ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சலப்பையாற்று மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை..............!






சலப்பையாற்று மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை..............! விழிப்புடன்................!

' சல்லி கொடுத்துத்தான் தண்ணி குடிக்க வேண்டும். தண்ணிக்கும் சல்லி இங்கு மட்டும் தான்' இவை எல்லாம் வயிற்றுப் பசிக்காக சிவியம் நடத்தும் சலப்பையாறு மக்களின் அவலக்குரல்கள்.

சலப்பையாறுரூபவ் திருமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச சபைக்குற்பட்ட ஒரு குக் கிராமமாகும். அங்கு சுமார் 28 குடும்பங்கள் காணப்படுகிறது. மீன்பிடியை தமது பிரதான தொழிலாக செய்யும் இவர்கள் குறித்த பகுதிக்கு சொந்தக்காரர்கள் அல்லர். அவர்கள் சிலாபத்தையே பிறப்பிடமாக கொண்டவர்கள். எனினும் தம் சொந்த மண்ணை விட்டு விட்டு இங்கு வந்திருப்பது அங்க தமக்கு பரிட்சயமான மீன்பிடி தொழிலை செய்வதற்கு வசதி வாய்ப்புகள் கிடைக்கப்பெறாமையாகும். அதனாலேயே வருடத்தின் பெரும் பகுதியை அவர்கள் இங்கு கழிக்கிறார்கள்.

பணம் கொடுத்து குடிநீர் அருந்தும் ஓர் துப்பாக்கிய நிலையில் வாழும் இவர்கள் வலையில் சிக்கும் மீனின் அளவைக் கொண்டு தான் தாம் அன்று நீர் அருந்துவதா? இல்லையா? என்பதைக் கூட தீர்மானிக்கின்றனர். அந்தளவு அவர்களின் வறுமை நிலை தலைவிரித்தாடுகிறது.

'குறிப்பிட்ட 28 குடும்பங்களும் மலசலம் கழிப்பது அருகில் அமைந்திருக்கும் காட்டில் தான்' என்ற அவர்களின் ஆதங்கம் மனித பிறவியின் ஆரம்பத்திற்கே எம்மை இழுத்துச் செல்வதாக உணர்கிறேன். இப்படியான பிறவிகள் இன்றும் இருக்கின்றனரோ இம் மண்ணில்? முனம் வெந்துத் துடிக்கிறது.

'அ' என்பது உயிர் எழுத்துரூபவ் அதுவே தமிழின் முதலெழுத்து. இந்த 'அ' வைக் கூட எழுதத் தெரியாத பச்சிளம் பிஞ்சுகள் அங்கிருப்பதை கேட்கும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது. பிள்ளைகளின் கல்விக்கண்ணை திறப்பது யார்? என்பதறியாத பெற்றோர்ரூபவ் தாம் விரும்பியோ விரும்பாமலோ பிள்ளைகளையும் மீன்பிடி தொழிலுக்கு இசைவாக்கின்றனர். 10 சதவீத சிறுவர்களே கற்பதற்காக வேண்டி பள்ளிக்கூடம் செல்வதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

'கற்க ஆர்வம் தான்ரூபவ் எனினும் 5 கி.மீ தொலைவிலுள்ள பாடசாலைக்கு பஸ்ஸில் செல்ல பணம் இல்லை. மேலதிக வகுப்புகளுக்கு செல்லவும் முடியவில்லை. மின்சாரம் இன்மையால் இரவில் படிப்பதை எம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது' இது உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவனின் உள்ளக் குமுறல்கள். இப்படி ஓர் இரு மாணவர்கள் தம் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் முன்னேறிய சந்தர்ப்பங்களும் உண்டு. எனினும் இந்த நவீன யுகத்தில் இப்படி அல்லலுறும் சிறார்களின் எதிர்காலம் தான் என்ன?....

இது தொர்பில் பல அதிகாரிகளிடம் முறையிட்ட போதும் அவர்களுக்கு இது வரை எந்த வித சலுகைகளோரூபவ் நிவாரணங்களோ கிடைத்ததாக இல்லை. ஒவ்வொரு முறையும் இவர்களது கோரிக்கைகள் அதிகாரிகளிடத்தில் மழுங்கடிக்கப்படுகின்றன.

ஓவ்வொரு மாதமும் சரியாக 1000 ரூயஅp;பா வாடகை பணங்களை அறவிட குச்சவெளி பிரதேசசபை அதிகாரிகள் உரிய நேரத்திற்கே தம் வீட்டுக் கதவின் முன்னால் வந்து நிற்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாடகை பணங்களை அறவிடும் அரச அதிகாரிகள் இவர்களின் கஷ்டங்கள் குறித்து கவனம் செலுத்தாது இருப்பதன் காரணம் தான் என்ன? இவர்களும் வாழத்தானே வேண்டும்.

நாட்டின் அபிவிருத்தியைப்பற்றி கதைக்கும் மஹிந்த அரசாங்கம் ஏன் இன்னும் இவர்களின் கண்களைத் திறக்க முயற்சி எடுக்கவில்லை. மின் குமிழ்களைக் கண்ட கிராமங்களே இன்று அதி வேக நெடுஞ்சாலைகளையும்ரூபவ் தேசிய பாடசாலைகளையும் காண்கின்றன. எனினும் இவ்வாரான வறுமையில் வாடும் மக்கள்ரூபவ் எப்போது ஓர் மின்குமிழையாவது காண்பது?.......

சலப்பையாற்று மக்களுக்கு விடிவு கிடைக்கும் வரை..............! விழிப்புடன்................!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக