புதன், 11 டிசம்பர், 2013
நெல்சன் மண்டேலாவின் முக்கிய குறிப்புக்களும் அரிய படங்களும்
1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் நெல்சன் மண்டேலா பிறந்தார்.
1941 ஆம் ஆண்டு ஜொகனஸ்பேர்க்கிற்கு சென்று பகுதி நேரத்தில் சட்டக்கல்வியை கற்றார்.
1958 ஆம் ஆண்டு மண்டேலா வின்னி மடிகி லேனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்தார்.
1948 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.
1956 இல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த அரசுக்கு எதிராக புரட்சியை மேற்கொண்டார்.
1956 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மண்டேலாவும் அவரின் 150 மேலதிகமான தோழர்களும் தென்னாபிரிக்க அரசால் கைது செய்யப்பட்டனர்.
1961 ஆம் ஆண்டு மண்டேலா உட்பட அவரது தோழர்கள் அனைவரும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.
1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு கடுமையான காச நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் எல்லைக்கே சென்றார் மண்டேலா.
1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தபடியே அன்று மாலையில் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.
இதேவேளை, சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு நெல்சன் மண்டேலாவுக்கு 'நேரு சமாதான விருது' வழங்கியது.
1961 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப்படைத் தலைவராக மண்டேலா உருவெடுத்தார்.
1961 டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இனவெறிக்கு எதிரான முதலாவது தாக்குதல் மண்டேலா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
1961 ஆம் ஆண்டில் மண்டேலா தலைமறைவானார்.
1962 ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி மண்டேலா காவல்துறையினரால்சுற்றிவளைக்கப்பட்டு கைதானார். தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மண்டேலாவுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
1962 ஆம் ஆண்டு மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டார்.
1990 ஆண்டில் இந்தியாவின் 'பாரத ரத்னா' விருது மண்டேலாவுக்கு வழங்கப்பட்டது.
1993 இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது.
மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை மாதம் 18ஆம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது.
1994 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அவர் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியானார்.
1998 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கப் பாடசாலைகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
1999 ஆம் ஆண்டு முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் பதவியை விட்டு விலகினார்.
2013 ஜூன் மாதம் 8 ஆம் திகதி மண்டேலா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டோரியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2013 ஜூன் 23ஆம் திகதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமோவின் அலுவலகம் அறிவித்தது.
தனது வீட்டில் தங்கி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மண்டேலா, 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வியாழக்கிழமை தனது 95ஆவது வயதில் காலமானார்.
ஞாயிறு, 17 நவம்பர், 2013
நடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் விளைவு விபரீதமாகும்
நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு
ஆபத்தானது என்று நியூயார்க்
நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக் கழகம் ஆய்வு நடத்தியது.
20 வயது இளைஞர்களாக 33 பேரைத் தேர்ந்தெடுத்து இந்த ஆய்விற்கு உட்படுத்தியது. மொபைல்
போன்களைப் பயன்படுத்துவதில்
திறமைசாலிகளாய் இருக்கும் ஆண், பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
30 அடி தூரத்தில் உள்ள ஓர்
இடத்தை இலக்காகக் கொண்டு
முதலில் இவர்களை நடக்கவிட்டனர். பின்னர், பார்வையை பாதியாக மறைத்துக் கொண்டு இவர்களை அதே இலக்கை நோக்கி நடக்க
விட்டனர். அவர்களின் நடக்கும் தன்மை, வேகம்
முதலியன கண்காணித்து அளவெடுக்கப்பட்டன. பின்னர், மொபைல் போனில் பேசியபடியும், மெசேஜ் அனுப்பியபடியும் நடக்க விடப்பட்டனர்.
ஆய்வுகளில் தெரிந்த முடிவுகள் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தன.
மொபைல் போனில் பேசியபடி நடக்கையில் 16% வேகமும், டெக்ஸ்ட் டைப் செய்கையில் 33% வேகமும் குறைந்தது. நேராக நடக்காமல் 61% திசை மாறி நடந்து பின்னர் இலக்கினை அடைய முடிந்தது. குறிப்பாக டெக்ஸ்ட் டைப்
செய்கையில், இலக்கை
விட்டுவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது. இதனால் இவர்களின் உணர்திறன் குறைந்தது. செயல்
திறன் நினைவு தப்பியது.
எந்த இடத்தில், எப்படி செயல்படுகிறோம் என்பதையும் சூழ்நிலையை உணர்ந்து செயல்படும் நிலையையும் இந்த பழக்கங்கள் மறக்கடிக்கச் செய்கின்றன. இவையே பல ஆபத்துக்களை தானாக வலிய வரவேற்கும் வழிகளைத் திறக்கின்றன என இந்த ஆய்வின் முடிவுகள் தெரியப்படுத்தி உள்ளன.
ஓடும் கார்களின் பாதையில் செல்வது, திறந்திருக்கும் கழிவுநீர் குழிகளில் விழுவது, மேடு பள்ளங்களில் தடுமாறி மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் விழுவது போன்ற விளைவுகளைச் சுட்டிக் காட்டி இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.
உயிர் வாழ்ந்தால் தானே, உடம்பில் கை, கால்கள், கண்கள் சரியாக இருந்தால் தானே நண்பர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியும். எனவே நடக்கும்போது மொபைல் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம்.
வியாழன், 31 அக்டோபர், 2013
ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்!
கடந்த
ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது
யாழ்ப்பாணம்-கண்டி A9 வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்.
பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது.
ஓர்
இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன.
ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது
அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது.
ஒவ்வொருவருக்கும்
அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும்
புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும்.
அதுமட்டுமன்றி, மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில்
அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகமும் ஆகும். ஆனால், இவ்வாறான
அக்கிரமங்கள் அண்மைக் காலங்களாக இலங்கையில் அதிகரித்தே வருகின்றன.
தொடர்ச்சியாக
நடைபெறுகின்ற இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்களோடு
சம்பந்தப்பட்டோர் திருப்தியடைந்து விடவில்லை. தேவாலயங்கள், கோவில்கள் மீதான
தாக்குதல்களையும் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில்
தற்போது தம்புள்ள அம்மன் ஆலயம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் இன்னொரு கோயிலோ, பள்ளிவாசலோ,
தேவாலயமோ தாக்குதலுக்குள்ளாகியிருக்காது என்பதற்கு எவ்வித
உத்தரவாதங்களும் இல்லை.
தம்புள்ள
ஆலயம் நிர்மூலமாக்கப்பட்ட விடயம் அடுத்த ஒரு விடயத்தைச் சொல்லாமல்
சொல்கிறது. அதனைப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக
முஸ்லிம் மக்களுக்கு அது நன்கு தெரியும்.
அம்மன்
ஆலய அழிப்புக்கெதிராக அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப
வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்புகளுக்கெதிராக தமிழ்த் தலைவர்களும்
முற்போக்கு அரசியல்வாதிகளும் மற்றும் நேர்மையும் மனிதமும் நிறைந்த
தமிழ்-சிங்கள மக்களும் கண்டனக் குரலெழுப்பியதைப் போல, இந்த விடயத்திலும்
முஸ்லிம் அரசியற் தலைமைகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் தமது
எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரத்த தொனியில் பதிவு செய்ய வேண்டும்.
அரசியல்
ரீதியாகத் தமக்குள்ளிருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது
இன்றைய சூழலில் மிக இன்றியமையாதது. ஐக்கியப்பட்ட மக்களின் எதிர்ப்பலைகளானது
உடனடியாக இல்லாவிட்டாலும் காலவோட்டத்தில் அதிசயிக்கத்தக்க நன்மாற்றங்களை
நிச்சயம் ஏற்படுத்தும்.
திங்கள், 28 அக்டோபர், 2013
தமிழ்-முஸ்லிம் உறவுப் பூங்காவனத்தை பூத்துக் குழுங்கச் செய்வோம் வாரீர்.......
கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய-நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய்
ஒன்றுக்குள் ஒன்று பின்னிப்
பிணைந்து பூத்த
மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம்-புரிந்துணர்வு-சினேகம்-பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப்
பறந்து திரிந்த ஒற்றுமைப்
பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின.
|
இப்போது 30
வயதுக்குட்பட்டோரில்
பெரும்பாலானோர்க்குத் தெரிந்ததெல்லாம் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் விரோதிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தமிழர்கள் எதிரிகள் என்பதும்தான்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர்
ஆட்சிக்கு வந்த
அரசாங்கங்கள் மட்டுமல்லாது, சுயநல தமிழ்-முஸ்லிம் அரசியல் வியாபார நிறுவனங்களும் இந்த நிலைமையைத்
தோற்றுவிப்பதற்கான தமது
எத்தனங்களில்
பாரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
வெவ்வேறான மத நம்பிக்கைகளுடனும் பாரம்பரியங்களுடனும்
கலாசாரங்களுடனும் வாழ்ந்தாலும், மொழி என்ற வட்டத்துக்குள் ஒன்றிணைந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் வாழ்ந்து கொண்டிருந்த
தமிழ்-முஸ்லிம் மக்களின் போற்றத்தக்க
ஐக்கியத்தில்
மண்ணை அள்ளிப் போட்ட கொடுமை திடீரென நிகழ்ந்ததல்ல. அது பல்வேறு சூழ்ச்சிக் குழுக்களினால் மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றி முடிக்கப்பட்ட கபட நாடகமாகும்.
இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் செறிவாக வாழ்ந்த
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான நேசப் பிணைப்புகளை
இரை மீட்டிப் பார்க்கையில் இதயம்
நொந்து அழுவதைத்
தவிர்க்க முடியாமல் உள்ளது.
அங்குள்ள பாடசாலைகளில் இணைந்து கல்வி கற்று, மைதானங்களில் விளையாடி, குளங்களில் நீராடி, வாகனங்களில் பயணித்து, விழாக்களில் குதூகலித்து, பண்டிகைகளில் பரஸ்பரம் பட்சணங்கள் பகிர்ந்தளித்து, பெருநாள்-திருநாட்களில்
வாழ்த்துச்
சொல்லி,சுப காரியங்களில் கலந்து கொண்டு
ஆசீர்வாதங்களையும் சோக நிகழ்வுகளில் பங்குபற்றி ஆறுதலையும்
வழங்கி வாழ்ந்த அந்த வசந்த காலங்களை
எண்ணுகையில்
நெஞ்சத்தில் ஏக்கப் பெருமூச்சுக்கள் இடையறாது எழுகிறது.
எந்தக் கொள்ளிக் கண் பட்டதோ, தமிழீழ விடுதலைக்கென்று தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் வட-கிழக்குத் தமிழ்-முஸ்லிம் ஒற்றுமைப் பூங்காவை நோக்கிப் புயலடிக்க ஆரம்பித்து
விட்டது. மொழியின் ஐக்கியம் தாண்டி,
மதத்தின் மேலான
ஐயப் பார்வை உக்கிரமடையத் தொடங்கிற்று.
அன்பால் கட்டுண்டு கிடந்தவர்களை ஆயுதங்கள்
வலுக்கட்டாயமாகப் பிரித்தெடுத்தன. காட்டிக்
கொடுத்தல்களும் கழுத்தறுப்புகளும் மும்முரமாகின. பாவமும் பழியும்-பழிக்குப் பழியுமென தமிழ்-முஸ்லிம் ஒற்றுமையெனும் மலர்க் காடு,
மயானக் காடாய்ப்
பாழ்பட்டது.
யார் ஆரம்பித்தது...யார் முடித்து வைத்தது..? யார் அதிகமாகக் குற்றமிழைத்தது...யார் குறைவாகக்
குற்றம் புரிந்தது...? என்பது போன்ற வினாக்களுக்கான விடை தேடல்களில் இறங்குவதானது,
இனி என்றைக்குமே தமிழ்-முஸ்லிம் உறவுக்கான சூழ்நிலைகளை
உருவாக்குவதற்குத் தடையாகவே
இருக்கும்
என்பது எனது தாழ்மையான அபிப்பிராயமாகும்.
கணக்கிட்டுப் பார்க்கப் போனால், இரு தரப்பிலும் கொடுஞ் செயல்கள்
புரிந்தவர்கள்
சில ஆயிரக் கணக்கானோர்தான். ஆனால்,
அந்தக் கொடுஞ் செயல்களை வெறுத்தோர்-வெறுப்போர் பல இலட்சக் கணக்கானோர் என்ற உண்மை தெளிவாகும்.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்டோரும் அவரைச் சார்ந்தோரும்
உணர்ச்சிகளின் உந்துதலுக்காற்பட்டு, அவ்வப்போது எதிர்த் தரப்பாரை நொந்து கொள்வது வெகு இயற்கையானதே. ஆயினும், இறந்த காலங்களில் நடந்து முடிந்து
விட்டவற்றை இல்லாமற் செய்துவிட முடியாதெனும்
யதார்த்தத்தை உணர்ந்து, தம்மைத் தாமே தேற்றிக் கொண்டு வாழ முற்படுவதே விவேகமாகும்.
விட்டுக் கொடுப்பு,
சகிப்புத்தன்மை,பரஸ்பர நம்பிக்கை,புரிந்துணர்வு,மதங்கள் கடந்து மனிதம் சார்ந்த அணுகுமுறைகள்
என்பவற்றால் பிரிந்து நிற்கும்
சமூகங்கள்
மீண்டும் பிணைக்கப்பட வேண்டும்!!
தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறுதியான ஐக்கியத்தை
உருவாக்கும் பாரிய பணியில் இரு தரப்பிலுமுள்ள ஆர்வலர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தம்மை அர்ப்பணித்துக் கடமையாற்றின், வெகு விரைவிலேயே வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும் வாசமிக்க தமிழ்-முஸ்லிம் உறவுப் பூங்காவனத்தைப்
புனர் நிர்மாணம் செய்து விடலாம்.
|
வாழைப்பழத்தை தோளோட சாப்புடுங்க பிலீஸ்....!
ஒரு படத்தில் நம் செந்தில் வாழைப்பழத்தை
கீழே போட்டு விட்டு தோலில் தான் சத்து உள்ளது என சொல்லி தோலை உண்ணுவார். அருகில்
உள்ளவர்கள் அவரை பார்த்து
சிரிப்பார்கள். நாமும் சிரித்திருப்போம்.
ஆனால் உண்மையிலேயே வாழைப்பழத் தோலில்
வியக்கத்தக்க பல நன்மைகள் அடங்கியுள்ளது. என்ன நண்பர்களே, கேட்பதற்கு
புதிராக உள்ளதா? ஆனால் உண்மை அது
தான்.
வாழைப்பழம் என்பது நம் நாட்டில்
சீரழியும் ஒரு பழவகை. அதனால் தான் என்னவோ, அதன் மகத்துவத்தை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்
கொள்வதில்லை. வாழைப்பழத் தோலை குப்பையில்
போடும் முன், இந்த கட்டுரையை
படித்து வாழைப்பழத் தோலில் உள்ள நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஏனெனில் அது வியக்கத்தக்க விளைவுகளையும்
ஏற்படுத்தும். வாழைப்பழத்தில்
ஊட்டச்சத்துக்களும்,கார்போஹைட்ரேட்டும்
வளமையாக உள்ளது. மேலும் அதில்
வைட்டமின் பி6, வைட்டமின் பி12, மெக்னீசியம்
மற்றும் பொட்டாசியமும்
நிறைந்துள்ளது.
வாழைப்பழத்தின் தோல் கருமையடையும் போது, பழத்தில் உள்ள
சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சரி,இப்போது
இயற்கையின் இந்த அரிய அன்பளிப்பு உங்களுக்கு அளிக்கும் நன்மைகளை பற்றி
பார்க்கலாமா...
பளபளக்கும் பற்கள்
வாழைப்பழத் தோலைக் கொண்டு தினமும்
பற்களில் ஒரு நிமிடத்திற்கு தேய்க்கவும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்யுங்கள். இது பற்களை பளிச்சிட
வைக்கும். இதற்கு சிகிச்சை
எல்லாம் மேற்கொண்டால்,அதற்கான செலவை
பற்றி யோசித்துப் பாருங்கள்.
மரு
மருக்களை நீக்கவும், புதிதாக மருக்கள் ஏற்படாமல் இருக்கவும்
வாழைப்பழத் தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு
செய்ய வேண்டியதெல்லாம், இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும். வாழைப்பழத் தோலை சருமத்திற்கு
பயன்படுத்த எளிமையான வழியாக இது விளங்குகிறது.
சமையல்
வாழைப்பழத் தோலை உண்ணலாம். அதிலும் அதனை கொண்டு அருமையான இந்திய உணவுகளை தயார் செய்யலாம். குறிப்பாக கோழிக்கறியை
அதன் மீது வைத்து, அதனை மென்மையாக்கவும் இதை பயன்படுத்தலாம்.
பருக்கள்
வாழைப்பழத் தோலைக் கொண்டு முகம் மற்றும் உடலில் தினமும் ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். அது பருக்களை
குணப்படுத்தும். அதுவும் ஒரு வாரத்திலேயே பலனை
அனுபவிப்பீர்கள். மேலும் பருக்கள் நீங்கும் வரை இதனை தொடரவும்.
சுருக்கம்
வாழைப்பழத் தோல் சருமத்தை நீர்ச்சத்துடன் விளங்க வைக்கும். அதற்கு மசித்த வாழைப்பழத் தோலில் முட்டையின் மஞ்சள்
கருவை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில்
தடவி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீரில் முகத்தை கழுவவும்.
வலி நிவாரணி
வாழைப்பழத் தோலை உடலில் வலி இருக்கும் இடத்தில் நேரடியாக தடவும். வலி போகும் வரை ஒரு 30 நிமிடத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். அதனுடன் சேர்த்து காய்கறி எண்ணெயையும் கலந்து கொண்டால்,இன்னும் சிறப்பாக செயல்படும்.
சிரங்கு
சிரங்கு போன்ற சரும அழற்சி ஏற்பட்ட இடங்களில் வாழைப்பழத் தோலை தேய்க்கவும். ஏனெனில் இதில் ஈர்ப்பத குணமும், அரிப்பை நீக்கும் குணமும் உள்ளது. அதனால் இவ்வகை அழற்சியை வேகமாக குணப்படுத்தி,நல்ல
முன்னேற்றத்தை விரைவிலேயே காண்பீர்கள்.
பூச்சிக் கடிகளுக்கு மருந்து
கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால், உடனடி நிவாரணி கிடைக்கும். மேலும் அரிப்பும், வலியும் உடனடியாக நீங்கும்.
ஷூ, லெதர் மற்றும் சில்வர் பாலிஷ்
ஷூ, லெதர் மற்றும் சில்வர்களில் வாழைப்பழத்
தோலை தேய்த்தால், அவைகளை பளபளக்கச் செய்யும்.
புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாப்பு
வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும். அதற்கு அதை கண்களில் தடவும் முன் சூரிய ஒளியில்
சிறிது நேரம் வைக்க வேண்டும். மேலும் இது
கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)