாவின் இந்த நடவடிக்கையானது, அந்நாடு உலகில் மனித உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக மேற்கொண்டு வரும் பல்வேறு பட்ட நடவடிக்கைகளின் ஒரு அங்கம் மாத்திரமே. கனடாவின் இது போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் என்றும் போற்றியும் பாராட்டியும் வந்துள்ளமை யாவரும் அறிந்ததே.
 

உலகில் மனித உரிமையை நிலைநாட்டும் விடயத்தில் கனடாவின் பங்களிப்பு மிகவும் பிரசித்தம் பெற்றதாகும். ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பிரிவாக இன்று செயற்பட்டு வரும் சர்வதேச சமாதானப் படைகனடாவின் ஒரு முன்மொழிதலேயாகும்.
 

அதே போன்று கருப்பர்களுக்கு வேற்றுமை காட்டும் தென்னாபிரிக்காவின் போக்கை கண்டித்து 1980 ஆண்டில் அந்நாட்டிட்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்ற யோசனையும் கனடாவே ஐநா சபையில் முன்வைத்தது.
 

மேலும் 1996 ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பர்மாவிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை கொண்டு வரும் விடயத்திலும் கனடாவே முன்னின்று செயற்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆண்டில் பெலாரஸ்ஸில் பாரிய மனித உரிமை மீறல்கள் நடபெற்ற போதும், சிரிய அரசு தன்னுடைய சொந்த மக்களுக்கு எதிராகவே கொடுமைகளை கட்டவிழ்த்த பேதும, ஈரானின் கடந்த பத்தாண்டு கால தெளிவற்ற மனித உரிமை கோட்பாடுகளின் போதும் அந்நாடுகளுக்கு எதிராக ஐநாவை நடவடிக்கைகளை எடுக்க ஊக்குவிக்கும் விடயத்தில் கனடாவே முன்னின்றது.
 

அது மட்டுமின்றி சர்வதேச குற்றச் செயல் நீதிமன்றக் கோட்பாட்டையும் கனடாவே முன் மொழிந்ததோடு அது ஸ்தாபிக்கப்பட்டதன் பின் அதன் முதல் தலைவராக சில காலம் பணியாற்றிய நீதியரசர் பிலிபே கர்ஷும் ஒரு கனேடியரே ஆவார்.
 

இந்தளவு சர்வதேச நன்மதிப்பை பெற்றுள்ள கனடா போன்றதொரு ஒப்பற்ற தேசம் நம் நாட்டில் நடைபெற விருக்கும் ஒரு சர்வதேச வைபவத்தில் பங்கேற்க மறுத்துள்ளமையைதான் நம்முடைய வெளிளாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அது பொருட்படுத்த வேண்டிய விடயமே அல்லஎன்று ஒதுக்கித் தள்ளியுள்ளார்.
 

உண்மையில் இது ஒரு விவேகமான, செல்லுபடியாகக் கூடிய ஒரு நிலைப்பாடு அல்ல.  மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக கனடாவின் அர்ப்பணிப்புகளை இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா உட்பட்ட பல உலக நாடுகள் வானளவு மெச்சும் போது மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்கள் கனடாவை பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு முன் இரு முறை சிந்தித்துப் பார்த்திருக்கலாம் என்றே தோன்றுகின்றது.
 

பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பான விடயம் இவ்வாறு சர்ச்சைக்குரியதாக இருக்கும் நிலையில் தென்னாபிரிக்கக் குடியரசும் இது பற்றி நன்றாக சிந்தித்து ஒரு முடிவை எடுப்பதே பொருத்தமாகும்.
 

தன்னுடைய நாட்டு மக்களில் ஒரு சாராருக்கு அநீதிகளை இழைத்த வண்ணம் தென்னாபிரிக்கா அழிவின் பாதையில் நடை போட்டுக் கொண்டிருந்த போது உரிய தருணத்தில் ஐக்கிய நாடுகள் சபை பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்ததன் பயனாக தென்னாபிரிக்கா சுதாரித்துக் கொண்டு தன்னை திருத்திக் கொண்டது. அதன் வெளிப்பாடாக இன்ற அந்நாடு நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, சகவாழ்வு, அபிவிருத்தி போன்ற அம்சங்களில் ஒரு சிறந்த முன்மாதிரியாக உலகில் திகழ்கின்து.
 

நிலைமை அவ்வாறிருக்க தன்னுடைய கடந்த காலத்தை மறந்து விட்டது போல தென்னாபிரிக்கா நடந்து கொள்ளாமல் தன்னுடைய கந்த காலத்துடன் இலங்கையின் நிகழ்காலத்தை ஒப்பிட்ட வண்ணம், பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக நல்லதொரு முடிவை அந்நாடு எடுக்க வேண்டும்.


இதே வேளை, இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேசம் குறை கூறும் போதெல்லாம், குறுகிய அரசியல் இலாபம் கறுதி அதை வெளிநாட்டு சதி, அது, இது என்றெல்லாம் கூறியபடி அதற்கு அரசியல் முலாம் பூசுவதற்கு முயற்சிப்பதை நம் அரசம் இனியேனும் விட்டு விட வேண்டும்.
 

நம் நாட்டிற்கு எதிரான கடந்த கால ஐநா தீர்மானங்கள் முதல், தற்போதைய பொதுநலவாய மாநாடு தொடர்பாக இன்று ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலை வரை பல்வேறுபட்ட விதங்களில் இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்து வந்தாலும் அவை அனைத்திலும் பொதிந்துள்ள செய்தி ஒன்றேயாகும்.
 

மேலும் இந்த அழுத்தங்களின் தீவிரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நம் அரசு உணர வேண்டும்.
 

காதுகளில் விரல்களை வைப்பதனால் கோஷங்கள் குறைந்து விடும், மறைந்து விடும் என எண்ணுவது விவேகமாகாது. மாறாக, அதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வுகளை காண்பதன் மூலமே கோஷங்களையும் எதிர்ப்புக்களையும் வெற்றி கொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக