அனைத்து மக்களது தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பக்க பலமாக இருக்கும் இந்த ஊடகங்கள் உலகத்தின் முக்கிய வழிகாட்டியாக உள்ளன. நாட்டின் பொருளாதார மேம்பாடு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் ஊடகங்களின் பங்கு அளப் பெரியது. ஊடகங்களைப் பொறுத்தவரையில் அது சமூகத்தின் உரிமைக் குரலாகவே இருக்க வேண்டும். ஆகவே தான் ஊடகத்தை நாம் பொது மக்களின் சொத்தாகவே கருதுகின்றோம்.
உலகில் எந்த துறையினை உலகுக்கு அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் முதலில் தகவல் தொழில் நுட்பத்துக்கு உடந்தையாக இருப்பது இந்த ஊடகங்களே. ஆகவே தான் இன்று உலகத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு இன்றியமையாததாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு மிகவும் பெறுமதியான பொருளாக திகழும் இவ்வூடகத்துறையில் தேர்ச்சி பெற்று முன்னேறுவதற்கும் ஆயிரம் வழிகள் உள்ளன. ஊடகத்துறையில் பட்டம் பெற்று முன்னோக்கி செல்வதனால் சமூகத்தில் நன்மதிப்பை பெற்றுக் கொள்கின்றனர்.
இலங்கையை பொறுத்தவரை ஊடகத்துறையில் பாண்டித்தியம் பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. எனினும் குறித்த அறிவு மட்டத்தினை அடைந்துக் கொள்வதற்கு இலங்கையர்களாகிய நாம் ஆங்கிளம் மற்றும் சிங்களத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். காரணம் ஊடகத்துறை தொடர்பில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் அனைத்தும் ஒன்று ஆங்கிளத்தில் அல்லது சிங்களத்திலேயே காணப்படுகின்றன.
தமிழ் ஊடகத்துறையில் பிரவேசித்துள்ள நாம், எம் தாய்மொழியில் குறித்த துறையில் முன்னேறிச் செல்வதற்கு இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளது. தமிழில் எழுதப்பட்டுள்ள ஓரிரு புத்தகங்களை வைத்துக் கொண்டு எம்மால் இங்கு தமிழ் மொழியை தமது உயர் படிப்பை பெற்றுக் கொள்ளமுடியாது.
நல்லிணக்கம் பற்றி அதிகமதிகம் கதைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டும் எனின், தமிழ் மொழி மூலம் ஊடகத்துறையில் முன்னேறிச் செல்ல விரும்பும் எமக்கு அது தொடர்பான வசதிகளை செய்து தருவதற்கு உயர் அதிகாரிகள் முன்வர வேண்டும். தமிழ் மொமியில் பாண்டித்தியம் பெற்றவர்கள் ஆங்கிள மொழியில் காணப்படும் புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்ய முன்வர வேண்டும்.
இது தொடர்பில் என்னால் தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய ஒளிப்பதிவு,
நல்லிணக்கத்தை செயலிழக்கச் செய்யும் அறிவியல் மொழி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக