ஞாயிறு, 13 ஜூலை, 2014

சாதிக்கப் போவது யார்???????


உலகையே பிரேஸிலை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ள 'பீபா' வின் 20 ஆவது உலகக்கிண்ண தொடர் விறுவிறுப்பான இறுதிக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.
உலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று 13-ந் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனீரோவில் உள்ள மரகானா மைதானத்தில்; நடக்க உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்களான ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜேர்மனியும் - தென் அமெரிக்க கண்டத்து தேசமான ஆர்ஜன்டினாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஜேர்மனி அணி 3 முறையும், அர்ஜென்டினா அணி ஒரு தடவையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் 2 முறை சந்தித்து இருப்பதும் இதில் அடங்கும். 1986–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை வீழ்த்தியது. 1990–ம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஜேர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை பழிதீர்த்தது.

ஜேர்மனி அணி 1954, 1966, 1974, 1982, 1986, 1990 மற்றும் 2002 என, 7 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில் 1954, 1974, 1990 என, 3 முறை மட்டும் கிண்ணத்தைக் கைப்பற்றியது. 1978, 1986–ம் ஆண்டுகளில் கிண்ணத்தை கைப்பற்றிய அர்ஜென்டினா அணி 5–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.


கண்டங்களுக்கு எதிரான சமர் என வர்ணிக்கப்படும் இவ்விறுதிப் போட்டியில், கடந்த 2002 முதல் 2014 வரை என, தொடர்ந்து நான்கு முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாறு படைத்த ஜேர்மனி, கடந்த 1990க்குப் பின் இன்னும் கிண்ணத்தை சுவிகரிக்காத சோகத்தில் உள்ளது. இருப்பினும், இதுவரை ஐந்து கோல் அடித்த தாமஸ் முல்லர், ரொனால்டோவின் 15 கோல் எனும் சாதனையை முறையடித்த குளோஸ், இளம் வீரர் ஆசில், ஹம்மல்ஸ், டோனி குரூஸ் மற்றும் கோல் கீப்பர் நியூயர் என நட்;சத்திர வீரர்களின் பட்டாளம், பிரேசில் அணிக்கெதிரான அறையிறுதி ஆட்டத்தைப் போன்று செயற்பட்டால் இம்முறை கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான அதிக வாய்ப்பு இருக்கின்றது.

அதே வேளை 1990 ஆண்டுக்குப் பின்னர் இறுதிப் போட்டியை களம் காணாத ஆர்ஜன்டினா இம்முறை நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் தலைமையில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து 24 ஆண்டுகால கனவை நனவாக்கும் போராட்டத்தில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை. இதுவரை நான்கு கோல் அடித்துள்ள அணித்தலைவர் மெஸ்சியின் ஆட்டம் அனைத்து இரசிகர்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.  ஏஞ்சல் டி மரியா, ரோஜோ, ஹிகுவேன் ஆகியோரின் ஆட்டம் ஆர்ஜன்டினாவின் தாக்குதல் பிரிவுக்கு ஒரு பலமே. குறிப்பாக ஆர்ஜன்டினா அணியின் தடுப்புச் சுவர் ரொமிரோவை தாண்டி வலைக்குள் பந்து செல்வது என்பது அபூர்வமே. எனவே பிரேசிலை கோல் மலையினால் வென்று உயர் மனநிலையில் இருக்கும் ஜேர்மனி அணிக்கு இம்முறை கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு ஆர்ஜன்டினா பெரும் சவாலாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.    

கடந்து வந்த பாதை

ஆர்ஜென்டினா

லீக் சுற்று
1. போஸ்னியாவுடன் வெற்றி (2-1)
2. ஈரானை வீழ்த்தியது (1-0)
3. நைஜீரியாவை வீழ்த்தியது (3-2)

'சுற்று-16′
1. சுவிட்சர்லாந்துடன் வெற்றி (1-0)

காலிறுதி
1.பெல்ஜியத்தை வீழ்த்தியது (1-0)

அறையிறுதி
1.நெதர்லாந்து அணியை சமநிலை தவிர்ப்பு உதையில் வீழ்த்தியது (4-2)

ஜேர்மனி

லீக் சுற்று
1 போர்ச்சுகலுடன் வெற்றி (4-0)
2 கானாவுடன் சமநிலை (2-2)
3 அமெரிக்காவுடன் வெற்றி (1-0)

'சுற்று-16′
1 அல்ஜீரியாவை கூடுதல் நேரத்தில் வெற்றி (2-1)

காலிறுதி
1 பிரான்ஸ்சை வீழ்த்தியது (1-0)

அறையிறுதி
1.பிரேசிலை வீழ்த்தியது   (7-1)

பயம் இல்லை

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பின்னர் ஆர்ஜென்டினா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஹோன்சலோ ஹூகுவைன் அளித்த பேட்டியில், 'ஜேர்மனி அணியை கண்டு எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஜேர்மனி அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆர்ஜன்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் ஜேர்மனி அணியினர் கவலை அடைந்து இருக்கக்கூடும். இறுதிப்போட்டியில் வெற்றிக்காக எல்லா வீரர்களும் கடைசி வரை போராடுவார்கள்' என்றார்.

நெதர்லாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தை யுத்தம் போன்றது என்று வர்ணித்து இருக்கும் ஆர்ஜன்டினா அணியின் பயிற்சியாளர் அலெசான்ட்ரோ சபெல்லா அளித்த பேட்டியில், 'அரை இறுதி ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றதால் எங்கள் அணி வீரர்கள் சோர்வு, சிறிய காயம், வலி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறுதிப்போட்டிக்கு தயாராக எங்களுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கிறது. ஜேர்மனி அணியோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓய்வு மிகவும் குறைவு தான். அவர்கள் நல்ல ஓய்வுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு திரும்புவது அனுகூலமாகும். ஜேர்மனி அணியை தோற்கடிப்பது எப்பொழுதுமே கடினமான காரியம் தான்' என்று தெரிவித்துள்ளார்.

ஆர்ஜன்டினா அணியின் முன்னணி வீரர் ஹோன்சலோ ஹூகுவைன் கூறும் போது 'ஜேர்மனி அணியை கண்டு எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஜேர்மனி அணியை நாங்கள் மதிக்கிறோம். ஆர்ஜன்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் அவர்கள் கவலை அடைந்து இருப்பார்கள்' என்றார்.


ஆர்ஜன்டின பிரபல்யங்கள்

     

லயனல் மெஸ்சி (ஆர்ஜன்டின அணித்தலைவர்)
* 92  சர்வதேச போட்டிகள்
* 42 சர்வதேச கோல்கள்
* 27 வயது
* இவ்வருடம் 573 நிமிடங்களில் 04 கோல்கள்

       ஏன்ஜல் டி மெரியா
* 52 சர்வதேச போட்டிகள்
* 10 சர்வதேச கோல்கள்
* 26 வயது
* இவ்வருடம் 423 நிமிடங்களில் 01 கோல்
      
       சோன்சலோ ஹிக்குவய்ன்
* 42 சர்வதேச போட்டிகள்
* 21 சர்வதேச கோல்கள்
* 26 வயது 
* இவ்வருடம் 493 நிமிடங்களில் ஒரு கோல்


ஜேர்மனி பிரபலங்கள்
    
      தோமஸ் முலர்
* 55 சர்வதேச போட்டிகள்
* 22 சர்வதேச கோல்கள்
* 24 வயது
* இவ்வருடம் 562 நிமிடங்களில் 05 கோல்கள்


      மிரோஸ்லோ குலோஸ்

* 136 சர்வதேச போட்டிகள்
* 71 கோல்கள்
* 36 வயது
* இவ்வருடம் 192 நிமிடங்களில் 02 கோல்கள்

      அன்ரிவ் ஷர்ல்
* 38 சர்வதேச போட்டிகள்
* 16 கோல்கள்
* 23 வயது
* இவ்வருடம் 155 நிமிடங்களில் 03 கோல்கள்



      



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக