வியாழன், 1 நவம்பர், 2012
Dismissal of Chief Justice
தலைமை நீதிபதியை பதவி நீக்கக் கோரும் தீர்மானம் சபாநயகரிடம் அளிப்பு
இலங்கையின் தலைமை நீதிபதி மீது குற்றஞ்சாட்டிரூபவ் அவரை பதவியில் இருந்து அகற்ற வழி செய்யும் தீர்மானம் ஒன்றை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதிக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்ன என்பதை அரசு விளக்கவில்லை.
அதேநேரம் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து அகற்ற வழிசெய்யும் இந்த்த் தீர்மானத்தை ஆளும் கூட்டணியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர். இதில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
தலைமை நீதிபதியின் நடத்தையும் செயற்பாடும் நாட்டு மக்களின் இறைமையை பாதிப்பதாக அரசின் சார்பில் பேசவல்ல அமைச்சர் கேஹலியா ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து சட்டத்தரணி ரத்னவேல்
'அரசு நீதித்துறையை அடிபணிய வைக்க முயல்கிறது'
இலங்கையின் தலைமை நீதிபதிக்கு எதிரான நாடாளுமன்ற குற்றப் பிரேரணை அரசாங்கம் எப்படியாவது தான் நினைத்தவற்றை நடத்தி முடிக்க விளைவதையே காண்பிக்கிறது என்கிறார் மனித உரிமைகள் சட்டத்தரணியான ரத்னவேல்.
இவற்றை இயக்க உங்கள் உலவியில் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
அதேநேரம் தீர்மானத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து விபரங்களை தற்போதே வெளியிடுவது சரியாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சியைச் சேர்ந்த இரான் விக்ரமதுங்க இது குறித்துக் கருத்துக் கூறுகையில்ரூபவ் அரசியல் அமைப்பு ரீதியான சர்வாதிகாரத்தை நோக்கி இலங்கை செல்வதையே இந்த முடிவு காட்டுவதாகக் கூறியுள்ளார்.
செப்டம்பர் மாதத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒரு நிதியை மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு சர்ச்சைக்குரிய சட்ட மூலத்தை தாமதப்படுத்திய ஷிரானி பண்டாரநாயக்கவின் ஒரு நீதிமன்றத் தீர்ப்பு அரசாங்கத்தை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தது.
பெருமளவும் நிதியை இலங்கை ஜனாதிபதின் சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கடுப்பாட்டுக்கு இந்த சட்ட மூலம் கொண்டுவரும் என்று கூறப்பட்டது.
இந்த சட்டத்தை தாமதப்படுத்தக் கூடிய ஷிராணி பண்டாரநாயக்காவின் தீர்ப்புக்கு எதிரான ஒரு வீதி ஆர்ப்பாட்டத்துக்கும் பசில் ராஜபக்ஷ தலைமை தாங்கியிருந்தார்.
சில வாரங்களின் பின்னர்ரூபவ் அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்வதாக கருத்துக் கூறிய மற்றுமொரு மூத்த நீதிபதி கைத்துப்பாக்கி முனையில் மிரட்டப்படார்.
அத்துடன் சில நீதிபதிகளின் உயிரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
நீதிபதி அச்சுறுத்தப்பட்டது தொடர்பான வழக்கு இன்னமும் தீர்க்கப்படாமலே இருக்கிறது. சம்பந்தப்பட்ட நீதிபதியும் தலைமறைவாகியுள்ளார். பயம் காரணமாக அது இருக்கலாம்.
ஜனாதிபதியின் அதிகரித்துவரும் அதிகாரங்கள்ரூபவ் சட்டத்தின் ஆட்சியை குறைத்து மதிப்பிடுவதாக பல சர்வதேச உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன. ஆனால் அரசாங்கம் தனது நடவடிக்கைகள் நியாயமானவையே என்று வாதிடுகிறது.
இலங்கையின் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணைக்கு அமெரிக்கா கண்டனம்!
இலங்கையில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணை குறித்து அமெரிக்கா தமது கவலையையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நீதித்துறையில் தலையிடும் போக்கை கைவிட்டு அதனை சுதந்திரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அமரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பிலான பூலோக காலக்கிரம மீளாய்வின் போது ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவர் நுடைநநn ஊhயஅடிநசடயin னுழயொழந இந்த கவலையையும் வலியுறுத்தலையும் விடுத்தார்.
இலங்கையில் நீதித்துறையின் உறுப்பினர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு அவர்கள் பாதுகாக்கப்படவேண்டும்.
அத்துடன் நீதித்துறை பதவிகளிலும் வெளிப்படைத்தன்மை மேற்கொள்ளப்படவேண்டும் என்று நுடைநநn ஊhயஅடிநசடயin னுழயொழந கேட்டுக்கொண்டார்.
இதனை தவிர தமது உரையில்ரூபவ் இலங்கையில் போருக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வியல் மேம்பாடு என்பவற்றை மேற்கொண்டு;ள்ளமை குறித்து வரவேற்பை வெளியிட்டார்.
எனினும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தல்ரூபவ் இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் மனித உரிமை விடயங்களில் உரிய கவனமெடுப்பு தேவை என்று நுடைநநn ஊhயஅடிநசடயin னுழயொழந வலியுறுத்தினார்.
குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சகல வழிகளிலும் போராடுவேன்: பிரதம நீதியரசர்
குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சகல வழிகளிலும் போராடப் போவதாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஷரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் குற்றவியல் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக சகல வழிகளிலும் போராடப் போவதாக பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கத் தெரிவித்துள்ளார் என டுவிட்டர் தகவல் வெளியிட்டுள்ளது.
சட்டத்தரணிகளிடம் ஷிரானி பண்டாரநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகின் பல நாடுகள் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரே பார்வையில் பிரதம நீதியரசர் மீதான குற்றவியல் பிரேரணை -
அரசியல் குற்றவியல் பிரேரணை நீதிமன்றக் கட்டமைப்பிற்கு விழுந்த அடி – சரத் என் சில்வா
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக ஆளும் கட்சியினர் அரசியல் குற்றவியல் பிரேரணை சமர்ப்பித்துள்ளமை நீதிமன்றக் கட்டமைப்பிற்கு விழுந்த அடியாகக் கருதப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை சமர்பிக்கப்பட்டமை ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த நீதிமன்றக் கட்டமைப்பிற்கும் பிழையான செய்தியை எடுத்துச் சென்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகளினால் நீதிமன்றின் சுயாதீனத் தன்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன அடிப்படையிலேயே பிரதம நீதியரசருக்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் அரசியல் சாசனத்தின் அடிப்படையாகவே பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணை; சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 14ம் அகில கால மீளாய்வு அமர்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் சாசனத்தின் அடிப்படைய உரிய நியதிகளுக்கு அமையவே நடவடிக்ககைள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசனத்திற்கோ அல்லது சட்டங்களுக்கு எதிராகவோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை – சரத் பொன்சேகா
பிரதம நீதியரசருக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரளிக்கப் போவதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பினால் பலிக் கடவான போதிலும்ரூபவ் நீதிமன்றக் கட்டமைப்பிற்கு ஏற்படும் அழுத்தங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை பணி நீக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நீதிமன்றக் கட்டமைப்பையே சீர்குலைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதம நீதியரசர் ஷிரானிக்கு எதிராக கையெழுத்திடும் எம்பீக்கள் அதிகாரப்பரவலாக்களுக்கு எதிரானவர்கள் என்பது திட்டவட்டம்
நீதித்துறைக்கும்ரூபவ் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுரூபவ் திவிநெகும என்ற சட்டமூலத்தை அடிப்படையாக கொண்டது. இந்த சட்டமூலம்ரூபவ் பதிமூன்றாம் திருத்தத்தை வலுவிழக்க செய்யும் நோக்கத்தை கொண்டது. எனவே பிரதம நீதியரசருக்கு எதிரான அரசாங்கத்தின் நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து இடுகின்ற அனைத்து எம்பீக்களும்ரூபவ் அதிகார பிரிவினைக்கு எதிரானவர்கள்.
இன்றுவரை சுமார் 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்து இட்டுள்ளார்கள் என தெரிய வருகிறது. இந்த 120 பேரிலும்ரூபவ் தொடர்ந்து கையெழுத்து போடப்போகின்றவர்களிலும் எத்தனை தமிழ் பேசும் எம்பீக்கள் இடம் பெறப்போகின்றார்கள் என்று தமிழ் பேசும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த தமிழ் எம்பீக்கள்ரூபவ் தமிழ் மக்கள் மன்றத்தில் தமக்கு எதிராக தாமே நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிகொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதில் இரண்டு கருத்துக்கு இடம் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவதுரூபவ்பிரதம நீதியரசரை ஜனாதிபதி நியமிக்க முடியும். ஆனால்ரூபவ் பதவி விலக செய்ய முடியாது. அதனால்தான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை. இதன் மூலம் அவரை பதவி விலகச்செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.இந்த சிக்கல் அதிகாரப்பரவலாக்கலில் கைவைக்கும் சட்டமூலத்தால் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு நாளை பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் ஒரு மனுதாரரான நான்ரூபவ் நமது மனு மீதான விசாரணையின் அடிப்படையில் நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கிறேன்.
எது எப்படி இருந்தாலும்ரூபவ் இந்த விவகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. தமிழ் பேசும் மக்களுக்கே அதிகாரப்பிரிவினை அவசியப்படுகின்றது. எனவே இந்த கட்டத்தில்ரூபவ் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயகவிற்கு எதிராக கொண்டு வரப்படும் நமிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து போடும் தமிழ் எம்பீக்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். கையெழுத்து போடும் ஒவ்வொருவரையும் தமிழர்கள் தூர விலத்தி வைக்க வேண்டும். இவர்கள் செய்வது வரலாற்று துரோகமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக