திங்கள், 23 ஜூலை, 2012

ஒலிம்பிக்ஸ் - 2012



ஒலிம்பிக்ஸ் வரலாறு

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் பல்வேறு விளையாட்டுக்களுக்காக நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர் Pierre de Coubertin |Pierre Frèdy, Baron de Coubertin என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது.
உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து 1896ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776ல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன.
கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833ல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
பனிக்கால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924ஆம் ஆண்டு முதல் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன.

ஒலிம்பிக்ஸ் 2012 லண்டன்

லண்டன் நகரில் இதற்கு முன் இரண்டு முறை(1908லும் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் 1948லும்) ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாவது முறையாக வருகிற 27ம் திகதி தொடங்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 12ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஓகஸ்ட் 29ம் திகதி முதல் செப்டம்பர் 9ம் திகதி வரை நடக்கும். இந்த போட்டிகளில் 204 நாடுகள் பங்கேற்க உள்ளன.

ஒலிம்பிக் தீபம்

மரியாதை திறமை நட்புணர்வு என்ற ஒலிம்பிக் கோட்பாட்டை குறிக்கும் வகையில் இந்த விளக்கு 3 பக்கங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* தங்க நிறத்தில் ஜொலிக்கும் இந்த விளக்கின் உயரம் 800 மி.மீற்றர் எடை 800 கிராம்.
* ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் 8000 பேர் இந்த விளக்கை ஏந்திச் செல்ல உள்ளதால் இதில் 8000 துளைகள் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
* இதனால் விளக்கின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடிவதுடன், சுடரின் வெப்பம் ஏந்திச் செல்பவரின் கைகளை பாதிக்காமல் குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.
* இங்கிலாந்தை சேர்ந்த பிரபல வடிவமைப்பாளர்கள் எட்வர்ட் பார்பர், ஜே. ஆஸ்ஜர்பி இணைந்து இதை உருவாக்கியுள்ளனர்.
* இங்கிலாந்து முழுவதும் 8,000 மைல் தூரத்துக்கு சுடர் ஓட்டம் நடைபெறுகிறது.
கிரெக்கத்தில் இருந்து மே 10ம் திகதி ஒலிம்பிக் ஜோதி பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. பிரிட்டனின் லேண்ட்ஸ் என்ட் பகுதியிலிருந்து  மே மாதம் 15ம் திகதி ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது.
கடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற பிரிட்டனைச் சேர்ந்த படகுப் போட்டி வீரர் பென் எய்ஸ்லி ஜோதி ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பிரிட்டன் அயர்லாந்தில் சுமார் 12 ஆயிரத்து 875 கி.மீ. தூரத்துக்கு ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது.
மொத்தம் 8 ஆயிரம் பேரது கைகளைக் ஒலிம்பிக் ஜோதி எட்ட இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் சராசரியாக 115 பேர் சுடரை ஏந்திச் சென்றனர். மொத்த பயண தூரம் 8000 கி.மீ. ஆகும். படகு கேபிள் கார் பறக்கும் பலூன் சைக்கிள் மோட்டார் பைக் குதிரை என பல்வேறு வாகனங்களில் ஒலிம்பிக் சுடர் பயணித்தது.
இறுதியாக யூலை 27ம் திகதி லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு ஜோதி சென்றடையும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக