இலங்கையின் வரி அறிவிடலானது மிக நீண்டகாலமாக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது. குறித்த வரி அறவிடலில் பங்களிப்பு செய்கின்ற பொதுமக்கள் 'நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும்?' என்று கேள்வி எழுப்புகின்றனர்.
வரி அறவிடுகின்ற அரச தரப்பினர் 'வரி அறவிடலின்றி எவ்வாறு நாட்டை கொண்டு செல்வது?' என்று தம் பக்க வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
வரி அறவிடுகின்ற அரச தரப்பினர் 'வரி அறவிடலின்றி எவ்வாறு நாட்டை கொண்டு செல்வது?' என்று தம் பக்க வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
பொதுமக்களும் அரசாங்கமும் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு மிக நீண்டகாலமாக கொண்டு சென்ற இவ்விமர்சனமானது இன்று மிக முக்கிய தருணத்தினை அடைந்துள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று அரசியல் சுய இலாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதன் விளைவினாலேயே அந்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தினை எப்படியாவது வீழ்த்தி தாம் ஆட்சியினை கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்று தொழிற்படுகின்ற சந்தர்ப்பவாதிகள் இந்த சந்தர்ப்பத்தில் 'வரிச்சுமை' தொடர்பிலான பொதுமக்களின் விரோதத்தினை மிகவும் தந்திரோபாயமாக தமது சூழ்ச்சிகளுக்குள் உள்வாங்க முனைவதை காணக் கூடியதாக உள்ளது. இந்நிலைமை தொடர்பில் நாம் அனைவரும் நேரடியாக கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
வரி அறவிடல் விவகாரம் தொடர்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு சிலர் மாத்திரமே காணப்படுவதனால் வரிச்சுமை அரசியலானது மிகவும் இலகுவான இறையாக மாறி இருக்கின்றது. வணிகத் துறையில் ஈடுபடுகின்ற பெரும்பாலானோர் மத்தியிலும் இவ்வரி அறவிடல் தொடர்பில் எவ்வித தெளிவும் இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஆகவே நாட்டின் ஜீவ நாடியான வரி அறவிடல் தொடர்பில் பொதுமக்களினதும், வியாபார பிரஜைகளினதும் ஆதரவு கிடைக்காத தன்மை நிலவுகின்றது. ஏதேனுமொரு அரசாங்கமொன்றை கொண்டு செல்வதற்கு கட்டாயம் வருமான மார்க்கம் ஒன்று அவசியமாகின்றது. அரசாங்கத்துக்கு நினைத்தாற் போன்று வருமானங்களை திரட்டிக் கொள்வதற்கான சுதந்திரம் இல்லை. வருமானத்தினை திரட்டிக் கொள்வதற்கு பிரதானமாக இரு வழிமுறைகளே காணப்படுகின்றன. அவை வரி மூலம் கிடைக்கின்ற வருமானம், வரியின்றி கிடைக்கின்ற வருமானம் என்பவையாகும். இங்கு எந்தவொரு அரசாங்கத்தினதும் வருமான மார்க்கமாக வரி வருமானமே காணப்படுகின்றது. வரி அறவிடலின்றி பெறப்படுகின்ற வருமானது ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாக அமைகின்றது. உதாரணமாக, இலங்கையில் 2015ம் ஆண்டில் அரசாங்கத்தின் மூழு வருமானது 1,454,878 மில்லியன் ரூபாய்களாகும். அவற்றில் 51,355,799 மில்லியன் ரூபாய்கள் வரி அறவீட்டு வருமானத்தின் மூலமும், 99,099 மில்லியன் ரூபாய்கள் வரியின்றிய வருமானமாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை மத்திய வங்கி அறிக்கை - 2016)
வரி சுமத்தப்படுவது ஏன்?
ஏதேனுமொரு நாட்டில் பொதுச் சேவையினை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான நிதியினை வரி அறவிடுவதன் மூலமாகவே அரசாங்கம் திரட்டிக் கொள்கின்றது. உதாரணமாக உங்களுக்கு சீரான வீதி வசதிகள், பாடசாலை, பாதுகாப்பு போன்றவற்றை சமூகமாக கட்டணம் எதுவும் செலுத்தாது பொதுவாக பெற்றுக் கொள்வதற்காக வளங்களை பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்துக்கு இயலுமாக இருப்பது பொதுமக்களிடத்தில் அறவிடுகின்ற வரிப்பணத்தினாலேயாகும். மேலும், சமூர்த்தி சலுகைகள், உரமானியங்கள் போன்ற நன்மைகளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு அவசியமான நிதியும் குறித்த வரி அறவிடலின் ஊடாகவே பெறப்படுகின்றது. அவ்வாறு எவ்வித வரி அறவிடலுமின்றி பொதுமக்களுக்கு தேவையான பொதுவசிதகளையும், மேலதிக சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாது. அதனால் முழு சமூகமே பொதுவாக அனுபவிக்கின்ற பொது வசதிகளுக்காக முழு நாட்டினதும் மக்கள் பல்வேறு விதமாக வரி செலுத்துவதன் மூலம் தமது பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். இதன் அடிப்படையில் நோக்கும் போது வரி செலுத்துவது என்பது ஒவ்வொரு பிரஜையினதும் கட்டாய பொறுப்பு என்பதுடன் கடமையாகவும் அமைகின்றது.
வரி செலுத்துவது பொதுமக்களுக்கு சுமையா?
வரி பொதுமக்களுக்கு சுமையா? என்பது தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகின்ற விடயம் யாதெனில் குறித்த வரி அறவீட்டின் ஊடாக ஏழைகள், குறைந்த வருமானம் பெறுவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதாகும். உண்மையில், மக்கள் மீது சுமத்தப்படுகின்ற நேரடி வரி அறவீட்டின் ஊடாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்கள், சேவைகள் மீது வரி விதிக்கப்படுவதாலேயே அவ்வாறு பாதிக்கப்படுவதாக தெரிகின்றது. உதாரணமாக அரசாங்கமானது பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு வரி அறவிடுகின்றது. இவ்வரி அறவீட்டினால் குறித்த பொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. இங்கு மக்களின் எதிர்ப்பு வெளிப்பட காரணமாக அமைவது அன்றாட பிழைப்பு நடத்தி ஜீவிக்கின்ற முச்சக்கர வண்டி ஒட்டுனர்களும், பில்லியன் தொகை வருமானம் ஈட்டி சுற்றுலா பயணங்கள் செல்வதற்காக தமது காரிற்கு பெட்ரோல் அடிக்கின்ற நபரும் ஒரே தொகையினை செலுத்தியே பெட்ரோலினை கொள்வனவு செய்வதாலேயே ஆகும். இங்கு முச்சக்கர வண்டி சாரதி தமது அன்றாட வருமானத்தில் பெரும்பாலான தொகையினை பெட்ரோலுக்காக செலவழிக்கின்ற அதேவேளை குறித்த பணபலம் படைத்தவர் தனது வருமானத்தை எந்த ஒரு விதத்திலும் பாதிக்காத ஒரு சிறு தொகையையே செலவழிக்கின்றார். பருப்பு, கருவாடு, உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றுக்கு வரி அறவிடும் போது குறைந்த வருமானம் படைத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவது இதன் அடிப்படையிலேயாகும்.
அதன் விளைவினால் அத்தியவசிய பொருட்களுக்கு வரி அறவிடுவதற்கு எதிராக உலகத்தில் பல நாடுகளில் எதிர்ப்பலைகள் எழுவது வழக்கம். குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்கள் நேரடி வரிக்காக (பொருட்கள் மற்றும் சேவைகள் வரி) தமது வருமானத்தில் பெரியதொரு தொகையினை செலுத்துவதே அவர்கள் முன்வைக்கின்ற தர்க்க ரீதியான விடயமாகும். அதேபோன்று அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படுகின்ற பல்வேறு பொது வசதிகளில் அதிக நன்மைகளை பெற்றுக் கொள்பவர்கள் அதிக வருமானம் ஈட்டுபவர்களே என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது. உதாரணமாக, கல்விக்காக அரசாங்கத்தினால் செலவிடப்படுகின்ற நிதியில் பெரும் தொகையானது பிரதான பிரவாகத்திலுள்ள பாடசாலைகளுக்கே செலவிடப்படுவதை நாம் சுட்டிக்காட்டலாம். வீதி, பாதுகாப்பு போன்ற வசதிகள் தொடர்பிலும் இவ்விமர்சனமே காணப்படுகின்றது. அதனால் 'நாட்டின் வரிச்சுமையினை சுமப்பவர்கள் சாதாரண மக்களே' எனும் கதைக்கு அடிப்படையொன்று இருக்கின்றது.
சிறந்த வரி அறவீட்டு முறை என்றால் என்ன?
சிறந்த வரி அறவீட்டு முறைக்கு 04 பிரதான குணாதிசயம்சங்கள் காணப்படுவதாக பொருளியலில் கூறப்படுகின்றது. இவை 'வரி அடிப்படைகள்' என வரையறுக்கப்படுகிறது.
நியாயப்படுத்துதல் கொள்கை அல்லது நீதி நியமம் : வரி செலுத்துவதற்கு முடியுமான நபர்களிடத்தில் இருந்து மாத்திரம் வரி அறவிடுவதையே இது குறிக்கும். ஆக, வரி செலுத்துவதற்கு முடியுமான நபர்களுக்கே வரியினை விதிக்க வேண்டும் என்பதே இங்கு சூகசமாக காட்டப்படுகின்றது.
மனசாட்சிக்கான கோட்பாடு : நாட்டின் உற்பத்தி மற்றும் முதலீடு என்பவற்றை பலப்படுத்தும் நோக்கில் வரி அறவிடப்பட வேண்டும் என்பதை இக்கோட்பாடு எடுத்துரைக்கின்றது.
சரலமான கோட்பாடு : வரி செலுத்துபவர் தாம் செலுத்தும் வரித் தொகையினை கணக்கிடும் அளவில் சரலமாக இருத்தல் வேண்டும் என்பது அடிப்படை அம்சமாகும்.
மேலாண்மை நுகர்வு கொள்கை : வரியினை அறவிடுவதற்கு செலவிடப்படுகின்ற நிதியானது வரி வருமானத்தில் மிகவும் சிறிய தொகையாக இருத்தல் வேண்டும் என்பது இதன் பொருளாகும்.
மேற்கூறப்பட்ட வரி மூலாதாரங்களை பின்பற்றுவதனால் அரசாங்கத்துக்கு பயனுள்ள விதத்தில், பொதுமக்களின், வணிக துறைகளின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொண்டு மிகவும் பயனுள்ள வரி முறைமையொன்றை முன்னெடுத்துச் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.
வரி செலவிடப்படுகின்ற முறை
வரியினை செலுத்துவதை புறக்கணிக்கும் நபர்கள் தம் பக்க நியாயமாக முன்வைக்கின்ற தர்க்கமாக காணப்படுவது, 'நாங்கள் செலுத்துகின்ற வரியினால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் ஒன்றும் இல்லை' என்பதாகும். இன்று குறித்த எண்ணப்பாடுகளை சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளில் சந்தர்ப்பவாதி அரசியல்வாதிகளும், சில ஊடகங்களும் ஆழமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் தமது மனசாட்சிக்கு ஏற்றாற் போல் சிந்தித்தால் இந்நாட்டின் பிரஜையாக தாம் பொதுவாக அனுபவிக்கின்ற அனைத்து நன்மைகளும் அரசாங்கத்தினால் பொதுமக்களிடம் இருந்து அறவிடுகின்ற வரிப்பணத்தின் மூலம் பராமரிக்கப்படுகின்ற அல்லது ஆரம்பிக்கப்பட்ட விடயங்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம். உதாரணமாக இலங்கையின் முன்னணி வகிக்கும் இலவச நலன்புரி சேவையான இலவச கல்வியினையும் (2016ம் ஆண்டில் 238 பில்லியன் ரூபாய்களும்), இலவச சுகாதார சேவையினையும் (2016ம் ஆண்டில் 186.1 பில்லியன் ரூபாய்களும்) முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் பாரியளவிலான நிதியினை செலவிட்டுள்ளது. இவற்றுக்கு தேசிய பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் போன்ற பிரிவுகளும் இணையும் போது அரசாங்கத்துக்கு பாரியளவிலான நிதியினை செலவளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை எம்மால் உணரக் கூடியதாக உள்ளது.
நலன்புரி பொருளாதார மற்றும் சமூக முறைக்கு உரிமை கொண்டாடுகின்ற இலங்கையில் மொத்த அரச வருமானத்தில் அதிகமான தொகை செலவிடப்படுவது பல்வேறு வகையான சமூக பாதுகாப்பு செலவுகளுக்காகும். நேரடி பொருளாதார நன்மைகளை நேரடியாக பெற்றுக் கொடுக்காத இச்செலவீனங்கள் கடந்த காலங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒரு சுமையாக மாறியுள்ளது. உதாரணத்தினூடாக குறித்த நிலைமையினை தெளிவுபடுத்தலாம். இன்று இலங்கையில் முன்னணி வகிக்கின்ற சேவை வழங்குனராகஃ தொழில் வழங்குனராக இருப்பது அரசாங்கமாகும்.
உதாரணம் மூலமாக இந்நிலைமையினை மேலும் தெளிவுபடுத்த முடியும். இன்று இலங்கையில் முன்னணிவகிக்கும் சேவை வழங்குநராக கருதப்படுவது அரசாங்கமே. இதுவரை 15 இலட்சத்துக்கும் அதிகமானோர் அரச சேவையில் பணிபுரிகின்றனர். இந்நிலைமையினுள் சமூக பாதுகாப்பு செலவீனங்களின் இடையில் முக்கியத்துவமிக்க அரச சேவையினங்களுக்காக வேதனங்கள் மற்றும் இதர கொடுப்பனவுகளுக்காக 2010ம் ஆண்டு செலவிடப்பட்ட 300.6 பில்லியன் தொகையான செலவானது 2016ம் ஆண்டில் 570.8 பில்லியன் ரூபாய்களாகவும், ஒய்வூதியத்திற்காக 2010ம் ஆண்டில் செலவிடப்பட்ட 91.0 பில்லியன் ரூபாய்கள் 2016ம் ஆண்டில் 173.2 பில்லியன் ரூபா வரையிலும், சமூர்த்தி கொடுப்பனவுகளுக்காக 2010ம் ஆண்டில் செலவிடப்பட்ட 9.2 பில்லியன் ரூபாய்கள் 2016ம் ஆண்டில் 40.7 பில்லியன் ரூபாவாக விருத்தியடைந்துள்ளது. விவசாயிகளுக்காக வழங்கப்படுகின்ற உர மானியமானது 2017ம் ஆண்டளவில் 32 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியுமான பெருந்தெருக்கள், நீர்ப்பாசன திட்டங்கள், துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்திகள் மாத்திரமல்ல கிராமத்தில் காணப்படுகின்ற மரண வாடிகள் வரை அனைத்து செலவீனங்களையும் அரசே மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அதற்கு மேலதிகமாக கடந்த ஆட்சி காலங்களில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி மற்றும் தவணைக்கட்டணங்களை செலுத்துவதற்கான பொறுப்பும் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தையே சார்கின்றது. வரி செலுத்துவதில் இருந்து விலகி நடப்பதற்காக பல்வேறு குதர்க்கங்களை முன்வைக்கும் நபர்களிடத்தல் மேற் குறிப்பிடப்பட்ட நிலைமைகள் குறித்து முறையாக கேட்டறிந்து கொள்ள வேண்டும்.
குறித்த விடயம் தொடர்பில் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் (வைத்தியர்கள், சட்டத்தரணிகள்) தொடர்பிலும் பொருந்தும். அவர்கள் முன்வைக்கும் தர்க்கம் தான் சாதாரண மக்களைப் போன்று சென்று வரி செலுத்தும் நிதியினை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்பதாகும். எனினும், அரச ஊழியர்களின் வேதனங்களாக, பெருந்தெருக்கள், விசேடமாக பொதுமக்கள் பயன்படுத்தாத அதிவேக வீதிகள், விமான நிலையங்கள் போன்ற பாரிய வேலைத்திட்டங்கள் மாத்திரமல்ல, இலவச கல்வியிலும் கூட அதிக நன்மைகளை பெற்றுக் கொள்கின்ற தொழிலாளர்கள் தமது வருமானத்தின் மீது வருமான வரியினை செலுத்தாது இருப்பதற்காக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அச்சுறுத்துவது கவலைக்குரிய விடயமாகும்;.
வரிச்சுமை இன்றிய பொருளாதாரம்
மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில்களாக தற்போதைய அரசாங்கத்தின் மூலம் பொதுமக்கள் மத்தியில் பெரு சுமையாக காணப்படுகின்ற வரிச்சுமையினை தளர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தற்போது 80 சதவீதமாக காணப்படுகின்ற மறைமுக வரி வருமானத்தினை இன்னும் ஒரு சில வருடங்களில் 60 சதவீதமாக குறைப்பதற்கும், நேரடி வருமானத்தினை 20 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சாதாரண பொதுமக்களினை பெரிதும் பாதித்த மறைமுக வரி முறையினை குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. விசேடமாக அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் மீது சுமத்தப்பட்டுள்ள மறைமுக வரியினை குறைந்த மட்டத்தில் பேணல், மண்ணென்ணெய், நீர், மின்சாரம் போன்ற அத்தியவசிய பொருட்கள் மீதும் சேவைகளின் மீதும் விதிக்கப்பட்டுள்ள வரியில் ஒரு தொகுதியினை அரசாங்கத்தினால் தாங்கிக் கொள்வது அதில் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்மையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'விலை சூத்திரம்' ஆனது இம்முன்னெடுப்புக்களில் முக்கிய இடம் பெறுகின்றது.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் தாம் முன்னெடுத்துவருகின்ற நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக வருமான வரி தொடர்பிலும் மிகவும் பிரபல முன்னெடுப்புக்களை எடுத்து வருகின்றது. அதன்போது வருமான வரியினை அதிகரிப்பதை விட வரி செலுத்துகின்ற நபர்களின் தொகையினை அதிகரிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
இதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக மாதாந்தம் 50,000 ரூபாவுக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற கலைஞர்களிடத்தில் அறவிடப்படுகின்ற வருமான வரியினை 10 சதவீதத்தில் இருந்து 05 சதவீதம் வரை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமையினை சுட்டிக்காட்டலாம்.
தேசிய இறைவரித்திணைக்களத்தின் தரவுகளின் படி இலங்கையில் இறை வரிச் செலுத்துவதற்கு தகைமைக் கொண்ட அநேகமானோர் குறித்த வரியினை செலுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேசிய இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் கடந்த தினமொன்றில் 'மோட்டார் வாகனம் ஒன்றினை உரித்தாகக் கொண்ட மற்றும் வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுகின்ற அனைவரும் வரி கோவையொன்றினை ஆரம்பிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார். இது தொடர்பில் எமது நேரடி கவனம் செலுத்தப்பட வேண்டும். பொது மக்களின் மறைமுக வரியின் மூலம் கொண்டு நடாத்தப்படுகின்ற அனைத்து விடயங்களையும் எண்ணிடலடங்காமல் அனுபவிக்கின்ற நபர்கள் அது தொடர்பில் எவ்வித பங்களிப்பினையும் வழங்காதது கவலைக்குரிய விடயமாகும். அது அவ்வாறு இடம்பெறக் கூடாது.
தற்போதைய வரி மறுசீரமைப்பு நிகழ்;ச்சித்திட்டம் தொடர்பில் சில சந்தர்ப்பவாதிகள் இந்நவீன பிரவேசத்தினால் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், புதிய வரி மறுசீரமைப்பு தொடர்பில் பொருளாதார நிபுணர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்த வண்ணமே உள்ளனர். பொதுமக்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்துகின்ற மறைமுக வரி அறவிடலுக்கு பதிலாக நேரடி வரி அறவிடலின் மீது அதிக கவனம் செலுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் மெச்சக்குரியது. அவர்கள் அதற்காக அபிவிருத்தியடைந்த நாடுகளின் வரிக் கொள்கையினை உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றனர். உதாரணமாக பெரிய பிரித்தானியாவில் இறை வரியானது 33.3 சதவீதமாக காணப்படுவதுடன் நோர்வே இராஜ்யத்தில் அது 40.2 சதவீதமாக காணப்படுகின்றது. எனினும் இலங்கையின் வருமான வரி அறவீடானது 10 சதவீதமாகவே காணப்படுகின்றது. இலங்கையானது குறித்த மட்டத்துக்கு செல்ல இன்னும் பல வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகின்றது.
அதற்கான காரணங்கள் பல இன்று அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளன. இலங்கையில் வரி செலுத்தாது தவிர்த்தல், மறைதல் மற்றும் செலுத்தாமலேயே மிக நீண்ட காலம் காத்திருத்தல் என்பவற்றை சுலபமாக காணக்கூடியதாக இருப்பதே அதற்கான காரணமாகும். உதாரணமாக அரச பணியாளர்களாக வேதனம் பெறுகின்ற அநேகமான வைத்தியர்கள் தனியார் சேவையின் வாயிலாக பாரியதொரு நிதியினை திரட்டுகின்றனர். அதேபோன்று வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள் மாத்திரமன்றி வகுப்பாசிரியர்கள், அழகு கலைஞர்கள் போன்றோரும் பாரியதொரு வருமானத்தினை திரட்டுவதையும் காணலாம். எனினும் தாம் ஒரு வரிக் கோவையினையாவது பேண வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை. எனினும் அவர்கள் அளவுக்கடந்த முறையில் பொதுமக்களின் வரிப்பணத்தினால் கொண்டு நடத்தப்படுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளை புசிக்கின்றனர். அதனால் வரிச்சுமையற்ற பொருளாதாரத்தினை உருவாக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிரவேசத்தில் இத்தரப்பினர் மீதும் அரசாங்கத்தின் கவனம் திரும்ப வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
எஸ்.ஏ.எம். பவாஸ்
ஊடக அதிகாரி
தேசிய ஊடக மத்திய நிலையம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக